புலி மேலேந்து எறங்கியாச்சு

சரியாக ஐந்து வருடமாகச் சவாரி செய்துகொண்டிருந்த புலியின் மீதிருந்து இன்றைக்குக் காலை வெற்றிகரமாக கீழே இறங்கிவிட்டேன் (என்று நம்புகிறேன்).
தமிழிலில் வலைப்பதிவு எழுதும் யாரும் செய்யாத ஒரு காரியத்தை நான் இவ்வளவு நாளாகத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததேன்.  2003 ஜூலையில் தொடங்கிய நாளிலிருந்து நேற்றுவரை என் வலைப்பதிவு என் வீட்டிலிருந்த சேவை வழங்கியால் இயங்கிக் கொண்டிருந்தது. நண்பர்களில் பலரும்  ப்ளாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் என்று இலவசச் சேவைகளைப் பயன்படுத்திவருகிறார்கள். மிகச் சிலர் (ஒரு சதவீதம்??) சொந்தமாக இணைய தளம் பதிவு செய்து [...]


பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும

புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில்
காலம் சஞ்சிகையின்
பேராசிரியன்
பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்

தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம்
சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)
இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ,
ஜூன் 9 2007 மாலை 5;.30

சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
மாலை 3 மணி தொடக்கம் வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி
- [...]


கணினியும் இசையும்

புதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக சுபதினத்தில் இதை ஆரம்பித்துவிடலாம் என்று உத்தேசம்.