காலம் - 40வது இதழ் வெளியீடு

காலம் சஞ்சிகையின் நாற்பதாவது இதழ் வெளியீடு

நேரம் : டிசம்பர், 1, 2012.  மாலை 5:30

இடம்: தூய மரியா கொரெட்டி கத்தோலிக்கப் பள்ளி

21 கென்மார்க் பொலிவார்ட்  (கென்னடி - எக்லிங்டன் இடைநிறுத்தமருகே), ஸ்கார்புரோ

 

அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள்

அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி - ஒரு நிகழ்வு

காலம் - 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை

இடம் - Munk Centre, 1 Davenshire Place, University of Toronto

சிறப்புப் பேச்சாளர் - கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி)

சிறப்பு விருந்தினர் - எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)

வாழும் தமிழ் புத்தகங்களின் கண்காட்சியும் இடம்பெறும் (நண்பகல் முதல் மாலை 7 மணி வரை)

வலையும் படைப்புச் சாத்தியங்களும்

எல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர அடைக்கலம் கீபோர்ட். விரைவில் இணையம் வழியே அவரைப் போல ஆர்வம் இந்திய மென்கலன் நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பாடல்களை வெளியிட்டார். இதில் முக்கியமான விஷயம் திரையிசையை ஒத்த பாடல்களை உருவாக்குவதற்கு பல பேர் ஒன்று சேர வேண்டியிருக்கிறது; பாடலாசிரியர், இசையமைப்பாளர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர், ஒலிப்பதிவு நுட்பர் என்று பலருடைய ஒத்துழைப்பு தேவை. முந்தைய நாட்களில் இவரகள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே ஒலிப்பதிவுக் கூடத்தில் கூட வேண்டியிருந்தது. நவீன நுட்பம் இதைத் தேவையற்றதாக ஆக்கியிருக்கிறது. ஆரம்பகாலப் பாடகர் ஒருவரை வைத்துப் பாடலைப் பதிவு செய்து அனுப்பினால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவருக்குத் வசதிப்படும் நேரத்தில் அதே பாட்டையில் (track) தன் குரலில் பாடியதைப் பதிவு செய்து அனுப்பிவிடுவார். இதே முறையில் ஸ்ரீகாந்தும் அவர் நண்பர்களும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துகொண்டே பாடல்களை உருவாக்கினார்கள். இவற்றில் பல mp3.com, iTunes போன்ற தளங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. விரைவில் ஸ்ரீகாந்தின் திறமை அவரைப் புதிய இடங்களுக்கு இட்டுச் சென்றது. சென்னையில் ஸ்ரீநிதி சிதம்பரத்தின் க்ரியா கிரியேஷன்ஸ் ஸ்ரீகாந்தின் மாஹாகவி என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டது. இந்தத் தொகுப்பில் பாரதியாரின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் மெட்டமைத்து இசை கோர்க்க எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீனிவாஸ் போன்ற முன்னணி திரையிசைப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு பாடல் இங்கே;

பாடல்: சின்னஞ்சிறு கிளியே...
இசை : ஶ்ரீகாந்த் தேவராஜன்
தொகுப்பு: மஹாகவி (2006)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : பாரதியார்
[audio:chinanchiru.mp3]

Continue reading "வலையும் படைப்புச் சாத்தியங்களும்"

செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்

பிரபு ராஜதுரையின் இந்தக் கேள்வி ('ஞாநி'களுக்கு எதற்கு அறிவு?)மிகவும் முக்கியமானது.

ஞாநியின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சஞ்சிகைகளில் பத்தி எழுதுபவருக்கு எந்தவிதமான மொழியறிவும் தேவையில்லை போலிருக்கிறதே என்று வியந்திருக்கிறார். இது கட்டாயமாக அவலநிலைதான். ஞாநியின் அந்தக் கட்டுரையின் இடத்தில் வேறு எந்தத் தமிழ்ப்பத்தியாளரின் கட்டுரையையும் போட்டு இதே விமர்சனத்தை முன்வைக்க முடியும். சான்றான்மை என்று ஒரு பதம் உண்டு; தான் செய்யும் காரியம் அனைத்திலும் தன் முழு எத்தனத்தையும் பயன்படுத்தி காரியம் எல்லாவற்றிலும் முழுமையடைவது சான்றோர்கள் குறித்த வரையறை. துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. Continue reading "செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்"

புத்தக விமர்சனம் : The Indian Clerk

indian_clerk.jpgInline23.gif
இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச் சரித்திர நாவல் துவங்குகிறது. சரித்திர நாவல்களில் நாம் பெரிதும் கண்டவை உண்மை நிகழ்வுகளினூடாக புனைவு மாந்தர்கள் உலவும் களங்களைத்தான். கற்பனை கதாபாத்திரங்கள் உண்மை சரித்திர நிகழ்வுகளில் பங்குபெறுவார்கள் (புலிநகக் கொன்றை நாவலில் கண்ணனும், நம்பியும் பெரியார் பேருரையைக் கேட்பதைப் போல). தொட்டுக்கொள்ள ஊறுகாயாக உண்மை சரித்திர நாயகர்கள் அவ்வப்போது வந்துபோனாலும் கதையின் மையமாக கற்பனை மாந்தர்களே பெரிதும் இருப்பார்கள். வேறொருவகையான சரித்திரப் புதினத்தில் உண்மைக் கதாமாந்தர்கள் கற்பனை சம்பவங்களில் இடம்பெறுவார்கள். (இருந்தபோதும் கதையின் பெரும நிகழ்வுகள் பெரிதும் சரித்திர சம்பவங்களை ஒத்திருந்தாக வேண்டும்). இந்த இரண்டாம் வகை சரித்திரப் புனைவுகள் அதிகம் எழுதப்படுவதில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அதிகம் மாற்றமுடியாது, உண்மைக் கதைமாந்தர்களின் பிம்பத்தைப் பெரிதும் சிதைக்கமுடியாது என்ற புனைவு நெருக்கடிக்களுக்கு இடையில் கதாசிரியனுக்கான எல்லைகள் குறுகிச் செல்ல, கதாமாந்தர்களின் உளவியல், தனிப்பட்ட சம்பவங்கள், ஒன்றிரண்டு புனைவுப் பாத்திரங்களின் கோப்பு ஆகியவைமட்டுமே இதில் சாத்தியம். இத்தனைச் சிக்கல்களுக்கிடையில் டேவிட் லெவிட் இந்தப் புதினத்தை எழுதியதே ஒரு சாதனையாகத்தான் தோன்றுகிறது. Continue reading "புத்தக விமர்சனம் : The Indian Clerk"

பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும


புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில்

காலம் சஞ்சிகையின்

பேராசிரியன்

பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்


தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம்

சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)

இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ,

ஜூன் 9 2007 மாலை 5;.30

  • சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
  • சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
  • மாலை 3 மணி தொடக்கம் வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி
  • - மாலை4 மணிக்கு நாடகம் உடலங்களின் எண்ணிக்கை : நடிப்பு நெறியாள்கை அ.மங்கை

மெல்லிடை - காலத்தால் அழியா அழகியல்

thanjavur_parvathi.jpgசமீபத்திய Proceedings of the Royal Society B சஞ்சிகையில் காலம் காலமாக உலகத்தின் பல காலாச்சாரத்தைச் சார்ந்த இலக்கியங்களிலும் மெல்லிடையில் அழகு போற்றப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் சார்ந்த அழகியலில் மெல்லிய இடை உலகம் முழுவதும், எல்லா காலங்களிலும் மாறத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. மெல்லிதழ்/தடித்த உதடுகள், வெண்ணிறமேனி/பொலிகருமை, கதுப்பு அல்லது வடிந்த கன்னங்கள், சிறிய/பெரிய கண்கள் என்று காலத்தாலும் கலாச்சாரத்தாலும் அழகியல் வரையறைகள் மாறிக்கொண்டேயிருக்க, மாறாதிருப்பது மெல்லிடை என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. Continue reading "மெல்லிடை - காலத்தால் அழியா அழகியல்"

டொராண்டோவில் சுந்தர ராமசாமி நினைவாஞ்சலிக் கூட்டம்

மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி கடந்த வெள்ளிக்கிழமை, 14 ஒக்டோபர் 05 அன்று அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் பசிபிக் நேரம் பின்மதியம் 1.35 க்கு காலமானார்.

அவரை நினைவுகொள்ளும் முகமாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு செய்திருக்கும் அஞ்சலிக் கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெறும்.

இடம்: 2543, Pharmacy Avenue ( Finch/Pharmacy) - Near Daily Needs Supermarket.
தேதி: ஒக்டோபர் 23, 2005
நேரம்: மாலை 6.00 மணி

எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், அனுதாபிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலும் விபரங்களுக்கு: தொலைபேசி 416 731 1752

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்

இயல்விருது விழா

viruthu 2005

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் டிரினிடி காலேஜ் வளாகத்தில் நேற்று மாலை திரு பத்மநாப ஐயருக்கு தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால சேவைக்காக இயல்விருது வழங்கப்பட்டது. ஆண்டு தோறும் டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டமும் டொராண்டோ பல்கலைக்கழகத் தெற்காசிய மையமும் இணைந்து வழங்கும் இந்த விருது சுந்தர ராமசாமி, கே.கனேஷ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர்களைத் தொடர்ந்து இந்த வருடம் இங்கிலாந்தில் வசிக்கும் பத்மநாப ஐயருக்கு வழங்கப்படுகிறது.

Continue reading "இயல்விருது விழா"

நவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கும் வருடாந்திர இயல்விருது இந்த வருடம் திரு பத்மநாப ஐயர் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இது தொடர்பான செய்திகளை நான் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். இப்பொழுது அந்த விழாவிற்கு வருகைதரும் அமெரிக்க ஒஹையோ மாநில ஓபர்லின் கல்லூரிப் பேராசிரியை பாலா ரிச்மான் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் "Setting the Record Straight: Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India" என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார். இது பற்றிய விபரங்களைக் கீழே இணைத்திருக்கிறேன்.

டொராண்டோவில் வசிப்பவர்கள், டொராண்டோவிற்கு வருகை தருபவர்கள் இந்த உரை நிகழ்வில் கலந்துகொள்ளப் பரிந்துரைக்கிறேன். வழி தெரிய, வாகனம் நிறுத்திடம் தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும்

Continue reading "நவீன தென்னிந்தியாவில் இராமாயணப் பாத்திரங்களின் தாக்கம்"