ஒபாமாவுக்கு வாழ்த்துகள்

முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.
என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் அமெரிக்கா [...]


அமெரிக்கர்களும் வரியும்

வரியை மக்களுக்கு எதிரான விஷயமாகப் பார்க்கும் விபரீதம் அமெரிக்காவில் முற்றிப்போய்க் கிடக்கிறது. வரி விதித்தால் நாட்டுக்குத் தீமை என்பதுபோல  எல்லோரும் அசட்டுத்தனமாக அரட்டுவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.  மீண்டும் மீண்டும் சுவரில் முட்டிக்கொள்வதைப் போல ஸ்காண்டிநேவிய நாடுகள், பிரான்ஸ்சு, பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய முதலாளி நாடுகள், இன்னும் ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலும் உயர் சதவீத வரி இருக்கிறது. இவையெல்லாவற்றையும்விட அமெரிக்கா பெரிய பொருளாதாரமாக இருக்கலாம், ஆனால் மேற்சொன்ன நாடுகளில் பலவற்றின் பொருளாதாரம் அமெரிக்காவைவிட [...]


நகைச்சுவை, அவலம், கொடூரம்

ஐந்து வருடங்களாகின்றன - அமெரிக்கா ஈராக்கின்மீது போர்தொடுத்து. கொண்டாட டிக் செய்னி பாக்தாத் சென்றிருக்கிறார்.
நகைச்சுவை
“If you look back on those five years it has been a difficult, challenging but nonetheless successful endeavour … and it has been well worth the effort,” Cheney, an architect of the invasion, said after meeting Iraqi leaders.
அவலம்
U.S. Vice President Dick Cheney on Monday [...]


அமெரிக்கப் பாராளுமன்றத்துக்கு லாரென்ஸ் லெஸிக்

சான்ஃப்ரான்ஸிஸ்கோ பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டாம் லாந்டோஸ் சமீபத்தில் காலமானார். இந்த இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் லாரென்ஸ் லெஸிக் போட்டியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி நடந்து லெஸிஸ் அமெரிக்கப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
லாரென்ஸ் லெஸிக் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பச் சட்டத்துறை பேராசிரியராக இருக்கிறார். Creative Commons என்ற அமைப்பைத் துவங்கியவர். தளையறு மென்கலன் கழகத்தின் இயக்குநர்களில் ஒருவர். தொழில்நுட்பம், காப்புரிமை, பகிர்தல், மென்கலன் போன்ற துறைகளில் செயற்பாட்டு விதங்களில் [...]


அமெரிக்கத் தேர்தல் புதிய கூட்டு வலைப்பதிவு

எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யவும் விவாதிக்கவும் ஒரு கூட்டு வலைப்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நான் எழுதிய ஒபாமா வெல்லட்டும் என்ற பதிவு தூண்டிய ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களின்பொழுது நண்பர்கள் பலருக்குத் தேர்தல் குறித்து எழுத ஆர்வம் இருப்பதாகத் தெரியவந்தது. இவற்றை ஒரே இடத்தில் பதிவு செய்ய வசதியாகக் கூட்டுப்பதிவு ஒன்றைத் துவங்கலாம் என்ற யோசனையில் இருந்தபொழுது சுந்தரமூர்த்தியும் இதே கருத்தைச் சொன்னர்.


ஒபாமா வெல்லட்டும்

இன்றைக்கு அமெரிக்காவின் மிக முக்கியமான முன்னோட்டத் தேர்தல்கள் நடக்கின்றன. இன்னும் ஐந்து மணி நேரத்திற்குள் ஜனநாயக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்று தெரியவந்துவிடும். (என்றுதான் நினைக்கிறேன்). இது கடைசிவரை இழுத்துக்கொண்டு போவது யாருக்கும் நல்லதில்லை, முக்கியமாக ஜனநாயகக் கட்சி.


அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்

உலகமயமாக்கல் முழுப்பயனையும் தரத் தொடங்கிவிட்டது. இதற்குச் சரியான உதாரணம் சென்ற வாரத்தில் டாடா (மோட்டர், ஓட்டல்) சம்பந்தமாக வெளியாகியிருக்கும் பல செய்திகள். முதலாவதாக அமெரிக்காவின் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு ஓட்டல் குழுவுடன் கைகுலுக்க முன்வந்த டாடா ஹோட்டல் குழுமத்தின் முகத்தில் கரிபூச முயற்சிக்கப்பட்டது. ஓ.எ ஹோட்டல் மற்றும் சொகுசுக் கப்பல்கள் குழுமத்தின் தலைவர் பால் வைய்ட் “எங்கள் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சொகுசுத் துறையில் பல ஆண்டுகளாகப் பெயர் பெற்றது; டாடா [...]