உள்ளும் புறமும்
ஒபாமாவுக்கு வாழ்த்துகள்
முழு முடிவுகள் வராத நிலையிலும் கூட ஒபாமாவின் வெற்றி இப்பொழுது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகியிருக்கிறது. இந்தத் தேர்தலின் ஆதியிலிருந்தே ஒபாமாவை ஆதரித்தவன் என்ற முறையில் இது மகிழ்ச்சியான முடிவு.  ஒபாமாவைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தன் வரலாற்றுக் கறைகளைக் களைந்தெரியும் முக்கியமான கட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள்.
என்னுடைய பல எழுத்துக்களில் அமெரிக்காவின் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன் நான். இருந்தபோதும் அமெரிக்காவின் சில ஆதார விழுமியங்கள் உலகிலேயேன் மிகவும் உன்னதமானவை. இவற்றுள் முக்கியமாக நான் கருதுவது தளையற்ற சிந்தனைகள் (இதனால்தான் அறிவியல்/நுட்பத்தில் அமெரிக்கா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது).  இருந்தபோதிலும் பணக்காரனின் வயலில் பாயும் வெள்ளம் கசிந்துதான் ஏழையின் காணிக்கு வரவேண்டும் என்ற சிந்தனை அதன் மிகப் பெரும் கரும்புள்ளிகளில் ஒன்று. மற்றது சமீபகாலமாக வளர்ந்துவரும் சமய வெறி.  இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி இல்லாவிட்டால் கூட குறைந்தபட்சம் காற்புள்ளியாவது ஒபாமாவால் இடமுடியும் என்ற நம்பிக்கையிருக்கிறது.  கடந்த எட்டு வருடங்களில் வறட்டு முரட்டுத்தனத்தை மாத்திரமே உலக நாடுகளிடம் காட்டிய அமெரிக்கா தனது மூர்க்கத்தைக் களைந்தெரிந்து ஒரு உன்னத முதன்மை நாடாக உலக நாடுகளிடையே தன் பெயரை மீட்டெடுக்க வேண்டும்.
ஒபாமா அப்பழுக்கற்றவர் என்ற எண்ணம் எனக்கு ஒருப்போதும் இருந்ததில்லை. ஆனால் போட்டியிட்ட எல்லோரைக் காட்டிலும் மிகக் குறைவான எதிரெண்ணங்களைக் கொண்டவர் என்பதே அவரிடம் நான் கண்ட (காணும்) முக்கிய தகுதி.  இன்றைய அமெரிக்க மற்றும் உலக நடப்பில் ஒபாமாவின் துவக்கம் அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஆனாலும் கடந்த இரண்டு வருடங்களாக தேர்தலில் காட்டிய சில நல்ல பண்புகளைத் தொடர்ந்தாலே போதும் பல எதிர்ப்புகளைச் சமாளிக்கலாம் என்று நம்புகிறேன். குறிப்பாக அனைவரையும் அரவணைத்துச் செல்வது.
செனட்டர் மெக்கெய்ன் இந்தத் தோல்வியால் ஒன்றும் சிதைந்துப் போகப் போவதில்லை. அவருடைய நீண்ட நாளைய சேவை அமெரிக்கர்களால் நன்றியுடன் நினைவுகூறப்படும் என்று நம்புகிறேன். இன்னும் சில காலமாவது செனட்டாராகத் தொடரவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
சிக்கலான துவக்கம். தடைகளைக் களைந்தெரிந்து வெற்றிகளைச் சேர்க்க ஒபாமாவுக்கு இனிய வாழ்த்துகள்.
(இதை எழுதி முடிக்கும் நேரத்தில் 54 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக ஒரு டெமாக்ரடிக் வேட்பாளர் (ஒபாமா) வர்ஜீனியாவில் வெற்றி பெறுவார் என்ற அறிவிப்பு வருகிறது. இன்னும் முழு முடிவுகள் வரவில்லை எனினும் … சரியாக 11:00 மணி, சி.என்.என் ஒபாமாவின் வெற்றியை உறுதியான அறிவிப்பாக்கியிருக்கிறது.)
தீபாவளி
இனிய தீபாவளி வாழ்த்துகள்.
புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பண்டிகைகளும் தினங்களும் புதிய அடையாளங்களைப் பெற்றிருக்கின்றன. தீபாவளி என்றவுடன் நினைவிற்கு வரும் முக்கிய விஷயம் எண்ணெய் தேய்த்துக் குளித்தல்.  சிறுவயதில் காலையில் எழுந்தவுடன் சகோதர்கள் மூவருக்கும் அப்பா வற்றல் மிளகாய், மஞ்சள் பொடி, பச்சரி போட்டு காய்ச்சிய எண்ணையை அழுந்தத் தேய்த்துவிடுவார். கடைக்குட்டி நான்தான் முதல் குளியல்.  விறகு அடுப்பில் கொதிக்கும் சுடுநீரில் குளியல். எண்ணை போக அரப்புப் பொடி (சிகைக்காய் விலை அதிகம்). அரப்பு அதிகம் கண்ணில் எரியாமல் இருக்க, சட்டியில் போட்டு சற்று வறுத்து எடுப்பாள் அம்மா.  (பின்னாட்களில் அரப்புக்குப் பதிலாக புலிமார்க் சிகைக்காய் பொடி வந்தது).
எண்ணெய்க் குளியல்  சாத்தியமில்லாததாக ஆகியிருக்கிறது. உச்சந்தலையில் மாத்திரம் ஒரு சொட்டு வைக்கப்படும் நல்லெண்ணெய். குளியலுக்கு ஷாம்பு, பிறகு எண்ணெய் காணத தலைக்கு கண்டிஷனர்.  இப்படி ஒவ்வொன்றாக பண்டிகையின் அடையாளங்கலெல்லாம் முற்றிலும் மாறிய நிலையிலும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.   வறட்டுத்தனமாக சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியில் பத்து வருடங்களுக்கு முன்னால் தீபாவளியை கொண்டாடமல் இருந்தது உண்டு. ஆனால் இப்பொழுது எனக்காக இல்லாவிட்டாலும் என் பையன்களுக்காகவது கொண்ட்டாட வேண்டும் என்று திரும்பிக்கொண்ட வழக்கில், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக என் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. (இதே மனநிலையில் ரோசா வஸந்த் எழுதிய பதிவு இங்கே.) வீட்டில் வசதியில்லாமல் பண்டிகளைகளை அமர்க்களமாகச் சிறுவயதில் கொண்ட்டாடியதில்லை. சோம்பியிருந்த சிறுவயது நினைவுகள் மேலெழும்பி வரத்தொடங்கி பண்டிகைகளை என் பையன்களின் கண்களில் பார்க்கத் தொடங்கியபிறகு முற்றிலும் புதிய உணர்வுகள் பண்டிகைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. சரஸ்வதி பூஜைக்கு மீண்டும் புத்தகங்களை அடுக்கிவைத்து அதன் மேல் ஸ்பானரையும் கொல்லையில் பூக்கும் காரனேஷனையும் வைக்கிறேன். தீபாவளிக்குப் புதுத்துணிகளை அடுக்கத் துவங்கியிருக்கிறேன்.
அடையாளங்கள், வழக்கங்கள், சடங்குகள் இவற்றுக்கெல்லாம் அப்பாலும் பண்டிகைகளில் ஒரு முக்கியத்துவம் இருப்பதாகவே தோன்றுகிறது.  இயந்திரத்தனமாக இறுகிப் போன அன்றாட நடவடிக்கைகளிலிருந்து ஆழ்மன உற்சாகத்தைப் புதுப்பித்துக் கொள்ள அவ்வப்பொழுது பண்டிகைகள் தேவை என்று உணரத் தொடங்கியிருக்கிறேன்.  சுற்றிலிருமிருப்பவர்கள் ஒரு சேர இதைச் செய்கையில் உற்சாகம் பலமடங்கு பெருகுகிறது.  மலர்ந்த முகத்துடன் மெர்ரி கிறிஸ்மஸ் என்று ஒரு நாளில் நான்குபேர் சொன்னால் ஐந்தாவது நண்பரைப் பார்க்கும் பொழுது தன்னிச்சையாக நம் முகமும் மலர்கிறது.   இறுகிப் போன நாத்திகர்களான என் நண்பர்கள் சிலர் கிற்ஸ்துமஸைக் கொண்டாடும் உற்சாகத்தைச் சொல்லி மாளாது. அவர்களுக்கு கிறிஸ்துமஸ் எந்தவிதமான சமய அடையாளங்களையும் கொண்டதல்ல. அது உற்சாகத்தின் வெளிப்பாடு மாத்திரமே. இன்றைக்கு நாத்திகர்களின் முதன்மை கொள்கைப் பரப்புப் செயலாளராக மாறியிருக்கும் மரபியல் விஞ்ஞானி ரிச்சர்ட் டாக்கின்ஸ் வருடம் தவறாமல் கிறிஸ்துமஸ் கரோல் பாடுகிறார்.  சந்தப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் மூர்க்கத்துடன் சமயத்தையும் ஆன்மீகத்தையும் விமர்சிக்கும் நண்பர் ஒருவருடன் இதைப் பற்றி கதைத்த பொழுது அவர் சொன்னது; “கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களின் பண்டிகையா என்பது இன்னும் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது.  கிறிஸ்தவம் இல்லாவிட்டாலும் பனிக்காலத்தின் ஆழத்திலிருந்து உற்சாகத்தை மீட்டெடுக்க வேறொரு பண்டிகை கட்டாயம் கற்பிக்கப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் உற்சாகத்தின் குறியீடு. நான் கொண்டாடாமல் இருந்து அதைக் கிறிஸ்துவர்களுக்கு முழுமையாகத் தாரைவார்க்கத் தயாராக இல்லை.”   எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸைய்ம் கொண்டாடுகிறோம்.  தெரு முழுக்க வண்ண விளக்குகளும் அலுவலகத்தில் அலங்காரங்களும் நிறைய, அதிலிருந்து ஒதுக்குவது அராஜகமானதாகவும், மூர்க்கத்தனமாகவும் தோன்றுகிறது.
எனக்கென்னமோ தீபாவளிக்கும் நரகாசுரனும், கிருஷ்ணனும், ராமனும், ராமலீலாவும், ராவணனும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.  கொஞ்சம் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தால் இருபது வருடங்களுக்கு முன்னால் என் வீட்டில் கூட கிருஷ்ணனுக்கும் நரகாசுரனுக்கும் தீபாவளியில் 1% பங்குகூட இருந்ததாகத் தோன்றவில்லை. ஜப்பானில் வசித்தபொழுது தீபாவளிக்கு இந்திய நண்பர்களுடன் சேர்ந்து டோக்கியோ டை-புட்ஸு (பெரும் புத்தர்) கோயிலுக்குச் சென்றிருக்கிறோம்.
ஒரு காலத்தில் வருடத்தில் கிடைக்கும் ஒரே புத்தாடையாக தீபாவளித்துணி இருந்தது.  இப்பொழுது வாங்கி வைத்த சட்டைகளில் குறைந்தது பத்தாவது பிரிக்காமல் கிடக்கும். இருந்தபோதும் இந்த வருடம் பிடிவாதமாக தீபாவளிக்கென சட்டை வாங்கி வந்திருக்கிறேன்.  நாளை போட்டு கழற்றியெறிந்தபின் அது  கிடக்கும் இருபது முப்பதிலொன்றாக மாறியிருக்கும். ஆனாலும் இப்பொழுது உறையிலிருக்கும் அதைப் பார்க்கும் பொழுது மனதில் இனம்புரியாத உற்சாகம் பீரிடுவதையும்,  பள்ளிக்கூட நாட்களில் அணிந்த ஒவ்வொரு தீபாவளி சட்டையையும் பற்றிய நினைவுகள் மேலெழும்பி வருவதையும் எழுத்தில் வடிக்க முடியாது.  அதிசயமாக இரண்டு சட்டைகள் கிடைத்த ஐந்தாம் வகுப்பு தீபாவளி, முதன் முதல் டெரிகாட்டன் சட்டை வாங்கிய ஒன்பதாம் வகுப்பு தீபாவளி,  முதன் முதல் புதுப் பேண்ட் தைத்த பதினொன்றாம் வகுப்பு தீபாவளி, அண்ணா பம்பாயிலிருந்து துணி அனுப்பிய காலேஜ் தீபாவளி,  இவற்றோடு பல வருடங்கள் கழித்து பின் தீபாவளிக்கென துணி வாங்கிய இந்த வருடமும் நினைவில் நிலைக்கும் என்று தோன்றுகிறது.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அமெரிக்கர்களும் வரியும்
வரியை மக்களுக்கு எதிரான விஷயமாகப் பார்க்கும் விபரீதம் அமெரிக்காவில் முற்றிப்போய்க் கிடக்கிறது. வரி விதித்தால் நாட்டுக்குத் தீமை என்பதுபோல  எல்லோரும் அசட்டுத்தனமாக அரட்டுவதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது.  மீண்டும் மீண்டும் சுவரில் முட்டிக்கொள்வதைப் போல ஸ்காண்டிநேவிய நாடுகள், பிரான்ஸ்சு, பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய முதலாளி நாடுகள், இன்னும் ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலும் உயர் சதவீத வரி இருக்கிறது. இவையெல்லாவற்றையும்விட அமெரிக்கா பெரிய பொருளாதாரமாக இருக்கலாம், ஆனால் மேற்சொன்ன நாடுகளில் பலவற்றின் பொருளாதாரம் அமெரிக்காவைவிட உயர் வளர்ச்சி வீதத்தில் இருக்கிறது.  இன்னும் முக்கியமாக இந்த எல்லா நாடுகளிலும் வாழ்க்கைத்தரம் அமெரிக்காவைக் காட்டிலும் உயர்வாக இருக்கிறது.
டென்மார்க்கில் 40 சதவீத மக்கள் தங்கள் வருவாயில் 60 சதவீதத்தை வருமான வரியாகச் செலுத்துகிறார்கள்.  ஆனால் டென்மார்க்கின் வளர்ச்சிவீத
ம் அமெரிக்காவைக் காட்டிலும் அதிகம்.  பல வருடங்களாகத் தொடர்ச்சியாக லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லெகோ (விளையாட்டு சாதனங்கள்) நிறுவனத்தின் தலைமை அதிகாரிக்கு வருடாந்திர சம்பளம் வெறும் $300,000 தான், இதில் வருமான வரி போக அவர் கைக்கு வருவது $115,000 மாத்திரமே. இதைத்தான் நான் அமெரிக்காவின் வித்தியாசமாகப் பார்க்கிறேன். அமெரிக்காவில் $155 ஆயிரம் வருமானம் என்பது அற்பம்.  சமீபத்தில் நஷ்டமடைந்து நொடித்து நிற்கும் அமெரிக்க நிறுவன அதிகாரிகளின் சம்பளத்தைப் படத்தில் பார்க்கலாம்.  திரும்பத் திரும்ப சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும், வரிவிதித்தல் கொடியது என்ற பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஒழுங்குபடுத்தப்படாத சந்தைப் பொருளாதாரம் ஒரு சில தனிநபர்களுக்கலாது பொதுவில் எந்தவிதத்திலும் பயனற்றது.  அது பல்லியைப் போல வாலைக் கழற்றிவிட்டு தலையைத் தப்பிக்க வைக்கிறது.
ஒழுங்குபடுத்தப்படாத சந்தைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தகவல் பெருக்கம் விரைவுபடுத்துகிறது.  இதைப் பற்றி இன்னொரு நாள் எழுதவேண்டும்.
ரிச்சர்ட் ரைட் - பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்
ராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின் துணையுடன் பிங் ஃப்ளாய்ட் 1965 தொடக்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு இசையின் உச்சத்தையும் இரைச்சலின் துவக்கத்தையும் வேறுபடுத்திப் பார்க்க நமக்கு உதவியது. ஸிட் பாரெட் (Sid Barret)-ஆல் துவக்கப்பட்ட இந்தக் குழுவில் ஆரம்பக் காலந்தொட்டே ரிச்சர்ட் ரைட் இருந்தார்.  இவர்கள் இருவருடன் ரோஜர் வாட்டர்ஸ் (பாஸ்) மற்றும் நிக் மேஸன் (ட்ரம்ஸ்) இணைந்த இந்தக் குழுவின் முதல் பெயர் ஸிக்மா 6; பின்னர் இது பாரெட்டால் பிங் ஃப்ளாய்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் போதை மருந்துகள் தூண்டும் பிழற்வுநிலை இசையொலிகள் இந்தக் குழுவின் அடையாளமாகவும் மாறியது.   பின்னர் 1968-ல் டேவ் கில்மர் இதில் இணைந்து கொண்டார். ஸிட் பாரெட்டின் மரணத்திற்குப் பிறகு ரோஜர் வாட்டர்ஸ், ரிச்சர்ட் ரைட், டேவ் கில்மர், நிக் மேஸன் என்ற நால்வர் குழுவாக இசையின் உச்சங்களை எட்டியது பிங்க் ஃப்ளாய்ட்.
எனக்கு பிங்க் ஃப்ளாய்ட் அறிமுகமானது 1985-ல்;   கும்பகோணம் போன்ற ஊர்களில் அந்தக் காலங்களில் அதிகபட்சம் ‘இங்கிலீசு பாட்டு’ போனி எம்மின் ‘இடித்துச் சலித்தலும்’ அ-பாவின் நர்ஸரி பாடல்களும்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்பொழுது சிற்றலை வானொலியின் அறிமுகம் எனக்குப் பல வழிகளில் புதிய உலகைத் திறந்துவிட்டது.  பிபிஸி உலகச் சேவை, ஆஸ்திரேலிய வானொலி இவற்றினூடாக அன்றைய மேற்கத்திய ராக், பாப் இசையை அறிமுக விளக்கங்களுடன் கேட்க முடிந்தது. ரேடியோ மாஸ்கோ, ரேடியோ ப்ராக் போன்றவை பெத்தோவெனையும், ஹண்டலையும் அறிமுகப்படுத்தின.  வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா லூயி ஆம்ஸ்ட்ராங், ஸ்டீவி வொண்டர் என்று வேறு உலகைக் காட்டியது.  முதல் முறையாக பிங்க் ப்ளாய்ட்டைக் கேட்டது சிற்றலை வானொலியில் என்பதால் அதன் இரைச்சலிருந்து இந்த நவீன இசையை என் காதுகளால் வேறுபடுத்தி அறியமுடியவில்லை.  பின்னர் பெங்களூர் வாசம் துவங்கியபின் ஐஐஎஸ்ஸியில் துல்லியமான இசைத்தட்டிலும், அப்பொழுது பரவலாக வெளிவந்துகொண்டிருந்த ஒலிநாடாக்களிலும் ஃப்ளாய்ட்டின் ஆல்பங்களை ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினேன்.  இன்றளவும் அவர்களின் The Dark Side of the Moon, Wish you were here, The Wall இசைகள் எனக்கு ஆர்வமும் கவர்ச்சியையும் தந்துகொண்டிருக்கின்றன.
பிங்க் ஃப்ளாய்டின் வெற்றிக்கு ரோஜர் வார்ட்டர்ஸ், ஸிட் பாரெட், டேவ் கில்மர் என்று யார் முக்கியம் என்ற சர்ச்சை இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இசையில்  அவர்கள் தொட்ட உச்சங்களில் ரிச்சர்ட் ரைட்டின் கீபோர்ட்-க்கு முக்கியமான பங்கு உண்டு.  பல பாடல்கள் ரைட்டின் பல அடுக்குகளைக் காட்டும் கீ போர்ட் துவக்கத்துடன்தான்  வருகின்றன.  பாடலுக்கான மனநிலையை உருவாக்க மெதுவாகத் தொடங்கி முடுக்கிச் செல்லும் ரைட்டின் கீபோர்ட் உத்தி மிகவும் முக்கியமானது என்பது என் எண்ணம். குழுவின் பல மிகப் பிரபலமான பாடல்களை ரைட் எழுதி உருவாக்கியிருக்கிறார்.  அந்தக் காலங்களில் (ராக் இசையின் பொற்காலம்) தி ஹூ, லெட் ஸெப்ளின், பீட்டில் (அவர்களுடைய பரீட்ச்சார்த்த இசை மாத்திரமே), ஜிம்மி ஹெந்ட்ரிக்ஸ், இவர்களின் இசைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக பிங்க் ஃபளாய்டின் இசை இருந்தது. அந்த மாறுபாட்டுக்கு வேறெந்த குழுவிலும் அதிம முக்கியத்துவம் இல்லாத கீபோர்ட் வாத்தியம் இவர்களுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அந்த வகையில் பிங்க் ஃப்ளாய்டின் ஆதார ஒலி ரிச்சர்ட் ரைட்டின் கீபோர்ட்-தான் என்று தோன்றுகிறது.
ராக் உலகில் முக்கியமான பத்து ஆல்பங்கள் என்று யாராவது பட்டியலிட்டால் அதில் The Dark Side of the Moon கட்டாயம் இருக்கும். அந்த ஆல்பத்தின் முதுகெலும்புகளான The Great Gig in the Sky, Us and Them பாடல்கள் ரைட்டின் பங்களிப்பு.   இவற்றைத் தவிர Shine on You Crazy Diamond, உள்ளிட்ட பல பாடல்கள் ரைட்டின் அற்புதப் படைப்புகள். மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து ஃபளாய்டின் இன்னொரு மைல்கல் ஆல்பமான  The Wall 1982-ல் வெளியானது.  மார்க்கரெட் தாட்சரின் அரசியல், அன்றைய சில சமூக நிகழ்வுகள் போன்றவற்றைக் கருவாகக் கொண்ட இந்த ஆல்பத்தின் இசைக் கோர்ப்பின்பொழுது ரோஜர் வாட்டர்ஸ்-க்கும் ரிச்சர்ட் ரைட்க்கும் இடையே வேறுபாடுகள் துவங்கின.  தொடர்ந்து ரைட்டின் பங்கு ஃபளாய்டில் வெகுவாகக் குறைந்தது.  இதன் தாக்கத்தை 1987-ல் வெளியான A Momentary Lapse of Reason ஆல்பத்தில் அறியமுடியும்.  இதற்குப் பிறகு ரோஜரும் ப்ஃளாய்ட் குழுவிலிருந்து வெளியேறினார். டேவ் கில்மரும் நிக் மேஸனும் கொஞ்சம் நாட்களுக்குத் தனியாக இசைத்துக் கொண்டிருந்தார்கள். விரைவில் ரைட் குழுவில் திரும்ப வந்தார். இவரது வருகைக்குப் பிறகு 1994-ல் The Division Bell ஆல்பத்தில் மீண்டும் பிங்க் ஃப்ளாய்டின் பழைய அற்புத ஒலிகள் திரும்ப வந்தன.
2005 ஆம் ஆண்டில் லைவ் 8 என்ற சமூக அறக்கட்டளைக்குப் பணம் சேர்க்கும் நிகழ்வில் - கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜர் வாட்டர்ஸ், நிக் மேஸன், ரிச்சர்ட் ரைட், டேவ் கில்மர் நால்வரும் மேடையில் ஒன்றாகத் தோன்றி பாடினார்கள் (இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பொதுச்சேவை ஒளிபரப்பான PBS-ல் பல முறை இப்பொழுதும் ஒளிபரப்பப்படுகிறது).   இதன் பெரு வெற்றிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் ஒன்றாக வரக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்தன. ஆனால் ரோஜர் வாட்டர்ஸ் இது சாத்தியமில்லை என்று சென்றவருடம் சொல்லிவிட்டார். இப்பொழுது ரிச்சர்ட் ரைட்டின் இடம் வெற்றிடமாகியிருக்கிறது.
ரிச்சர்ட் ரைட் எழுதி, பிங்க் ப்ளாய்டின் மிகப் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான The Great Gig in the Sky (The Dark Side of the Moon ஆல்பம்).  இப்படித் துவங்கும்:  ‘I am not frightened to die’.  பயங்களை அறியாது இசையின் உச்சங்களைத் தொட்ட ரைட்-க்கு அஞ்சலிகள்.
Click here to view the embedded video.
சிரஞ்சீவி அரசியலுக்கு வரக் காரணம்
கடந்த பல நாட்களாக பலரையும் நான் சந்தித்து வந்தேன். சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் சந்தித்து வந்தேன். எனது உணர்வுகளை அவர்களிடம் தெரிவித்தேன். அப்படி நான் சந்தித்தவர்களில் ஒருவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
அவர் என்னிடம் பேசுகையில், …மிகக் குறைந்த சிலரே அரசியல்வாதி ஆவேன் என்றனர்….மக்கள் மனதில் அரசியல் குறித்த பயம், அவமதிப்பு இருக்கிறது. அந்த நிலையை உங்களைப் போன்றவர்கள்தான் போக்க வேண்டும். உங்களுக்கு உங்களைப் பற்றித் தெரியாது. நீங்கள் நடிகரை விட மேலானவர் என்றார்.
கம்மம் மாவட்டத்தில் ஒரு ஊர்க்காவல் படை வீரர் எனக்காக தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சிரஞ்சீவியை முதல்வராக காண முடியவில்லையே என்று எழுதியிருந்தார். இது என்னை நெகிழ வைத்து விட்டது.
அதேபோல ஐடி வேலையில் இருந்து வந்த ஒரு தம்பதியினரும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டனர். இது எல்லாம் என்னை நிறைய சிந்திக்க வைத்துவிட்டது.
எனவே இனிமேலும் அரசியலுக்கு வராமல் இருக்கும் பிழையை செய்யக் கூடாது என்ற முடிவை எடுத்தேன்.
தாளம் : உலகெங்கும் - 2
உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட.  சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை வல்லுநர்களால், சஞ்சிகைகளால், இரசிகர்களால் புகழப்படுபவர்.  கடந்த முப்பது வருடங்களாக ராக் இசை நிகழ்ச்சிகளில் ட்ரம்ஸ் கலைஞர் ஒருவருக்காக அதிகம் கூட்டம் கூடுகிறது என்றால் அது பீர்ட் ஒருவருக்குத்தான் என்று உறுதியாகச் சொல்லமுடியும்.
பீர்ட் எங்கள் ஊர்க்காரர். (டொராண்டோவில் நான் முன்பு வசித்த நார்த் யார்க் பகுதியில் ஒரு பத்து தெரு தள்ளித்தான் அவர் பூர்வீக வீடு இருக்கிறது). சிறு வயதில் பியானோ கற்கத் தொடங்கிய நீல் விரைவிலேயே ட்ரம்ஸ்க்கு மாறினார். டொராண்டோ நகரிலும் அதைச்சுற்றியுள்ள நகர்களிலும் கிளப்களிலும் தெருக்களிலும் வாசித்துக்கொண்டிருந்தவர் விரைவிலேயே கவனம்பெறத் தொடங்கினார். அதில் ஊக்கம் பெற்றவராக இசைக்குழுக்களில் சேரும் உத்வேகத்துடன் லண்டன் நகருக்குச் சென்றார். அங்கு தெருக்களையும் சிறு குழுக்களையும் தாண்டி அவரால் எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. மனம் வெறுத்துபோன பீர்ட் கனடா திரும்பினார். தொடர்ந்து டொராண்டோவில் மிகப்பிரபலமாக வளர்ந்துகொண்டிருந்த ரஷ் குழுவில் இணைந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ரஷ் குழு உலகத்தின் மிக முக்கிய ராக் குழுக்களில் ஒன்றாக வளர்ந்தது. இசை ஆர்வம் வளரும் நாட்களிலேயே பீர்ட்டுக்கு கவிதை, தத்துவம் போன்றவற்றிலும் ஆர்வம் வளரத் தொடங்கியது. அதிருஷ்டவசமாக ரஷ் குழுவின் பாஸ் கிடார் வாசிக்கும் முன்னணிப்பாடகரான கெட்டி லீ (Geddy Lee)-க்கும் இதுபோன்ற ஆர்வங்கள் இருக்க அவர்கள் பிணைப்பு நெருக்கமானது. ரஷ்-ஷின் பல பாடல்கள் அவற்றின் உயர்ந்த இலக்கிய தரத்திற்காகப் பாரட்டப்பட்டன. இவற்றை எழுதியதில் நீல் பீர்ட்டுக்கு பெரும்பங்குண்டு.
ஜாஸிலிருந்து ப்ளூஸிலிருந்தும் வேர்களைப் பெற்று ராக் அண்ட் ரோல் செடியாக வளர்ந்து விருட்சமான ராக்கிற்கு தாளவாத்தியத்தின் முக்கியத்துவம் நிறையவே உண்டு. உயர் சக்தி கிட்டார் ஸ்ட்ரம்மிங், உச்சஸ்தாயி குரல் பாடல்கள் போன்றவற்றை நங்கூரமிட்டு இரசிகளின் இதயத் துடிப்பை விரைவாக்குவதில் ராக் இசைக்கு ஈடு எதுவுமில்லை, இதில் ட்ரம்ஸின் பங்கைத் தனிப்பட்டு சொல்லவேண்டிய அவசியமும் இல்லை.  ப்ரொக் ராக் (Progressive Rock) குழுக்கள்தாம் ராக் இசையை கலைநயத்தின் உச்சம் என்று சொல்லக்கூடிய உயர் தளத்திற்கு எடுத்துச் சென்றவை. என்னுடைய ராக் ட்ரம்ஸ் கலைஞர்கள் தெரிவில் பீர்ட், ஏர்ல் பால்மர், ஃபில் காலின்ஸ், கீத் மூன் என்று பெரும்பாலும் ப்ரொக் ராக் கலைஞர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். இவர்களின் அடிப்படை ஜாஸ் ட்ரம்மிங். அது syncopation, Polyrhythms, Timing போன்ற துல்லியமான வரையறைகளுக்கு உட்படு அதே சமயத்தில் ஜாஸின் உயிர்நாதமான improvisation வழியாக படைப்பின் உச்சங்களுக்கு வழி தருகிறது.  இது என்னுடைய தனிப்பட்ட தெரிவு என்று கொண்டாலும் கூட காலத்தைக் கடந்து நிற்கும் பீட்டில்ஸின் சார்ஜண்ட் பெப்பர் ஆல்பம், ஃப்ராங் ஸாப்பா, தி ஹூ, ஃப்ளீட்வுட் மாக் போன்ற ப்ரொக் ராக் படைப்புகள் அதற்குச் சான்றாக நிற்கின்றன.  நல்ல பாடலாசிரியர், புனைவிலிகள் எழுதிய எழுத்தாளர், என்றைக்கும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர் என்று பல தகுதிகளால் நீல் பீர்ட்-டை ஒரு முதல்தர ப்ரொக் ராக் கலைஞர் என்று சொல்லமுடியும்.
Syncopation, Polyrhythm,  போன்றவை குறித்த எளிய விளக்கங்களை என்னுடைய இந்த ஜாஸ் இசை அறிமுகப் பதிவில் காணலாம்.
எல்லோரையும் போல மிகச் சாதாரணமான ட்ரம் தொகுதிகளுடன்தான் பீர்ட்டும் தன் வாழ்க்கையைத் துவங்கினார். விரைவிலேயே பலவகையான ட்ரம்களை இணைத்துக் கொண்டார்.  இப்பொழுது மிக அதிகமான தாள வாத்தியங்களை ராக் இசையில் வாசிப்பவராக அறியப்படுகிறார். நீல்-ன் ட்ரம் அமைப்பைப் படத்தில் காணலாம். அவருடைய தொகுதியில் பல சிம்பல்கள் உண்டு. இவை பெரும்பாலும்  அவருக்காக ஸேபியன் என்ற கனேடிய நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன. துல்லியமான அதிர்வுகளைக் கொண்ட சிம்பல்களை நீல்-க்காகத் தயாரிக்க ஸேபியனுடன் இணைந்து நீல் வடிவமைப்புகளில் பங்கு பெறுகிறார். இப்படி ஒவ்வொரு சிறு விஷயங்களிலும் துல்லிய கவனம் செலுத்துவது நீல் பீர்ட்டின் இயல்பு.  இத்தனை வாத்திகளையும் தன்னுடைய கையெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அவரைச் சுற்றி 306 டிகிரி வட்ட அமைப்பு தேவைப்படுகிறது.  அந்த வட்ட அமைப்பில் சில நேரங்கள் பார்வையாளர்களுக்கு முதுகைக் காட்டி வாசிக்க உடன்பாடு இல்லாததால் விசேடமான சுழல்மேடை கச்சேரிகளில் அவருக்காக வடிவமைக்கப்படுகிறது.  ட்ரம்ஸ் தனியாவர்த்தனம் வாசிக்கும்பொழுது இந்தச் சுழல்மேடையை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்வதை இங்கே வீடியோவில் பார்க்க முடியும்.
Click here to view the embedded video.
இங்கிருக்கும் வீடியோ ரஷ் 2004ஆம் ஆண்டு உலகப் பயணத்தில் மிகப் பிரபலமான Der Trommler என்ற தனியிசை, இதை முதலில் ஃப்ராங்ஃபுர்ட் நகரில் வாசித்தார். நீல் சுற்றுப்பயணங்களின்பொழுது ஒவ்வொருமுறையும் இதை வாசிக்கும்பொழுது பல புதிய மாறுதல்களைக் கொண்டுவருவார். தொடர்ந்து பிரசிலின் ரியோ நகரில் இதை இன்னும் மெருகூட்டி O Baterista என்ற பெயரில் வாசித்தார். இந்தத் தனியிசை ராக் உலகின் மிக முக்கியமான ட்ரம்ஸ் தனியிசையாக பலராலும் பாராட்டப்படுகிறது.  இந்த ட்ரம்ஸ் தனியிசை பல பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு விசேட பண்பு உண்டு.   Anatomy of a Drum Solo என்ற இரட்டை டிவிடி தொகுதியில் டெர் ட்ரோம்லரின் ஒவ்வொரு பகுதியையும் பற்றி விரிவாக விளக்குகிறார். இசையில் ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரையும் இந்த டிவிடியைத் தவறாது பார்க்கப் பரிந்துரைக்கிறேன். பொதுவில் ராக் இசைக்கலைஞர்கள் என்றால் உடல் முழுக்க பச்சைக்குத்திக் கொண்டு, போதை மருந்துகளில் மூழ்கியிருப்பவர் என்ற பிம்பம்தான் இருக்கிறது. நீல் இந்த டிவிடியில் ஒரு தேர்ந்த, அற்புதமான ஆசிரியரைப் போன்று தாளவாத்தியங்களின் சிறப்புகள், தான் எப்படி ஒவ்வொரு வாத்தியத்தையும் தேர்ந்தெடுத்தேன், அதை எப்படித் தனித்துவமாக, அதேசமயத்தில் தொடர்பு நீங்காமல் இந்த ஸோலோ-வை வடிவமைத்தேன் என்று விளக்குகிறார்.  அனாட்டமி… அடர்வட்டு என் வீட்டில் எல்லோராலும் மிகத் தீவிரமாக இரசிக்கப்படும் ஒரு இசை வட்டாக இருக்கிறது. (இந்த டிவிடியைப் பார்த்ததிலிருந்து ட் ரம்ஸ்தான் கற்றுக்கொள்வேன் என்று அடம்பிடித்த என் இளைய மகனை வயலின் பக்கம் திருப்ப ஆறுமாதமானது).
நீல் பீர்ட்டைப் பற்றிய இந்த அறிமுகம் நீண்டு போய்விட்டதால் Der Trommler-ன் சிறப்புகள் அதில் வாத்தியங்களின் பயன்பாடு போன்றவற்றைப் பற்றி அடுத்த பகுதியில் விளக்க முயற்சிக்கிறேன். இந்த சோலோவைப் புரிந்துகொள்வது ராக் இசையின் ட்ரம்ஸ் பயன்பாட்டுக்கு ஒரு அற்புதமான அறிமுகமாக இருக்கும்.
ஒலிம்பிக்ஸ் - பிம்பங்களும் சிதைவும்
ஒலிம்பிஸ் துவக்க விழாவின் உலகெங்கும் ஒளிபரப்பட்ட அற்புதமான வாணவேடிக்கைக்காட்சிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் நுட்பத்துடன் உன்னதமாக்கப்பட்டவை என்று தெரியவந்திருக்கிறது.  இப்பொழுது எல்லாவற்றையும்விட எரிச்சலூட்டும் இன்னொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. துவக்கவிழாவில் குட்டி தேவதையைப் போன்ற தோற்றத்துடன் நளினமான அசைவுகளுடன் பாடிய பெண் உண்மையிலேயே பின் நின்று வேறொரு பெண் பாட வெறும் வாயசைப்பைத் தந்திருக்கிறாள் என்று தெரியவந்திருக்கிறது.  காட்டப்படும் பிம்பம் அப்பழுக்கற்றதாக இருக்க வேண்டும் என்று உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாடெங்கும் போட்டிகள் நடத்தி நல்ல குரல் வளம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பார்க்க அழகாக இல்லை என்ற காரணத்தால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறாள்.  ஏற்கனவே தொலைக்காட்சி பழக்கம் உள்ள, விளம்பரங்களில் நடித்த அனுபவமுள்ள வேறொரு பெண் அற்புதக் குரலுக்குச் சொந்தக்காரியாக உலகின் முன் காட்டப்பட்டிருக்கிறாள்.
“I think the viewers should be able to understand that, in the national interest, for the perception of the country, this was an extremely important and serious matter,” Chen Qigang, the ceremony’s chief music director, said in an interview with a Beijing radio station.
ஒன்பது வயதுக் குழந்தையை அழகற்றது என்று சொல்ல அசாத்திய மன உறுதி வேண்டும்.
இந்த ஒலிம்பிக்ஸ் நடந்து முடிந்தபின் சீனாவில் சில முக்கியமான அரசியல் முடிவுகள் வரலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம் உள்ளேயிருக்குமாம் ஈறும்பேனும்.
இலக்கிய விமர்சனம்
நன்றி : xkcd.com
தாளம் - உலகெங்கும் - 1
சிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது.  தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த வீட்டு மாமாவிடம் ஓசி ஹிண்டு வாங்கி படித்துக்கொண்டே தாளத்தில் மயங்கிக் கிடப்பேன். கணேசய்யருக்குக் காசுகொடுத்து படிப்பிக்க என் குடும்பத்தில் வலுவில்லை.  தெருவெல்லாம் புறப்பாடு நடத்திவரும் காளஹத்தீஸ்வரரையோ, பாணபுரீஸ்வரரையோ, படைவெட்டி மாரியம்மனையோ ஜனங்கள் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நான் மேளத்தையும், பறையையும் மாத்திரமே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். சாவு ஊர்வலத்தைப் பார்த்துப் பயப்படும் நண்பர்களுக்கிடையில் (பாடைலேந்து விழுந்த பூவ மிதிச்சா உங்க ஊட்லயும் சாவு விழும்) பறையைக் கேட்பதற்காக இரகசியமாக பிண ஊர்வலத்தைத் தொடர்ந்து சுடுகாடுவரை சென்றதுண்டு. அந்த ஊர்வலத்தில் வாசிக்கும் பறையொலியை லயம் மாறாமல் பள்ளிக்கூட மேசையில் வாசிப்பேன். இது பத்து வயதிலிருந்து பதினைந்து வயதுவரை. பாட்டி “தாளம் போட்ற வேதாளத்தப் பாரு, கைய ஒடிச்சி கட்டல வை” என்று திட்டுவதெல்லாம் ஒரு பொருட்டில்லை.
தொடர்ந்து கூடையில கருவாடு, தண்ணி கருத்துருச்சு, ஆசையக் காத்துல தூதுவிட்டு, நடைய மாத்து, ஏஞ்சோடி மஞ்சக் குருவி, போன்ற தாளம் தூக்கி நிற்கும் பாடல்களுக்குத் தப்பாமல் வாசிப்பது நண்பர்களிடையே பிரபலம்.  பிறகு ஒருகாலத்தில் நான் மேசையில் தட்டும் அபத்தங்களின்மீது எனக்கே உண்டான சலிப்பால் இது கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோயிற்று. தொடர்ந்து பலவகையான இசைகளைக் கேட்க ஆரம்பிக்க உலகெங்கிலும் இருக்கும் தாளவாத்தியங்களின்மீது பரிச்சயமுமண்டாக பரந்துபட்ட கலாச்சாரங்களுக்கிடையே இருக்கும் தாள ஒற்றுமைகள், வேறுபாடுகள் மீது தீராத வியப்பு கூடிக்கொண்டே போகிறது.  தாள வாத்தியங்களின் மீது எனக்கிருக்கும் ஈர்ப்பை உங்களுடன் பகிர்துகொள்ளும் முயற்சி இது. (சில மாதங்களாக எழுத விட்டுப் போனதை மீட்டெடுக்கும் முயற்சியும் கூட.  எப்பொழுதெல்லாம் வலைப்பதிவு எழுதுவதில் சலிப்பு ஏற்பட்டு நின்றுப்போகிறதோ அப்பொழுதெல்லாம் அதை மீட்டெடுக்க இசை குறித்து எழுதுவது உதவியிருக்கிறது. இந்த முறை தாள வாத்தியங்கள் குறித்தான இந்தத் தொடர் உதவுமென்று நம்புகிறேன்).
இந்தத் தொடரில் நமக்கு மிகவும் பரிச்சயமான மிருதங்கம், தவில், பறை, உறுமிமேளம், உடுக்கு போன்ற வாத்தியங்கள் வரும், சிவமணி, உமையாள்புரம் சிவராமன், ஜாகிர் ஹுசேன், ஆனையாம்பட்டி தண்டபாணி, விக்கு விநாயகராம் போன்ற பெயர்கள் அடிபடக்கூடும்.  சற்று குறைவாக அணுக்கமுள்ள தோளக், பஞ்சவாத்தியம், செண்டை போன்றவையும் வரும்.  என் மனதைக் கவர்ந்த ராக் இசை தாள மேதைகளான நீல் பீர்ட், கீத் மூண், ஏர்ல் பால்மர், மைக் ஃப்ளீட்வுட், பட்டி மைல்ஸ், ஸ்டீவ் கோப்லண்ட், ஜிஞ்சர் பேக்கர், ரிங்கோ ஸ்டார், நிக் மேஸன், பில் காலின்ஸ், என்ற பல நட்சத்திரங்கள் கட்டாயம் வருவார்கள். எனவே க்ரீம், ரஷ், போலிஸ், லெட் ஸெப்ளின், தி ஹூ, டீப் பர்ப்பிள், ப்ளாக் ஸப்பாத், ஸண்டானா, போன்ற சூப்பர் குழுக்களும் இடம்பெறும்.
ஒரு கட்டத்தில் எனக்கு தாளங்களின் மீதிருந்த ஈர்ப்பு குறைந்துபோனபோழுது (பொதுவில் இசையின் மீதான ஈர்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும்), அதை மீட்டெடுத்துத் தந்தது ஜாஸ் இசைதான். ஆப்பிரிக்க இசையின் அடிப்படையில் உருவான ஜாஸில் எப்பொழுதுமே தாளத்திற்கு முக்கிய இடமுண்டு. ஜாஸின் பல காலப்பிரமாணங்களை நிர்ணயிப்பது அதன் லயம்தான். ஜாஸ் ட்ரம்ஸ் மேதைகளான ஜீன் க்ருபா, பட்டி ரிச், ஜோ மொரெல்லோ, பில்லி கோப்ஹம், போன்றவர்களின் புகழ்பாட இது ஒரு நல்ல சந்தர்ப்பம். பொதுவில் ஜாஸில் இருக்கும் தாள ஓட்டங்களைப் பற்றியும் எழுதக்கூடும். ஜப்பானின் தைக்கோ ட்ரம்ஸ், காங்கோ, நைஜீரியா உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளின் அற்புதமான தாளங்கள், கரீபியன் ஸ்டீல் ட்ரம்ஸ், போன்றவற்றையும் எழுதலாம். எல்லாவற்றையும் எழுதிவிட்டு நம் தமிழ்த் திரையிசையை எப்படி எழுதாமல் போவது?
இந்தத் தொடரில் இயன்ற அளவுக்கு சலனப்படத் துண்டுகளை (கூகிளாண்டவரின் உபக்கிரகமான யூட்யூப் உபயத்தில்) நிறையத் தர உத்தேசம். நம்மூர் வாத்தியங்களையும் கலைஞர்களையும் பற்றி எழுதும்பொழுது இயன்ற அளவுக்கு அதிகப் பிரபலமில்லாத, மறைந்துகிடக்கும் அற்புதமான இசைத்துணுக்குகளைப் பயன்படுத்த உத்தேசம். உண்மையிலே ஆர்வமுள்ள நண்பர்களுடன் தனிப்பட்ட முறையில் இந்த இசைக்கோப்புகளை முழுமையாகப் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் ஏதுமில்லை. ஏனென்றால் இவற்றில் பல இப்பொழுது வர்த்தக முக்கியத்துவம் இல்லாத, பழைய இசைத்தட்டுகளிலிருந்து பெறப்பட்டவை. ஜாஸ் துணுக்குகள்கூட அப்படித்தான் இருக்கும்.
ஒரு முக்கியமான எச்சரிக்கை: நான் முறைப்படி சங்கீதம் கற்றவன் கிடையாது. என்னுடைய புரிதல்கள் எல்லாம் ஒரு பாமரனின் கண்ணோட்டம்தான். இப்படி ஒரு தொடரை எழுத எனக்கு எந்தத்தகுதியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக இப்படியெல்லாம் யாரும் தமிழில் எழுதக் காணவில்லை. எனவே ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாக நானே பலகையில் ஏறி உட்கார்ந்துகொள்கிறேன். இடுப்புப்பட்டைகளைக் இருக்கக் கட்டிக்கொண்டு நீங்களும் தயாராகுங்கள்.
தன்னை மறந்து தாளம் தட்டாத மனிதர்கள் இந்த உலகில் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். வாய் விட்டுப் பாடத் தயங்குபவர்கள்கூட தன்னிச்சையாகத் தொடையில் தட்டுவதைப் பார்க்கமுடியும்.  இந்தத் தொடரை உலகெங்கிலும் இருக்கும் அமெச்சூர் தாளக் கலைஞர்களுக்குப் பாராட்டுடன் தொடங்கலாம்.
Music for One Apartment and Six Drummers
<embed src="http://media.mtvnservices.com/mgid:hcx:content:atom.com:f4b2f147-8a0d-4868-9455-381884cff6bd" type="application/x-shockwave-flash" wmode="window" width="425" height="354" allowFullscreen="true" flashvars="autoPlay=false"></embed>
Producer: KOSTR-FILM
Writers: Ola Simonsson, Johannes Stjarne Nilsson
Cast: Johannes Bjork, Magnus Bjorjeson, Marcus Haraldson, Fredik Myhr, Sanna Persson, Anders Vestergard, Barbro Gustafsson Lofgren, Zerny Thor, Anders Jansson
பிரிட்னி ஸ்பியர்ஸ்-ம் ஜான் மெக்கெய்னும்