பிரிட்னி ஸ்பியர்ஸ்-ம் ஜான் மெக்கெய்னும்
அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கு லாரென்ஸ் லெஸிக்
சான்ஃப்ரான்ஸிஸ்கோ பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாம் லாந்டோஸ் சமீபத்தில் காலமானார். இந்த இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் லாரென்ஸ் லெஸிக் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடந்து லெஸிஸ் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
லாரென்ஸ் லெஸிக் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பச் சட்டத்துறை பேராசிரியராக இருக்கிறார். Creative Commons என்ற அமைப்பைத் துவங்கியவர். தளையறு மென்கலன் கழகத்தின் இயக்குநர்களில் ஒருவர். தொழில்நுட்பம், காப்புரிமை, பகிர்தல், மென்கலன் போன்ற துறைகளில் செயற்பாட்டு விதங்களில் [...]
அமெரிக்கத் தேர்தல் புதிய கூட்டு வலைப்பதிவு
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான் எழுதிய ஒபாமா வெல்லட்டும் என்ற பதிவு தூண்டிய ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களின்பொழுது நண்பர்கள் பலருக்குத் தேர்தல் குறித்து எழுத ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்தது. இவற்றை ஒரே இடத்தில் பதிவு செய்ய வசதியாகக் கூட்டுப்பதிவு ஒன்றைத் துவங்கலாம் என்ற யோசனையில் இருந்தபொழுது சுந்தரமூர்த்தியும் இதே கருத்தைச் சொன்னர்.
ஒபாமா வெல்லட்டும்
இன்றைக்கு அமெரிக்காவின் மிக முக்கியமான முன்னோட்டத் தேர்தல்கள் நடக்கின்றன. இன்னும் ஐந்து மணி நேரத்திற்குள் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவந்துவிடும். (என்றுதான் நினைக்கிறேன்). இது கடைசிவரை இழுத்துக்கொண்டு போவது யாருக்கும் நல்லதில்லை, முக்கியமாக ஜனநாயகக் கட்சி.
கனேடிய அரசாங்கம் விடுதலைப்புலிகளைத் தடைசெய்திருக்கிறது
கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் தொடுக்கப்பட்ட பலமுனை அழுத்தங்களுக்கு இணக்கமாக கனடாவின் தற்பொழுதைய ஆளும் கன்ஸர்வேடிவ் கட்சி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தீவிரவாத இயக்கமாக அடையாளம் கண்டிருக்கிறது. இதன்மூலம் கனேடியர்கள் விடுதலைப்புலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபடுவதையும், நிதி திரட்டுவதையும் கிரிமினல் குற்றம் என அறிவித்திருக்கிறது.
இது கன்ஸர்வேடிவ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் செயலாக்கம்தான், இதை ஓரளவு தமிழர்கள் எதிர்பார்த்ததுதான் என்ற போதும் நான் அவதானித்த வகையில் கனேடிய ஈழத் தமிழர்களிடையே இவ்வளவு விரைவாக இது வந்தது அதிர்ச்சியளித்திருக்கிறது. [...]
நேஷனல் போஸ்ட்டில் இன்னொரு தலையங்கம்
புலிகளைத் தடைசெய்யச் சொல்லி கனடாவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான நேஷனல் போஸ்ட் பிரசூரித்துவரும் கட்டுரைகள், செய்தியறிக்கைகள், ஆய்வறிக்கைகள், தலையங்கம் குறித்து நேற்று எழுதியிருந்தேன்.
ஆச்சரியப்படத்தக்க வகையில் இன்றைக்கு போஸ்ட் இன்னொரு தலையங்கத்தை எழுதியிருக்கிறது. Tamil Congress shoots the messenger என்று தலைப்பிடப்பட்டு (அதிர்ச்சி அழைப்பு விடுக்கும் தலைப்பு) இன்றைக்கு மற்றொரு தலையங்கம் வந்திருக்கிறது.
இதைப் பற்றிய விரிவாக எழுத முயற்சிக்கிறேன்.
கனேடியத் தேர்தல் பிரச்சாரம் - முதல் வாரப் போக்கு
கனேடியப் பாராளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் குறித்த என்னுடைய முந்தைய பதிவு.
தேர்தல் பிரச்சாரம் துவங்குவதற்கு முன்னால் என்னுடைய கருத்துக்களை எழுத நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கவில்லை.
பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பு என்னுடைய கணிப்பில் பால் மார்ட்டினின் லிபரல் கட்சியும் (கலைக்கப்பட்ட அரசு) ஸ்டீவன் ஹார்ப்பரின் கன்ஸர்வேட்டிவ் கட்சியும் சமநிலையில் இருக்கின்றன. புதிய ஜனநாயகக் கட்சி தன் நிலையை முன்னேற்றிக் கொள்ளக்கூடும். க்யூபெக் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக பிரிவினைவாதக் கட்சியான பார்ட்டி க்யூபெக்வா [...]
கனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கையின்மை வாக்கெடுப்பில் கனேடிய லிபரல் அரசு தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனவரி 2006, 23 ஆம் தினத்தன்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கே எத்தனை பேருக்குக் கனேடிய அரசியல் நிலையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் என்று தெரியாத காரணத்தால் நான் இதைப்பற்றி எழுத முயற்சிக்கவில்லை. நேற்று பின்னூட்டத்தில் அலெக்ஸ் இது குறித்து என்னுடைய பார்வையை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்ததால்…
சென்ற பொதுத்தேர்தல் முடிவுகளைக் குறித்து நான் எழுதியிருந்த வலைப்பதிவை இங்கே [...]
கனடாவும் வெடிகுண்டு சாத்தியமும்
கடந்த சில நாட்களாக கனேடிய ஊடகங்களில் பெரும் பேச்சாக இருப்பது “அடுத்தது எங்கே குண்டு வெடிக்கும்”? இரண்டு நாட்களுக்கு முன்னர் என்னுடைய பதிவில் கருத்தெழுதிய கறுப்பியும் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார். அது குறித்த என் எண்ணங்களை விரிவாக எழுத வேண்டியிருந்ததால் உடனடியாக பதிலெழுதுவதைத் தவிர்த்தேன்.
கேள்வி மிகவும் பரபரப்பாகக் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அலுவலில் சக நண்பர்கள் கேட்கிறார்கள், அயலில் வசிப்பவர்கள் கேட்கிறார்கள். ரயில், பேரங்காடி, பூங்கா, மைதானம், ஏரிக்கரை என்று எல்லா [...]
உன் உயிரும் என் உயிரும்
இன்றைக்கு எல்லா நாளிதழ்களிலும் லண்டன் குண்டுவெடிப்பு பற்றிதான் தலைப்புச் செய்திகள். தவறேதுமில்லை. ஆனால் பத்திரிக்கைகள் ஒரேயடியாகத்தான் அழுகின்றன. உதாரணமாக கனடாவின் முக்கிய நாளேடுகளில் ஒன்றான The National Post இன்றைக்கு தன் முதல் பக்கத்தை கறுப்பு மையால் நிரப்பியிருக்கிறது. வழமையாக வரும் விளம்பரங்கள், உள்ளடக்க முன்னோட்டங்கள் எதுவுமில்லை. கூடவே செத்துப்போனவர்களைப் பற்றிய தகவலோ வருத்தமோ விடுத்து டோனி பிளேர் விடுக்கும் அறைகூவல் எச்சரிக்கை முன்னிலைப்படுத்தப்படுகிறது.
சில உயிர்கள் மற்றவற்றைவிட முக்கியமானவை [...]
