எந்த மின்விளக்கை வாங்கலாம்?

நான் Solid State Lighting,  (LED, Organic LED), Lighting, Photometry துறைகளில் ஆராய்ச்சியாளன். எனவே என் நண்பர்கள் பலரும் என்னிடம் என்ன மாதிரியான மின்சார விளக்குகளை வீடுகளுக்கு வாங்கலாம் என்று கேட்கிறார்கள்.  இன்று நண்பர் இலவசக் கொத்தனார்  இந்தச் சுட்டியைக் காட்டி இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்றார். எனவே, அந்த உந்துதலில்:

முதலில் தன்னிலை விளக்கங்கள் சில: 1. நான் பன்னாட்டு   ஒளியூட்டல் கழகத்திற்கான ( International Commission on Illumination, CIE)  கனேடிய தேசியக் குழுவின் தலைவராகச் சென்ற வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு  பொறுப்பு வகிக்கிறேன். ஒளியூட்டல் துறை பல்வேறு நுட்பங்களை உள்ளடக்கியது ( Incandescent, Fluorescent, LED...) எனவே பொதுவில் பல்வேறு தொழில்நுட்பங்களின் சாதக பாதகங்களைப் பொதுவில் விவாதிக்கவும் ஒரு நுட்பத்தைத் தாழ்த்திச் சொல்லவும் தயக்கம்.  குறிப்பாக தற்சமயம் மிகவும் சூடாக விவாதிக்கப்படும் கருத்துகள் சில :  1. மின்னிழை பல்புகளைத் (Incandescent Bulbs)  தடைசெய்ய வேண்டுமா? 2. குறு-மின்னொளிர் விளக்குகள் (Compact Fluorescent Lamps) ஆபத்தானவையா? 3-ஒளியுமிழ் இருவாய் (Light Emitting Diode, LED) விளக்குகளில் அதீத ஊதா/நீலக் கதிர்களால் நீண்டகால ஆபத்துகள் உண்டா? இவற்றையெல்லாம் குறித்த விவாதிக்க கொஞ்சம் ஆழமாக அறிவியலில் இறங்கவேண்டும். அதற்கு இப்பொழுது நேரமில்லை.  என்வே, சுருக்கமாக சில (இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துகள்);

0. கட்டாயம் மின்னிழை விளக்குகளைத் தவிருங்கள்.  அவை பயன்படுத்தும் மின்சக்தியில் 5-8% மட்டுமே ஒளியாக வெளிவருகிறது. 90%-க்குமேல் விரயம்.

1. கோவை செல்வன் எழுதியிருப்பவை பெரும்பாலும் சரி.

2. சி.எஃப்.எல் உடைந்தால் அதிலிருந்து சிந்தும் பாதரசத்தை எப்படிச் சுத்தம் செய்வது என்பது குறித்த எங்க ஊர் விளக்கம் இங்கே.

3. பொதுவாக சில நொடிகளே பயன்படுத்தப்படும் இடங்களில் (கராஜ், இல்லக்கழிவறை) CFL ஆல் பெரிதும் சக்தி சேமிப்பு கிடைக்காது.

4.   CFL பொதுவில் Dimmer களுடன் பயன்படுத்த ஏற்றனவல்ல.

5. 80%-க்கும் மேலான CFL களில் அவற்றின் ஆயுள் மிகைப்படுத்தி விளம்பரிக்கப்படுகின்றது. Philips, Osram, GE போன்ற முதல்தர உற்பத்தியாளர்களின் தயாரிப்புகள் பொதுவில் நம்பகமானவை.

6. CFL விரைவாகக் காலாவதியாகிவரும் ஒரு நுட்பம், இவற்றுக்கு அரசாங்க மானியம் தருவது எந்த வகையிலும் நியாமானதல்ல.

இனி, LED   குறித்த சில தகவல்கள்:

1. LED வருங்காலத்திற்கான நுட்பம். 2030 வாக்கில் பொதுப்பயனில் LED-கள்தான் காணப்படும் என அமெரிக்க சத்தி அமைச்சகம் கணிக்கிறது.  இதன்மூலம் ஒளியூட்டலின் சக்தி தேவையை 70% குறைக்கலாம். (சூடேற்றத் தடுப்பு, கார்பன் சேமிப்பு, இத்யாதி...)

(அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கட்டிடங்களில் குளிரூட்டல்/சூடாக்கல் தவிர்த்த இரண்டாவது பெரிய சக்திப்பயன்பாடு ஒளியூட்டலுக்குத்தான். இது பலருக்கும் தெரியாது.  கட்டிடங்களில் சாராசரியாக 30%  சக்தி விளக்குகளுக்காகவே செலவழிக்கப்படுகிறது.)

cree_LED2. இந்த வருடத்தின் துவக்கத்தில் முதன்முறையாக என்னுடைய தனிக்கணிப்பின்படி LED-கள் பொருளாதார ரீதியாக முதன்மைத் தீர்வாக முன்னேறிவிட்டன.  இதற்கு கடந்த ஐந்து வருடங்களாக பல்கலைக்கழகங்களில் நடந்துவரும் உன்னத ஆய்வுகளும், CREE, Philips, Osram, Nichia, Seoul Semi போன்ற முதன்மை நிறுவனங்களின் கடுமையான போட்டியும் காரணம்.  முதன்முறையாக $10-க்குள்ளாக LED  இந்தவருடம் சந்தைக்கு வந்தது. இனியும் இவை விலை அதிகம் என்று சொல்ல வாய்ப்பில்லை.

3. LED,  CFL பல்புகளைப் போல பத்து மடங்கு ஆயுள் கொண்டவை.  முதன்முறையாக ஒரு நிறுவனம் CREE தன் தயாரிப்புக்கு 10 வருட உத்தரவாதம் தருகிறது. (சென்ற பத்தியில் இருக்கும் $10 பல்பு).  மின்விளக்குகளின் வரலாற்றில் 10 வருட உத்தரவாதம் இதுவே முதன்முறை.

4. சக்தி சேமிப்பு.  சூழியல் காரணிகள் இவற்றைக் கணக்கில் கொண்டால் இப்பொழுது தயக்கமில்லாமல் இவற்றை வாங்கலாம்.

5. இருந்தும், ஆரம்பச் செலவு இவற்றில் அதிகம் நல்ல CFL பல்பை $2க்குள் வாங்கலாம். எனவே LED அதைவிட ஐந்து மடங்கு விலை அதிகம், ஆனால், சக்தி சேமிப்பு, ஆயுள் இவற்றைக் கணக்கில் கொண்டால் ஆயுட்கால செலவு (Total Cost of Ownership) குறைவானது.

6.  மட்டமான தயாரிப்புகள் எல்லாத் துறைகளிலும் உண்டு.  இதில் LED விலக்கல்ல. என்னுடைய ஆய்வகத்தில் பரவலாகக் கிடைக்கும்  LED தயாரிப்புகளைப் பாரபட்சமில்லாமல் சோதித்து அதன் முடிவுகளைப் பலரும் அறியப் பொதுவில் வெளியிட்டு வருகிறோம். கனேடிய அராசங்க மானியம் பெற்ற இந்தத் திட்டத்தில் எந்த விதமான பரிந்துரைகளும் கிடையாது. இதில் தயாரிப்பாளர் விளம்பரிப்பது என்ன உண்மையில் அதன் தரம் என்ன என்பதுதான் வெளியிடப்படுகிறது. These reports are technical.  No simple recommendations are made.

7.  LED பிற கட்டுப்படுத்திகளுடன் மிக அற்புதமாகச் செயல்படும். Dimmer, Occupancy Sensor, Timer, Colour Temperature Control போன்றவை மிக அற்புதமாக இயங்கும்.  எனவே இது வருங்காலத்திற்கான நுட்பம். இதில் செலவிடப்படும் உங்கள் காசு விணாகாது.

8.  LED-களில் இருக்கும் அதிகமான நீல/ஊதா நிறங்களால் நெடுங்காலப் பாதிப்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்துவருகிறது. ஆனால் இது (சராசரி பயன்பாடுகளில்) தேவையற்ற ஒன்று என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. எனினும், இன்னும் மேலதிகமான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.

9. சூழியல் நுட்பத்தில் Cradle-to-grave Environmental Footprint என்று ஒரு கணக்கீடு உண்டு. ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஆகும் சக்தி மற்றும் பயன்பாட்டுச் சக்திச்செலவு  மாத்திரமல்ல, துணைப்பொருட்களின் உற்பத்தி, ஆலைகளிலிருந்து பயனர்களைச் சென்றடைய ஆகும் சக்தி, இறுதியாகக் கழிவுப் பொருட்களின் மறுபயன்பாடு அல்லது விரயம் போன்ற அனைத்தும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்தக் கணக்கீட்டில் LED நுட்பம் சூழியல் ரீதியாக மிகவும் நல்ல தெரிவு என்று பல்வேறு ஆய்வுகள் முடிவுகூறுகின்றன.

இது குறித்து கேள்விகள் இருந்தால் பதிலளிக்க முயல்கிறேன். ஆனால் வரும் சில நாட்களில் நான் என்னுடைய இருப்பிடத்தை மாற்றுகிறேன். எனவே, பதில்களை உடனுக்குடன் எழுத முடியாது.  நீங்கள் மின்னஞ்சல் இணைத்திருந்தால் (பொதுவில் தெரியாது) அல்லது ட்விட்டர் பெயர் சொன்னால்.  நான் பதிலிட்டவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

செல்பேசிவழியே நீர் இறைத்தல்

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.

புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, பின்னர் ரேடியோ அலைவரிசையை முயன்று இறுதியாக செல்பேசிகளின் வழியே குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தொலைவிலிருந்தபடி பம்ப் செட்களை இயக்க வழிகண்டிருக்கிறார். இந்த அயராத பயணத்தில் அவரது மனைவி அவருக்குப் பெருந்துணையாகத் தொடர்ந்து வந்திருக்கிறார்.  நானோ கணேஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கண்டுபிடிப்பு வளரும் சந்தைகளுக்கான செல்பேசி பயன்பாடுகளுக்கான முதல் பரிசை நோக்கியாவிடமிருந்து பெற்றிருக்கிறது. Continue reading "செல்பேசிவழியே நீர் இறைத்தல்"

மாறிவரும் குழந்தைகள் உலகம்

சமீபத்தில் படிக்க நேர்ந்த இந்த தெகல்கா கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. நம் சமூகத்தில் நாம் எதையும் வெளிப்படையாகப் பேசி விவாதிப்பதில்லை. எனவே இதை எப்படிக் கையாளப் போகிறோம் எனப் பிரமிப்பாக இருக்கிறது.

Sex, Lies & Homework - Tehelka.

Mini’s parents still don’t know how to deal with what they found out. Mini is a dainty, extremely pretty 14-year-old. When she was 12, her first boyfriend and she were both eager to claim BTDT (Been There, Done That) about oral sex. One evening at home alone, they tried it out, anticipating a definite move up the social ladder. Sure enough, the next day at school her friends congratulated her even while making faces at the slight grossness in ‘going down’ on a boy.

Unfortunately for Mini, her parents found out through the grapevine. The horrified couple sent her to a psychologist to find out ‘what was wrong with her’. She’s been in therapy for two years. Mini has no social life, no cellphone and a crushing weekly reminder in the psychologist’s office of that impulsive evening. Today, while Mini opens up with some encouragement she remains silent in the presence of most adults, particularly her parents. The shaming she received from her parents and the now long-lost friends two years ago has left its mark. It does not help that her erstwhile boyfriend did not even receive a rap on the knuckles from his parents.

எனக்கு இந்தக் கட்டுரையில் வரும் வயதில் இரு மகன்கள் இருக்கிறார்கள்.  இயன்றைவரை வெளிப்படையாக அவர்களுடன் விவாதிக்கிறேன். நேரடியாக அவர்கள் கண்களைப் பார்த்துச் சொல்லும் பதில்கள் நாளதுவரை அவர்களுக்கு என்ன தெரியும் என்பது எனக்குத் தெரியும் என்றே நம்பவைக்கிறது.  குழந்தைகளுக்கு மறைத்து வைக்க ஒன்றுமில்லை என்பதே என் எண்ணம். விஷயத்தை அவர்களுக்கு எப்படித் தருகிறோம் என்பதுதான் முக்கியம்.

மறுபுறத்தில் இங்கிருக்கும் என் நட்புக் குடும்பங்களில் பல இந்த விஷயத்தை முறையாகக் கையாளவில்லை என்றே தோன்றுகிறது. மேலை நாடுகளில் வளரும் இரண்டாம் தலைமுறை பல விஷயங்களில் அவர்களது பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருக்கிறது.  இந்தத் தெகல்கா கட்டுரையை இங்கிருக்கும் சக பெற்றோர் வாசிக்க நேர்ந்தால் அதிர்ச்சியடைவார்கள் என்பது நிச்சயம். அவர்களுக்கு இந்தியாவைப் பற்றி வேறுவிதமான பிம்பம் இருக்கிறது. சிலர் தங்கள் பெண்களுக்கு இந்தியாவில் வளர்ந்த கணவனும், பையன்களுக்கு அங்கிருந்து குனிந்த தலையுடன் தரையைப் பார்த்து நடக்கும் பெண்ணும் வேண்டுமென நினைக்கிறார்கள்.தமிழ்மணம் ஐந்தாண்டு நிறைவையொட்டி

முதலில் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். வியப்பாக இருக்கிறது திரும்பிப் பார்ப்பதற்குள் ஐந்து ஆண்டுகளாகியிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் காசி தமிழ்மணத்தின் ஐந்தாண்டு நிறைவிற்காக என்று சில கேள்விகளை அனுப்பி பதிலளிக்கச் சொல்லியிருந்தார். கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் வேலைப்பளுவின் காரணமாகப் பாதியில் நின்றுபோயிற்று. காலம் கடந்தேனும் பதில்களை முடித்து, சில கருத்துகளைச் சொல்லிவைக்கிறேன். Continue reading "தமிழ்மணம் ஐந்தாண்டு நிறைவையொட்டி"

பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்

spring_clean
இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது.

அருள்செல்வன் சொல்வதுபோல பள்ளிச் சிறுவர்களை துப்புரவில் ஈடுபடுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சூழலையும் துப்புரவாக வைத்துக் கொள்ள குழந்தைகளுகுக்குக் கற்றுக் கொடுப்பது எந்தவகையில் தவறாகிறது என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் படித்த ஒரத்தநாடு ஊராட்சி பள்ளிக் கூடங்கள் தொடங்கி கும்பகோணத்தில் படித்த சிறியமலர் மேநிலைப் பள்ளி, நகர மேநிலைப் பள்ளி போன்ற எல்லா பள்ளிக்கூடங்களிலும் துப்புரவு வேலைகளைச் செய்திருக்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கும்பொழுது (நான் பள்ளியில் மதிய உணவு சாப்பிடும் மாணவன் இல்லை என்றாலும்கூட) வார்டு 2 பள்ளிக்கூடத்தில் மதிய உணவு முடிந்தபிறகு சிதறிக்கிடக்கும் சோளரவா, வெங்காயத் துண்டுகள் என்று பெருக்கி சுத்தம் செய்திருக்கிறேன். வாராவாரம் பள்ளியின் முன்னால் இருக்கும் சிறிய தோட்டத்தைப் பெருக்கி அங்கேயிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்; இதற்காக கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லணைக்கால்வாயின் மதகிலிருந்து வாளியில் நீர் எடுத்து வருவோம். (தோட்டம் என்றால் ஒன்றும் அற்புதமான பூந்தோட்டமெல்லாம் கிடையாது; அந்த உவர் மண்ணில் எழுத்துக்கீரை என்று சொல்லப்படும் ஒரே தாவரம்தான் வளரும், அதை வைத்துக்கொண்டு விதவிதமான பாத்திகள் கட்டி, பள்ளியின் பெயரை எழுதி... அதுதான் தோட்டம்). Continue reading "பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்"

ஒபாமாவுக்கு வாழ்த்துகள்

முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.

என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் அமெரிக்கா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது).  இருந்தபோதிலும் பணக்காரனின் வயலில் பாயும் வெள்ளம் கசிந்துதான் ஏழையின் காணிக்கு வரவேண்டும் என்ற சிந்தனை அதன் மிகப் பெரும் கரும்புள்ளிகளில் ஒன்று. மற்றது சமீபகாலமாக வளர்ந்துவரும் சமய வெறி.  இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இல்லாவிட்டால் கூட குறைந்தபட்சம் காற்புள்ளியாவது ஒபாமாவால் இடமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  கடந்த எட்டு வருடங்களில் வறட்டு முரட்டுத்தனத்தை மாத்திரமே உலக நாடுகளிடம் காட்டிய அமெரிக்கா தனது மூர்க்கத்தைக் களைந்தெரிந்து ஒரு உன்னத முதன்மை நாடாக உலக நாடுகளிடையே தன் பெயரை மீட்டெடுக்க வேண்டும்.

ஒபாமா அப்பழுக்கற்றவர் என்ற எண்ணம் எனக்கு ஒருப்போதும் இருந்ததில்லை. ஆனால் போட்டியிட்ட எல்லோரைக் காட்டிலும் மிகக் குறைவான எதிரெண்ணங்களைக் கொண்டவர் என்பதே அவரிடம் நான் கண்ட (காணும்) முக்கிய தகுதி.  இன்றைய அமெரிக்க மற்றும் உலக நடப்பில் ஒபாமாவின் துவக்கம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக தேர்தலில் காட்டிய சில நல்ல பண்புகளைத் தொடர்ந்தாலே போதும் பல எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம் என்று நம்புகிறேன். குறிப்பாக அனைவரையும் அரவணைத்துச் செல்வது.

செனட்டர் மெக்கெய்ன் இந்தத் தோல்வியால் ஒன்றும் சிதைந்துப் போகப் போவதில்லை. அவருடைய நீண்ட நாளைய சேவை அமெரிக்கர்களால் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்று நம்புகிறேன். இன்னும் சில காலமாவது செனட்டாராகத் தொடரவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

சிக்கலான துவக்கம். தடைகளைக் களைந்தெரிந்து வெற்றிகளைச் சேர்க்க ஒபாமாவுக்கு இனிய வாழ்த்துகள்.

(இதை எழுதி முடிக்கும் நேரத்தில் 54 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக ஒரு டெமாக்ரடிக் வேட்பாளர் (ஒபாமா) வர்ஜீனியாவில் வெற்றி பெறுவார் என்ற அறிவிப்பு வருகிறது. இன்னும் முழு முடிவுகள் வரவில்லை எனினும் ... சரியாக 11:00 மணி, சி.என்.என் ஒபாமாவின் வெற்றியை உறுதியான அறிவிப்பாக்கியிருக்கிறது.)

தீபாவளி

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பண்டிகைகளும் தினங்களும் புதிய அடையாளங்களைப் பெற்றிருக்கின்றன. தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வரும் முக்கிய விஷயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்.  சிறுவயதில் காலையில் எழுந்தவுடன் சகோதர்கள் மூவருக்கும் அப்பா வற்றல் மிளகாய், மஞ்சள் பொடி, பச்சரி போட்டு காய்ச்சிய எண்ணையை அழுந்தத் தேய்த்துவிடுவார். கடைக்குட்டி நான்தான் முதல் குளியல்.  விறகு அடுப்பில் கொதிக்கும் சுடுநீரில் குளியல். எண்ணை போக அரப்புப் பொடி (சிகைக்காய் விலை அதிகம்). அரப்பு அதிகம் கண்ணில் எரியாமல் இருக்க, சட்டியில் போட்டு சற்று வறுத்து எடுப்பாள் அம்மா.  (பின்னாட்களில் அரப்புக்குப் பதிலாக புலிமார்க் சிகைக்காய் பொடி வந்தது). Continue reading "தீபாவளி"

சிரஞ்சீவி அரசியலுக்கு வரக் காரணம்

கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

அவர் என்னிடம் பேசுகையில், ...மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்....மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர் என்றார்.

கம்மம் மாவட்டத்தில் ஒரு ஊர்க்காவல் படை வீரர் எனக்காக தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சிரஞ்சீவியை முதல்வராக காண முடியவில்லையே என்று எழுதியிருந்தார். இது என்னை நெகிழ வைத்து விட்டது.

அதேபோல ஐடி வேலையில் இருந்து வந்த ஒரு தம்பதியினரும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர். இது எல்லாம் என்னை நிறைய சிந்திக்க வைத்துவிட்டது.

எனவே இனிமேலும் அரசியலுக்கு வராமல் இருக்கும் பிழையை செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தேன்.

ஒலிம்பிக்ஸ் - பிம்பங்களும் சிதைவும்

ஒலிம்பிஸ் துவக்க விழாவின் உலகெங்கும் ஒளிபரப்பட்ட அற்புதமான வாணவேடிக்கைக்காட்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் நுட்பத்துடன் உன்னதமாக்கப்பட்டவை என்று தெரியவந்திருக்கிறது.  இப்பொழுது எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. துவக்கவிழாவில் குட்டி தேவதையைப் போன்ற தோற்றத்துடன் நளினமான அசைவுகளுடன் பாடிய பெண் உண்மையிலேயே பின் நின்று வேறொரு பெண் பாட வெறும் வாயசைப்பைத் தந்திருக்கிறாள் என்று தெரியவந்திருக்கிறது.  காட்டப்படும் பிம்பம் அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடெங்கும் போட்டிகள் நடத்தி நல்ல குரல் வளம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பார்க்க அழகாக இல்லை என்ற காரணத்தால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறாள்.  ஏற்கனவே தொலைக்காட்சி பழக்கம் உள்ள, விளம்பரங்களில் நடித்த அனுபவமுள்ள வேறொரு பெண் அற்புதக் குரலுக்குச் சொந்தக்காரியாக உலகின் முன் காட்டப்பட்டிருக்கிறாள்.

"I think the viewers should be able to understand that, in the national interest, for the perception of the country, this was an extremely important and serious matter," Chen Qigang, the ceremony's chief music director, said in an interview with a Beijing radio station.

"The child on camera should be flawless in image, internal feeling and expression," he said. "We felt the coupling of a perfect voice with the best appearance produced the most optimal result."

ஒன்பது வயதுக் குழந்தையை அழகற்றது என்று சொல்ல அசாத்திய மன உறுதி வேண்டும்.

இந்த ஒலிம்பிக்ஸ் நடந்து முடிந்தபின் சீனாவில் சில முக்கியமான அரசியல் முடிவுகள் வரலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம் உள்ளேயிருக்குமாம் ஈறும்பேனும்.