கணினியும் இசையும் - 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்

சென்ற பகுதியில் ஒலிநாடாவிலிருந்து எப்படி கணினிக்கு மாற்றுதல் என்று பார்த்தோம். ஒலிநாடாவை கணினியில் பதிவு செய்யும்பொழுது நாடாவின் ஒரு பக்கத்தில் இருக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே கோப்பாக சேமிக்கப்படும். தொடரின் இந்தப் பகுதியில் அவற்றை எப்படித் தனித்தனி பாடல்களாக வெட்டியெடுக்கலாம் என்பதையும், கோப்புகளை எப்படி எம்பி3 ஆக மாற்றலாம் என்பதையும் பார்க்கலாம். Continue reading "கணினியும் இசையும் - 3 : ஒலிநாடா பாடல்களைத் தனித்தனி எம்பி3 கோப்புகளாக்குதல்"

கணினியும் இசையும் - 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்

ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு என்று பொதுப்படையாக எழுதியிருந்தாலும், இந்த முறையை பின்வருவனவற்றுக்கும் எந்த மாறுதலும் இல்லாமல் பயன்படுத்த முடியும்; ஒலிநாடா, எல்.பி இசைத்தட்டு, பல்வேறுதரப்பட்ட ஒலிநாடக்கள்

இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொதி அடாசிட்டி என்பது. இதன் முக்கிய சிறப்புகள்; Continue reading "கணினியும் இசையும் - 2 : ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு மாற்றுதல்"

கணினியும் இசையும் - 1 : குறுவட்டிலிருந்து MP3 மாற்றுதல்

இதற்கு நாம் பயன்படுத்தப் போவது நிரலி CDex. இதைத் தெரிந்தெடுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமான சில;

  • இது முற்றிலும் இலவசமான, GPL உரிமம் கொண்ட தளையறு மென்கலன்.
  • நானறிந்தவரையில் இதனுடைய குறுவிரி (குறுக்கும் விரிக்கும் நிரலி, COmpression-DECompression) மிகத் திறமையானது. திறமூலம் என்பதால் இது நன்றாகச் சோதிக்கப்பட்டு முன்னேற்றப்பட்டுள்ளது.
  • இது எம்பி3க்கு மாற்றும்பொழுது குறுவட்டில் இருக்கும் கீறல்கள், அழுக்குகள் போன்றவற்றால் வரும் இரைச்சல்களைப் பெருமளவிற்குக் கட்டுப்படுத்துகிறது. அப்படி முடியாத பொழுது அதைப்பற்றிய விபரங்களை வெளிப்படையாக அறியத்தருகிறது.
  • இசைத்தட்டில் ஒரு பாடல் அதிக சப்தத்திலும், மற்றது குறைந்த சப்தத்திலும் இருந்தால் இது பாடல்களுக்கு இடையிலிருக்கும் ஒலியளவு ஏற்றத்தாழ்வுகளைத் தானாகச் சரிசெய்கிறது. எனவே காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு (ஐபாட், வாக்மேன்) கேட்கும்பொழுது திடீரென இரைச்சல் வந்து காதைக் கெடுக்காது.
  • இதை குறுவட்டிலிருந்து மட்டுமல்லாது வேறு குறுவிரிகளில் (உதாரணமாக Wave, WMA போன்றவற்றுக்கும் மாற்ற உதவும்.) எனவே எம்பி3 வடிவில் இருக்கும் கோப்புகளை உங்கள் சிடி இயக்கிகளில் ஓட்ட ஏற்ற இசைத்தட்டாக (Audio CD) இதைக் கொண்டு எதிர்மாற்றம் செய்ய முடியும்.
  • இதை உங்கள் கணினியில் நிறுவத் தேவையில்லை. இதை ஒரு அடைவில் சும்மா விரித்து வைத்தால் போதும். கணினியில் நிறுவாமல் இயங்கும் நிரலிகளால் எந்தத் தொல்லையும் இல்லை.
  • இதன் மூலம் எம்பி3 ஆக மாற்றும் பொழுது பாடலுக்கான விபரங்களையும் அவற்றுடன் இணையம் வழியே பெற்று சேமிக்க முடியும்.

தேவையானவை :

கணினி (சொல்லத் தேவையில்லை), எம்பி3 வடிவில் மாற்ற வேண்டிய குறுவட்டு

நிரலியைப் பெறும் முறை:

இந்த இலவச நிரலியை CDex தளத்திலிருந்து இறக்கி கொள்ள முடியும். என்னுடைய தெரிவு யுனிகோட் வசதி கொண்ட zip கோப்பு. இதை இறக்கி ஒரு அடைவில் விரித்துக் கொள்ளவும். அங்கிருந்து CDex.exe என்ற குறும்படத்தில் சொடுக்குவதன் மூலம் இதைத் திறக்கலாம்.

செய்முறை:

{செய்விளக்கப் படங்களின் குறும்படத்தில் சொடுக்கினால் பெரிய வடிவில் காணமுடியும். ஒரு படத்தின் வலது மையத்தில் சுட்டினால் அடுத்த படத்தைத் திறக்க முடியும், இடது மையத்தில் சொடுக்க முந்தைய படம் திறக்கும். முடிந்தவுடன் வலது கீழ் மூலையில் சொடுக்கி மீண்டும் இந்தப் பதிவுக்குத் திரும்ப முடியும்}

cdex_0.jpgcdex_0.jpgcdex_2.jpg
cdex_0.jpgcdex_4.jpgcdex_5.jpg

திறந்த உடன் உங்கள் கணினியில் படம்-1 வடிவில் இருக்கும். இதனுடைய Options பகுதிக்குச் சென்று விருப்பங்களை மாற்றிக் கொள்ள முடியும் . ஆனால் இப்போதைக்கு இதில் துவக்கத்தில் இருக்கும் அமைப்புகளை மாற்றத் தேவையில்; இவை பெரும்பாலான கணினிகளில் திறம்படச் செயல்படுகின்றன. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை இதில் இட்டால் இணையம் வழியே பாடல்கள் குறித்த மேலதிகத் தகவல்களையும் நேரடியாகப் பெறமுடியும். இது பற்றி விரிவாகப் பின்னர் பார்க்கலாம்.

Options திரையில் இருக்கும்பொழுதே அதில் இரண்டாவது பட்டியான Filename என்பதைத் தெரிவு செய்யவும். இதில் மாற்றப்படும் எம்பி3 கோப்பை எங்கே சேமிக்க வேண்டும் என்று குறிப்பிடவும் (படம் 2). ஒவ்வொரு புதிய குறுவட்டிற்கும் அந்த் இடத்தில் ஒரு புதிய அடைவை உருவாக்கி ஆல்பங்களைத் தானாகத் தனித்தனியே சேமிக்கும். இதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள் முதன் முறை இதனை இயக்கும்பொழுது மட்டுமே. பின்னர் இந்தத் தெரிவுகள் இவற்றில் நிரந்தரமாகச் சேமிக்கப்படுவதால் அடுத்தமுறை இவற்றைச் செய்யத் தேவையில்லை.

நீங்கள் மாற்ற வேண்டிய இசைத்தட்டை கணினியில் பூட்டவும். CDex உங்கள் இசைத்தட்டைப் படித்து எத்தனை பாடல்கள் இருக்கின்றன என்று காட்டும். (படம் 3). இப்பொழுது Options தெரிவு செய்யவும். இதில் Read From Remote CCDB என்பதைத் தெரிவு செய்யவும் (படம் 4). பாடலைப் பற்றிய தகவல்கள் இணையத்திலிருந்து படிக்கப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் எம்பி3 ஆக மாற்றும்பொழுது இந்த விஷயங்களும் உங்கள் கோப்புகளில் பதிவு செய்யப்படும். (படம் 5).

பெரும்பாலான இசைத்தட்டுக்களில் அது என்ன ஆல்பம், இசைக்கலைஞர்கள் யார், பாடலில் நேரம் எவ்வளவு, உள்ளிட்ட பல மேல்தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். திருட்டுத்தனமாக நகலெடுக்கப்பட்ட இசைத்தட்டுகளில் இதுவும் சேமிக்கப்பட்டிருக்க உத்தரவாதம் கிடையாது. அதேபோல ஒலிநாடக்களிலிருந்து இசைத்தட்டாக மாற்றப்பட்டிருந்தாலும் இந்த விஷயங்கள் கிடைக்காது. மேலதிகமாக, இந்தியாவிலிருந்து வரும் தமிழ்த்திரையிசை, கர்நாடாக இசை உள்ளிட்ட பெரும்பாலான இசைத்தட்டுக்களில் நிறுவனங்கள் இந்தத் தரவுகளை உள்ளிடுவது கிடையாது, எனவே பல நேரங்களில் இது உங்களுக்கு உதவப் போவதில்லை. (ஏன் இந்த விஷயங்கள் எம்பி3 கோப்புகளில் வேண்டும், அவற்றை எப்படிச் சேர்க்கலாம் என்பது குறித்த பாடம் இந்தத் தொடரில் பின்னர் வரும்).

மாற்ற வேண்டிய பாடல்களை விசையெலி கொண்டு தெரிவு செய்யவும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்களைத் தெரிவு செய்ய Shift பொத்தானை அமுக்கிக் கொண்டு விசையெலியால் சேர்க்கலாம்.

இனி, வலதுபக்கம் இருக்கும் பட்டியில் இரண்டாவதாக இருக்கும் குறும்படத்தின்மீது விசையெலியைக் கொண்டு சென்றால், அதில் Extract CD track(s) to Compressed Audio File(s) என்று வரும். அதைத் தெரிவு செய்யவும். உடனடியாக உங்களுக்குத் தேவையான பாடல்கள் எம்பி3 ஆக மாற்றப்படும்.

மிகச் சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு இசைத்தட்டை எம்பி3 ஆக மாற்ற இந்த நடைமுறைகளை மாத்திரம் செய்தால் போதும்,

  • இசைத்தட்டை உள்ளிடவும்.
  • (தேவையென்றால் Remote CD DataBase க்குச் சென்று பாடல்கள் பற்றிய மேல் விபரங்களைப் பெறவும்.)
  • மாற்றத்தேவையான பாடல்களை விசையெலி கொண்டு தெரிவு செய்யவும்.
  • வலதுபட்டியில் இரண்டாவதாக இருக்கும் குறும்படத்தில் சொடுக்க, பாடல்கள் விரைவாக எம்பி3 ஆக மாற்றப்பட்டு சேமிக்கப்படும்.

இனி அடுத்ததாக ஒலிநாடாவிலிருந்து எப்படி எம்பி3 க்கு மாற்றுவது என்று பார்க்கலாம்.

கணினியும் இசையும்

புதிதாக ஒரு தொடர் எழுத உத்தேசம். என்னிடம் பல நாட்களாகப் பலர் இதைப் பற்றி எழுதச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சோம்பேறித்தனத்தால் துவங்கவில்லை. இன்றைய சுபயோக சுபதினத்தில் இதை ஆரம்பித்துவிடலாம் என்று உத்தேசம். Continue reading "கணினியும் இசையும்"