நிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு
நடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
சுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோனர்கள் (கிட்டத்தட்ட $3,270). இதை வைத்துக்கொண்டு ஒன்பது பசுமாடுகள் வாங்கி இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்குத் தானமாக வழங்கப்படவிருக்கிறது.
தவறு செய்துவிட்டார்கள். இதே நீச்சலுடையை இந்தியாவில் ஏலம் விட்டிருந்தால் கட்டாயம் இதைவிட அதிக பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு இன்னும் நிறைய பசுமாடுகளை வாங்கி, இன்னும் நிறைய குடும்பங்களைக் காப்பாறியிருக்கலாம். (அந்நியச் [...]
அனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்
வழக்கமாக நமது திரைப்படங்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், ஆறு பரிமாணத்தில் இது கொஞ்சம் ஓவராகவே தோன்றுகிறது.
மொஹஞ்சதாரோவைப் பற்றிய இந்தப் படத்தில் வழக்கமான கட்புல, செவிப்புல உணர்வுகளுடன் கூடவே நாசி, தொடுகை உணர்ச்சிகளுக்கும் உண்டாம். “People can not only see but feel, smell and touch all the images and visuals in this film.”
smell, touch புரிகிறது. பீலிங்க்ஸ்தான் வழக்கமாக இந்தியப்படத்தில் எப்பொழுதும் உண்டே, இங்கே என்ன விசேஷம்?
தகவல் [...]
ஸ்ரீசந்த் - அபத்தத்தின் உச்சம்
இந்த அபத்தத்திற்கு யாராவது முடிவு கட்டினால் தேவலாம்.
“I love the spotlight. The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth. He even refers to himself in the third person. “Sreesanth’s way is to be aggressive. Sreesanth will always remain Sreesanth.”
Pregnancy Test : Twin Pack
ஆன்லைனில் Pregnancy Test - Twin Pack என்று விற்கிறார்களே, இதைக் கொண்டு இரட்டைக் குழந்தை இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?
இரண்டு சோதனைகளிலுமே பாஸிட்டிவ் வர வேண்டுமா, இல்லை ஒன்றில் வந்தால் போதுமா?
அஸ்தி டெட்டி பேர்
அபத்தத் தயாரிப்புகள் வரிசையில் இன்னொன்று. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த மாதம் ஒரு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் நினைவாக அவர்களது பூதவுடலின் ஒரு பாகத்தை (நகம், தலைமயிர், எரியூட்டப்பட்ட சாம்பல், இத்யாதி) உள்ளடக்கி நிரந்தரமாக நெஞ்சோடு கட்டிக்கொள்ள கரடி (அல்லது குதிரை, பூனை) பொம்மை (Teddy Bear), தலையணை போன்றவற்றைத் தயாரிப்பதற்கு இவர்களுக்கு உரிமையளிக்கப்பட்டிருக்கிறது. செத்துப்போனவர்களை நிழற்படமாக்கி சட்டத்தில் அடைத்து தொங்கவிட்டால் மாத்திரம்போதாது நிரந்தமாகத் தலைக்கடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு இப்பொழுது [...]
துரித ஸ்கலிதத்திற்கு துருக்கியர் களிம்பு
துரித ஸ்கலிதம் நம்முரில் நிரந்தர வியாதி. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இன்றுவரை துரித ஸ்கலிதத்திற்கு நிவாரண விளம்பரம் இல்லாமல் துக்ளக் பத்திரிக்கை வெளிவந்ததே இல்லை. சோ கருணாநிதியைத் திட்டாமல் ஒரு இதழையாவது வெளியிடுவார். ஆனால் சொப்பன ஸ்கலிதம், நரம்புத் தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்ற ஆண்மை குறைவு சமாச்சாரங்களுக்கு ஒரு பக்கத் தீர்வில்லாமல் துக்ளக் ஒரு இதழ்கூட [...]
பசு மூத்திரம் - பிஜேபி பிராண்ட்
இன்றைக்குப் படித்த இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வயிற்றைக் கலக்குகிறது. பிஜேபி மாநாட்டில் வாஜ்பாயியின் முகத்தைவிட பசு மாட்டின் மூத்திரம் பரபரபாக விற்பனையாகிறதாம்.
நீரிழிவு தொடங்கி நீள்கூந்தல் வரை பசுக்கழிவுகள் உதவுகின்றனவாம்.
Ohmi God! Oh my God, Oh..Oh..
நெத்திலயா எளுதி ஒட்டியிருக்கு
வாத்தியார் அடிக்கடி பள்ளிக்கூடத்தில் சொல்லும் வாசகம் இது. ஆனால், எழுதி ஒட்டிக் கொள்ளச் சொல்லி இப்பொழுது ஒருவர் நெற்றியை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஈபே வழியாக தன்னுடைய நெற்றியில் விளம்பரங்களை எழுதிக்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை அதிகபட்சமாக ஒரு மாத்திற்கு $322 டாலர்கள் வாடகைக்குத் தர முன்வந்திருக்கிறார்களாம். பலான விளம்பரங்கள், வெறுப்பைத் தூண்டுபவை இவற்றைத்தவிர வேறு நேர்மையான எல்லா சமாச்சாரங்களுக்கும் என் நெற்றியில் இடமுண்டு என்கிறார்.
பிழைப்பதற்கு இப்படியரு எளிதான வழி. [...]
