தியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது

theodore_bhaskaranமிக மகிழ்ச்சியான செய்தி; 2014-க்கான இயல் விருது தியோடர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது.

தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுசூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்

1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு பாம்பின் கண் 2012இல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003இல் தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராக பணியாற்றினார் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உண்டு.

இயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

காலம் - 40வது இதழ் வெளியீடு

காலம் சஞ்சிகையின் நாற்பதாவது இதழ் வெளியீடு

நேரம் : டிசம்பர், 1, 2012.  மாலை 5:30

இடம்: தூய மரியா கொரெட்டி கத்தோலிக்கப் பள்ளி

21 கென்மார்க் பொலிவார்ட்  (கென்னடி - எக்லிங்டன் இடைநிறுத்தமருகே), ஸ்கார்புரோ

 

செழியனின் வானத்தைப் பிளந்த கதை புத்தக வெளியீடு

சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்! 'காலம்' இலக்கிய நிகழ்வு: 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்!

சிறப்புப் பேச்சு:   பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி (Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University).

புத்தக வெளியீடு :‘வானத்தைப் பிளந்த கதை’ - செழியன் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்றது.

சிறப்பிதழ் வெளியீடு : 'காலம் 36' மு.பொ. சிறப்பிதழ்

காலம்: நவம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30

இடம் : 2467 EGLINTON AVE EAST'Toronto. (Close to Kennady Subway)

வாழும் தமிழ் புத்தகங்களின் விற்பனை நடைபெறும்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள்

அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி - ஒரு நிகழ்வு

காலம் - 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை

இடம் - Munk Centre, 1 Davenshire Place, University of Toronto

சிறப்புப் பேச்சாளர் - கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி)

சிறப்பு விருந்தினர் - எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)

வாழும் தமிழ் புத்தகங்களின் கண்காட்சியும் இடம்பெறும் (நண்பகல் முதல் மாலை 7 மணி வரை)

டொராண்டோ முக்கிய நெடுஞ்சாலையை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு

tamil-block-gardiner இன்று மாலை டொரண்டோ நகரின் அதிமுக்கியமான கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். மாலை ஏழு மணியளவில் நகர மையத்திலிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் குழந்தைகள் முதியோர்களுடன் ஆதரவாளர்கள் நுழைய போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் பெரும் அமளி நிலவுகிறது. சற்றுமுன் நகரின் போலீஸ் கமிஷனர் பில் ப்ளேயர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகித்து அவர்களை அகற்றத் தயாராகிவருவதாகச் சொல்கிறார்.

நான் கேள்விப்படும்வரை நகரில் பொதுமக்கள் பலரும் இதனால் அதிக எரிச்சலடைந்திருப்பதாகத்தான் தெரிகிறது. இது திட்டமிடாமல் தன்னிகழ்வாக நடத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தக்க தலைமை ஏதுமில்லாமல் போராட்டம் திசை திரும்பியிருக்கிறது; வானொலி தொலைகாட்சிகளில் பலரும் இதுபோன்ற சட்ட ஒழுங்கின்மை நிகழ்ந்ததில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

என் கவலை கனேடிய பொதுமக்களின் கருத்து தமிழர்களுக்கு எதிராகத் திரும்பிவிடக்கூடாதே என்பது. விரைவில் அவர்கள் அங்கிருந்து அகன்றால் நல்லது.

அறிவியல் திருவிழா

நேற்று டொராண்டோ நகர் முழுவதிலும் அறிவியல் திருவிழா நடந்தது. Science Rendezvous என்று பெயரிடப்பட்ட இந்த விழாவுக்கு இது இரண்டாம் ஆண்டு. சென்ற வருடம் இதே நாளில் நான் துருக்கி செல்ல நேர்ந்ததால் விழாவில் ஒரு மணிநேரம்தான் செலவிட முடிந்தது, நேற்று நாள் முழுவதும் பையன்களுடனும் மனைவியுடனும் முழுவதுமாகக் களிக்க முடிந்தது. Continue reading "அறிவியல் திருவிழா"

இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் - பாப் ரே

bob_raeசில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்;

The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands of people made homeless in this long conflict have not dominated the airwaves and televisions of the Western world.

Neville Chamberlain once referred to Czechoslovakia as "a country about which we know little." Unfortunately this civil war in Sri Lanka has gone largely unnoticed and unheralded for its full 30 years.

Continue reading "இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் - பாப் ரே"

டொராண்டோவில் தமிழர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

கடந்த சில தினங்களாக வலுவாக எழும்பிவரும் தமிழர்கள் குரல் ஈழத்தின் சமீபத்திய அவலத்தை நோக்கி கனேடியர்களின் கவனத்தைத் திருப்பி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நேற்று டொராண்டோ நடுநகர் மையத்தின் யூனியன் இரயில்நிலைய வாசலலில் தொடங்கி யுனிவர்ஸிட்டி அவென்யு, டொராண்டோவின் அதிமுக்கிய யங் வீதிகளில் 45,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்து கனேடிய அரசை ஈழத்தின்பால் கவனத்தைத் திருப்பப் போராட்டம் நடத்தினார்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் இந்தத் தெருக்களும், இரயில் நிலையமும் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடியவை; அலுவல் முடிந்து வீடு திரும்புபவர்கள், அண்டை கிராமங்களுக்கு வாரயிறுதி விடுமுறைக்குச் செல்லும் மாணவர்கள்,ஊழியர்கள், நடுநகரில் கேளிக்கைக்காக வெள்ளி இரவு கூடுபவர்கள் என்று சாதாரணமாகவே கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதி இது. மிக முக்கியமான நேரத்தில் போராட்டம் நடத்தியது நல்ல உத்தி.

ஈழத்து நிலைகுறித்த இன்றைய டொராண்டோ ஸ்டார் தலையங்கம்

ஒரு வழியாக கனடாவின் கவனம் இலங்கை அவலங்களின்மீது திரும்பத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை. கடந்த அக்டோபர் மத்தியில் கனடாவில் தேர்தல் நடந்தது.  சிறுபான்மை கன்ஸர்வேட்டிவ் ஆட்சி சற்றே பலங்கூடிய சிறுபான்மையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதே சமயத்தில் உலகெங்கும் சந்தைகள் சரியத் தொடங்க சிக்கனத்தை முன்வைக்கிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த அரசு மானியத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார்கள். உடனடியாக மற்ற எதிர்க்கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்றன.  இவை அனைத்தும் இடது சார்பு கொண்டவை, கனடா பொதுவில் இடது சார்பு கொண்ட, நலம்நாடு(ம்) மக்களாட்சிதான் (left-leaning, welfare democratic.) உடனடியாக பாரளுமன்றத்தை உறைநிலையில் பிரதமர் மூடிவைக்க, மீண்டும் கடந்த வாரம்தான் உயிர்ப்பெற்று எழுந்திருக்கிறது. முதன்மை எதிர்க்கட்சியான லிபரல்களின் முழுப்பிடியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ற வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசை (தற்காலிகமாக) காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள் கன்சர்வேட்டிவினர்.  இதெல்லாம் நடந்து இன்னும் ஒருவாரம்கூட ஆகவில்லை. Continue reading "ஈழத்து நிலைகுறித்த இன்றைய டொராண்டோ ஸ்டார் தலையங்கம்"

அன்றாட அறிவியல்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விட்டுப்போயிருந்த என் வானொலி அறிவியல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து வாரங்களாக மீண்டும் நடத்திவருகிறேன். நண்பர் விஜயகுலதுங்கன் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி கனேடிய தமிழ் வானொலியில் டொராண்டோ பெருநகரப் பகுதியில் நேரடி ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை திங்கட்கிழமைதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 9:25க்கு என் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வாயிலாக நேரடியாக இணைகிறேன். நிகழ்ச்சியை இணையம் வாயிலாக உலகெங்கும் கேட்கமுடியும் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரம்தான் வேலைசெய்கிறது). Continue reading "அன்றாட அறிவியல்"