விளம்பரம்

Second hand smoking

மனதைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களில் இன்னொன்று. மாற்றார் புகையை சுவாசித்தல் (Second hand smoking) எந்த அளவிற்குத் தீங்கானது என்று இந்தப் படம் அழகாகக் காட்டுகிறது. எதிர்ப்புறத்திலிருந்து வரும் புகையைக் காட்ட சிகரெட்டைத் திருப்பி வாய்ப்பக்கம் புகையச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உறைந்து போன பெண்ணின் முகம் நீண்ட காலமாக மாற்றார் புகையைச் சுவாசித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மிகவும் அற்புதமான வடிவாக்கம்.
Client: Droits Des Non Fumeurs
Agency: BDDP Unlimited, Paris
Creative Director: Guillaume Ulrich [...]


குழந்தைத் தொழிலாளர்கள்

என்னைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களின் வரிசையில் இன்னொன்று:
மிகச் சுருக்கமான, கோட்டுச் சித்திரத்தின் மூலம் அதிக தாக்கம் உண்டாக்கும் விளம்பரம் இது. இதன் செய்தி வாசகம் “Say no to child labour” என்பது. சிறுவயதில் வேலை செய்து சிறைப்பட்டுக் கிடக்கும் பெண் நோட்டுப் புத்தகத்தின் வாயிலாக வெளியுலகைக் காணமுடியும் என்று சுட்டுகிறது. இன்னொரு வகையில் படிப்பறிவைப் பெறுவதன் மூலம் சிறுமிக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் சாத்தியம் இருப்பதையும் சொல்லுகிறது. எந்தவிதமான [...]


விளம்பர உத்தி : மறைமுக விளம்பரம்

நேரடியாக நெத்தியடியாகச் சொல்லும் விளம்பரங்களைக் காட்டிலும் மறைமுகமாகச் சுட்டிச் செல்லும் விளம்பரங்கள் சுவாரசியமானவை. இதற்கு அற்புதமான உதாரணம் இங்கே. இது ஜெர்மனியின் டுஸெல்டார்ஃப் நகரின் வீதியில் வைக்கப்பட்ட விளம்பரம். வயிற்றுப் போக்கிற்கு கழிவறைக் காகிதம் மாத்திரம் போதாது எங்கள் மாத்திரை தேவை என்று சுட்டிச் செல்கிறது.
மலம் நிறுத்தும் மாத்திரைக்கு சுவாரசியமாக விளம்பரம் செய்வது கடினம். இந்த விளம்பரம் சுவாரசியமானது மாத்திரமில்லாமல், விற்கப்படும் பொருளின்மீது நிர்வாகத்திற்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இது 2007 ஆம் [...]


பெண்ணழகு - கான் பெரும்பரிசு விளம்பரம்

வருடாந்திர கான் (Cannes) திரைப்பட விருந்துகள் விழா திரையுலகில் உலக அளவில் முக்கியமான ஒன்று. திரைப்படங்களுடன்கூட விளம்பரங்களுக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டின் அதிமுக்கிய விளம்பர விருது (க்ரான் ஃப்ரீ) டொராண்டோ நகரில் உருவாக்கப்பட்ட Evolution என்ற ஒரு நிமிடப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இது விளம்பர உலகில் ஒரு மைல்கல்.


வண்ணங்கள் உயிர்த்தெழும்பொழுது

இன்னொரு கண்ணைக் கவரும் விளம்பரம். இது சோனி நிறுவனத்தின் Bravia தொலைக்காட்சிகளுக்காக அர்ஜெண்டினாவைச் சேர்ந்த EURO RSCG நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
Optical Illusions என்ற கட்புல மாயம் வகைப் படங்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். (சலிக்கும் அளவுக்கு). ஆனாலும் இந்தப் படத்தில் பல வண்ணங்களையும் அமைப்புகளையும் திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அச்சில் வெளிவரும் விளம்பரத்தை உற்றுப் பார்க்கும்பொழுது சலனங்கள் தோன்றுவது தொலைக்காட்சியின் உயிர்ரோட்டத்தை அழகாக விளம்பரிக்கிறது.


Sexuality and U

புத்திசாலித்தனமாகவும், கலைநுட்பத்துடனும் உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் எப்பொழுதுமே ஒரு நல்ல கலைப்படைப்பைத் துய்த்தலுக்கு நிகரான மகிழ்ச்சியைத் தரக்கூடியன. இனி தொடர்ந்து அவ்வப்பொழுது காணும் நல்ல விளம்பரங்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதலாமென உத்தேசம். ஆர்வமுள்ள நண்பர்களுடன் இவற்றைப்பற்றி அலசவும் ஆவல். இவற்றில் பெரும்பாலானவை பொதுநல விளம்பரங்களாகவும் இருக்கும்.


அடிமை ஒழிப்பு : விளம்பரம்

சமீபத்தில் பார்த்த சமீபத்தில் பார்த்த அற்புதமான விளம்பரங்களில் ஒன்று. பிரேசில் நாட்டில் அடிமை ஒழிப்புக்காகப் பாடுபடும் தன்னார்வக் குழு ஒன்றினால் வெளியிடப்பட்டது. விரியும் புத்தகமும் உடையும் விலங்கும் பல விஷயங்களைச் சொல்லாமால் சொல்கின்றன. (பெரிதாகப் பார்க்க படத்தில் சொடுக்கவும்)


நெத்திலயா எளுதி ஒட்டியிருக்கு

வாத்தியார் அடிக்கடி பள்ளிக்கூடத்தில் சொல்லும் வாசகம் இது. ஆனால், எழுதி ஒட்டிக் கொள்ளச் சொல்லி இப்பொழுது ஒருவர் நெற்றியை வாடகைக்கு விட்டிருக்கிறார். ஈபே வழியாக தன்னுடைய நெற்றியில் விளம்பரங்களை எழுதிக்கொள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுவரை அதிகபட்சமாக ஒரு மாத்திற்கு $322 டாலர்கள் வாடகைக்குத் தர முன்வந்திருக்கிறார்களாம். பலான விளம்பரங்கள், வெறுப்பைத் தூண்டுபவை இவற்றைத்தவிர வேறு நேர்மையான எல்லா சமாச்சாரங்களுக்கும் என் நெற்றியில் இடமுண்டு என்கிறார்.
பிழைப்பதற்கு இப்படியரு எளிதான வழி. [...]