ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

சற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.
ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.
என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் [...]


அஞ்சலி: ராபர்ட் ஹன்டர் (1941-2005)

நான் டொராண்டோவில் குடியேறிய நாட்களில் அதிகாலை செய்திகளிடையே சிட்டிடிவி என்ற தொலைக்காட்சியில் ஒருவர் குடுமியுடனும், படுக்கையறை அங்கியுடனும் வந்து அன்றைய செய்தித்தாட்களிலிருந்து தான் வெட்டிய செய்திகளைப் பற்றிய விமர்சனங்களைச் சொல்லுவார். Papercuts என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வருபவரின் பெயர் பாப் (ராபர்ட்) ஹன்டர். சில சமயங்களில் அவருடைய விமர்சனங்கள் எரிச்சலூட்டும், ஆனால் பொதுவில் அவருடைய ஒற்றைவரி எண்ணங்கள் பொருத்தமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும். படுக்கையிலிருந்து உடைகூட மாற்றாமல் வருபவர் என்பதைத் தவிர பெரிதும் அவரைப்பற்றி [...]