• 2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு

    by  • March 31, 2010 • 0 Comments

    தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான [...]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – மத்யமாவதி

    by  • March 29, 2010 • 2 Comments

    திரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது.   22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம் பார்த்த மோகனம், ஹிந்தோளம் இராகங்களைப் போலவே இது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இந்த இராகத்தின் ஏறு/இறங்கு வரிசைகள் : ஆரோகணம் : ஸ ரி2 ம1 ப நி2 ஸ அவரோகணம் : ஸ நி2 ப [...]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – ஹிந்தோளம்

    by  • March 18, 2010 • 8 Comments

    ஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள் பின்வருமாறு; ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ

    Read more →

    இலங்கை வானொலி – அந்த நாட்கள்

    by  • February 2, 2010 • 3 Comments

    இன்றைக்கு ட்விட்டரில் புகழ்பெற்ற விளம்பரங்கள் என்ற தொடர் ஓடிக்கொண்டிருக்க எப்போழுதோ இணையத்திலிருந்து இறக்கிவைத்திருந்த இந்த ஒலித்துணுக்கு நினைவில் வந்தது. பிரபல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் குரலில் வரும் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட அற்புதமான பொக்கிஷம் இது.  எங்கிருந்து பெற்றேன் என்பது மறந்துவிட்டது. எனவே இணைப்புத் தரமுடியவில்லை. மன்னிப்பும் நன்றிகளும். [Audio clip: view full post to listen]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – மோகனம்

    by  • January 26, 2010 • 4 Comments

    மோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும்.  சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு முகங்களில் (ஆரோகண அவரோகணத்தில்) கொண்டது என்று சொன்னோம். அப்படிப்பட்ட இராகங்களுக்கு சம்பூர்ணராகம் என்று பெயர். மோகனம் ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது. ஐந்து ஸ்வரங்களைக்கொண்ட இராகங்களை ஔடவ இராகம் என்று அழைப்பார்கள். ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ அவரோகணம்: ஸ [...]

    Read more →

    Agathiyar Antideath

    by  • January 21, 2010 • 0 Comments

    இன்று  iTunes மேய்ந்துகொண்டிருந்தபொழுது கண்ணில்பட்டது.  99 டாலருக்கு சகா வித்தை கற்றுத்தரும் இந்த பயனி (Application, app)யில் என்ன இருக்கிறது என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்.

    Read more →

    அந்தநாளும் வாராதோ

    by  • January 17, 2010 • 0 Comments

    29 அக்டோபர் 1932 நாளிடப்பட்ட ஆனந்தபோதினி எனும் திங்களிதழ் காணப்பெற்றோம். என். முனுசாமி முதலியார் எனும் பெருந்தகையின் ஆசிரியத்தில் வெளிவந்த இந்த ஸஞ்சிகையில் நாம் கண்ட நயத்தகு நல்விஷ்யங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பரம சந்தோஷம். லோகத்தார் வாஸித்து நல்லின்பங்களை அடைவார்கள் என்பது நம் நல்லவா!

    Read more →

    Photonics in India

    by  • January 7, 2010 • 0 Comments

    டிசம்பர் மாத Photonics Spectra சஞ்சிகை Photonics Is Heating Up in Indiaஎன்று ஒரு முகப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எந்த புண்ணியவதியோ தெரியவில்லை, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார்.  கட்டுரையில் கொச்சி பல்கலைக்கழகம், பெங்களூர் ராமன் ஆய்வுக்கூடம், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் இவற்றைப் பற்றி மாத்திரமே எழுதியிருக்கிறார். உண்மையில் இவற்றைத் தாண்டி பல விஷயங்கள் இந்தியாவில் இருக்கின்றன. (நான் இந்தியாவை [...]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – மாயாமாளவ கௌவ்ள

    by  • January 5, 2010 • 8 Comments

    இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம்.  இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது.  மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு [...]

    Read more →

    திரையில் கர்நாடக இசை இராகங்கள்

    by  • January 3, 2010 • 7 Comments

    நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்ற தொடரை நிறைவு செய்தேன். பதினெட்டு பாகங்களாக ஒலிபரப்பப்பட்ட இந்தத் தொடர் ஏற்கனவே நான் வலைப்பதிவில் எழுதியவற்றைச் சற்றே விரிவுபடுத்தி வழங்கப்பட்டது. ஜாஸ் இசையைப் பற்றி நம்மவர்களுக்கு அதிகம் பரிச்சயமிருக்காது என்ற காரணத்தால் நிறைய விளக்கங்களையும் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு பாடல்களை மட்டுமே [...]

    Read more →