• தூள் – ஓராயிரம்

    by  • March 19, 2009 • 8 Comments

    இன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் வந்து கொண்டிருந்தது, இப்பொழுது அவ்வப்பொழுது எந்த [...]

    Read more →

    நிழற்படப் போட்டி பரிசு

    by  • February 22, 2009 • 3 Comments

    [album id=1 template=extend] கடந்த வார இறுதியில் டொராண்டோ தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர தெற்கு ஓண்டாரியோ ஆர்கிட் சொஸைட்டியின் வாலண்டைன் தின கண்காட்சியில் என்னுடைய இரண்டு நிழற்படங்களையும் இரண்டு டிஜிட்டல் ஓவியங்களையும் (புகைப்படமாக எடுத்து மென்கலன் உதவிகொண்டு ஓவியங்களாக மாற்றப்பட்டவை) போட்டிக்கு வைத்திருந்தேன். ஒரு போட்டியாளர் தொகுதியில் இரண்டு படைப்புகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டார். நான் வைத்திருந்த படங்களை மேலுள்ள குறும்படத்தில் சொடுக்கிப் பார்க்கலாம். எல்லா படைப்புகளையும் 12′ X 18′ அளவில் வைத்திருதேன். இங்கே சற்று [...]

    Read more →

    IPL – இன்றைய தேவைகள்

    by  • February 5, 2009 • 0 Comments

    இன்னும் சில மணி நேரங்களில் ஐபிஎல்-லின் இரண்டாவது வருட ஏலம் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கணிப்பில் எந்த அணி யாரைக் குறிவைக்கும் என்று எழுதுகிறேன். இதில் எவ்வளவு மெய்ப்படுகிறது என்று பார்க்கலாம். சென்ற வருடத்தில் கடைசி இடம் பெற்ற அணியிலிருந்து வெற்றி பெற்ற ராஜஸ்தானுக்கு வரலாம்.

    Read more →

    இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே

    by  • February 4, 2009 • 0 Comments

    சில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்; The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands of people [...]

    Read more →

    டொராண்டோவில் தமிழர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

    by  • January 31, 2009 • 1 Comment

    கடந்த சில தினங்களாக வலுவாக எழும்பிவரும் தமிழர்கள் குரல் ஈழத்தின் சமீபத்திய அவலத்தை நோக்கி கனேடியர்களின் கவனத்தைத் திருப்பி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நேற்று டொராண்டோ நடுநகர் மையத்தின் யூனியன் இரயில்நிலைய வாசலலில் தொடங்கி யுனிவர்ஸிட்டி அவென்யு, டொராண்டோவின் அதிமுக்கிய யங் வீதிகளில் 45,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்து கனேடிய அரசை ஈழத்தின்பால் கவனத்தைத் திருப்பப் போராட்டம் நடத்தினார்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் இந்தத் தெருக்களும், இரயில் நிலையமும் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடியவை; அலுவல் முடிந்து [...]

    Read more →

    ஈழத்து நிலைகுறித்த இன்றைய டொராண்டோ ஸ்டார் தலையங்கம்

    by  • January 30, 2009 • 1 Comment

    ஒரு வழியாக கனடாவின் கவனம் இலங்கை அவலங்களின்மீது திரும்பத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை. கடந்த அக்டோபர் மத்தியில் கனடாவில் தேர்தல் நடந்தது.  சிறுபான்மை கன்ஸர்வேட்டிவ் ஆட்சி சற்றே பலங்கூடிய சிறுபான்மையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதே சமயத்தில் உலகெங்கும் சந்தைகள் சரியத் தொடங்க சிக்கனத்தை முன்வைக்கிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த அரசு மானியத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார்கள். உடனடியாக மற்ற எதிர்க்கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்றன.  இவை [...]

    Read more →

    அறிவியல் கூட்டுப்பதிவு

    by  • January 22, 2009 • 2 Comments

    பல நாட்களாக நினைத்து ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த அறிவியல் கூட்டுப்பதிவு ஒரு வழியாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. ariviyal.info தளம் இப்பொழுது செயற்பாட்டிலுள்ளது.  நண்பர்கள் பத்ரி, அருண் இருவருடன் நானும் இணைந்து தமிழில் அறிவியல் சம்பந்தமான விஷயங்களை எழுதவிருக்கிறேன்.  இப்பொழுது எங்களுடன் கூட அருள் செல்வனும் இணைந்திருக்கிறார். இந்த வருடம் உலக வானியல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை அறிவியல் தளத்தில் எழுதியிருக்கிறேன்.  இயன்றவரை வானியல் சமப்ந்தப்பட்ட விஷயங்களை அதிகம் எழுத உத்தேசம்.  நான் வாரந்தோறும் கனேடியத் [...]

    Read more →

    இந்தியா – இதுவரை

    by  • December 25, 2008 • 6 Comments

    டொராண்டோவிலிருந்து கிளம்பி சரியாக மூன்று வாரங்களாகிவிட்டன.  முதல் நான்கு நாட்கள் லண்டனில் ஓடிவிட்டன (அந்நிய லண்டனை இலண்டன் என்று இலக்கணத்தூய்மை ‘படுத்து’பவர்களை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலலாம்). மியூசியம், கோட்டைகள் என்று ஏறி இறங்கி வெள்ளைக்காரனின் மூன்னூறு வருட கொள்ளை வரலாற்றுச் சான்றுகளை நேரில் பார்த்தாகிவிட்டது. பொறுக்கிகள் பஞ்சலோக புத்தர், ஆச்சி பாம்படம் என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பத்தமடைப் பாயைக் கூட விடாமல் சுருட்டியிருக்கிறார்கள். லண்டனைப் பற்றி விரிவாகப் பின்னர். இப்பொழுது இந்தியாவில் இதுவரை கண்ட [...]

    Read more →

    ஒபாமாவுக்கு வாழ்த்துகள்

    by  • November 5, 2008 • 6 Comments

    முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள். என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் [...]

    Read more →

    தீபாவளி

    by  • October 26, 2008 • 7 Comments

    இனிய தீபாவளி வாழ்த்துகள். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பண்டிகைகளும் தினங்களும் புதிய அடையாளங்களைப் பெற்றிருக்கின்றன. தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வரும் முக்கிய விஷயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்.  சிறுவயதில் காலையில் எழுந்தவுடன் சகோதர்கள் மூவருக்கும் அப்பா வற்றல் மிளகாய், மஞ்சள் பொடி, பச்சரி போட்டு காய்ச்சிய எண்ணையை அழுந்தத் தேய்த்துவிடுவார். கடைக்குட்டி நான்தான் முதல் குளியல்.  விறகு அடுப்பில் கொதிக்கும் சுடுநீரில் குளியல். எண்ணை போக அரப்புப் பொடி (சிகைக்காய் விலை அதிகம்). அரப்பு அதிகம் கண்ணில் [...]

    Read more →