• Posts Tagged ‘ஜாஸ்’

    தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – நான்கு

    by  • August 28, 2005 • இசை • 3 Comments

    ஜாஸின் முக்கியமான இலக்கணங்களில் ஒன்று (ஜாஸிற்கு இலக்கணம் உண்டா?) ஸிவிங் என்று சொல்லப்படும் ஊசல். இதை வரையறுப்பது மிகவும் கடினம். (நோட்ஸ் எல்லாம் எழுதி இன்னும் கொஞ்சம் குழப்ப முடியும்). முதல் விஷயம் இந்த ஊசலை அதிகமாகக் கையாண்டவை பெருங்குழுக்கள் (Big Band Jazz). பல வாத்தியங்கள் இருக்கும் பொழுது ஒவ்வொருவரும் மானாவாரியாக சுயகற்பனையோடு (independent improvisation) என்று சொல்லிக் கொண்டு தனித்தனிப் போக்கில் போனால் இசையில் இரைச்சல்தான் மிஞ்சக் கூடும். இதைத் தவிர்க்க பெரும்பாலும் வாத்தியங்கள் [...]

    Read more →

    தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – மூன்று

    by  • August 21, 2005 • இசை • 10 Comments

    ஜாஸின் ஆதாரம் improvisation என்று சொல்லப்படும் நொடியில் மாறும் திறம்தான். தமிழ்த் திரையிசையில் (பொதுவாகத் திரையிசையில்) இசைக்கப்படுவது தொகுக்கப்பட்ட இசை (Composed music); அதாவது இசையமைப்பாளர் ஏற்கனவே தீர்மானித்து அதற்கேற்ற வகையில் பாடலாசிரியர் பாட்டெழுதி துல்லியமாகப் பிரிக்கப்பட்டு இசைக்கலைஞர்களிடம் சொல்லப்பட்டு இசைக்கப்படுவது. இந்த இடத்தில் ஜாஸின் அடிப்படை இதயமான சுதந்திர மாற்றங்களுக்குச் சாத்தியமில்லாமல் போவதால் திரையுலகில் ஜாஸ் என்பது ஒரு சொல்முரண்தானா? இதற்குப் பதில் ஒரு வகையில் ஆம். ஆனால் கொஞ்சம் பொறுமையாக யோசித்தால் இல்லை, திரையிசையில் [...]

    Read more →

    தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – இரண்டு

    by  • August 14, 2005 • இசை • 13 Comments

    ஜாஸ் இசையில் அதிகம் பயன்படும் வாத்தியங்களாகப் பின்வருனவற்றைச் சொல்லலாம்; ட்ரம்பெட், சாக்ஸஃபோன், பியானோ, கிளாரினெட், கிடார் (அக்குஸ்டிக் கிடார், ஸ்லைட் கிடார், மாண்டலின்), பாஸ் கிடார் (டபுள் பாஸ் கிடார்), ட்ரம்ஸ், த்ராம்போன். நவீன ஜாஸ் இசையில் பயன்படுத்தப்படாத இசைக்கருவிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஆரம்ப ஜாஸ் வடிவத்தில் இந்தப்பட்டியலில் இருப்பவைதான் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டன. உதாரணமாக வயலின் மிகப் பிரபலமான இசைக்கருவியாக இருந்தாலும் ஜாஸில் இதற்கு அதிக இடமிருப்பதில்லை.

    Read more →

    தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – ஒன்று

    by  • August 7, 2005 • இசை • 5 Comments

    இருபதாம் நூற்றாண்டின் இசைவடிவம் எது என்று கேட்டால் உலக அளவில் தயங்காமல் கிடைக்கும் முதல் பதில் ஜாஸ் எனபதாகத்தான் இருக்கும். ஆப்பிரிக்க அமெரிக்க அடிமைக் குடியினரிடம் தோன்றிய ஜாஸ் வடிவம், இப்பொழுது லாட்டின் ஜாஸ், அவான் ஜாஸ், ஆஸிட் ஜாஸ், இந்தோ ஜாஸ் என்று பலவாகக் கிளைத்துப் புகழ் பெற்றிருக்கிறது. ஆரம்பகாலங்கள் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் பிணங்களைத் தூக்கிச் சொல்லும் பொழுது வாசிக்கப்பட்ட இசை ஜாஸ் என்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கும் முன்னால் ஆப்பிரிக்க பூர்வ [...]

    Read more →