• பொது

    மருந்தைக் கொடுக்குமுன் குலுக்கவும்

    by  • December 1, 2005 • பொது • 5 Comments

    இரண்டு நாட்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் வந்த இந்தக் கருத்துப்பத்தி அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அமெரிக்காவின் இப்பொழுது மருந்து நிறுவனங்கள் விற்பனையாளர்கள் வேலைக்குப் பெரும்பாலும் பெண்களைத்தான் (அழகான, பொன்னிறத்தலைச்சிகளை) எடுக்கிறார்களாம். நான் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதையோ, அழகான பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதையோ எதிர்ப்பவனல்லன். ஆனால் அழகு ஒன்றே காரணம் காட்டி மருந்தை விற்கும் தொழிலுக்குப் பெண்களை எடுப்பது வருத்தந்தருவதாக, எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

    Read more →

    ஹிந்துவின் சினிமா விமர்சனத் திருட்டு

    by  • November 29, 2005 • பொது • 17 Comments

    நீனா என்ற (ஆங்கில) வலைப்பதிவர் தி ஹிந்துவில் கௌதமன் பாஸ்கரன் என்பவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் எப்படித் தொடர்ச்சியாக நியூ யார்க் டைம்ஸ் பதிப்பிலிருந்து திருட்டுத்தனமாக உருவப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி விபரமாக எழுதியிருக்கிறார். Alexander, Mona Lisa Smile, The Forgotten, Troy, Aviator போன்ற படங்களுக்கான விமர்சனங்களில் நி.யா.டைம்ஸின் விமர்சன வார்த்தைகள் எப்படி உருவிச் செருகப்பட்டிருக்கின்றன என்று விபரமாக எழுதியிருக்கிறார் நீனா.

    Read more →

    ஊழல் – இன்னொரு பலி : மஞ்சுநாத் சண்முகம்

    by  • November 23, 2005 • பொது • 7 Comments

    இன்னொரு சத்யேந்திர தூபே. மஞ்சுநாத் சண்முகத்தின் உடல் 20ம் தேதியன்று லக்னோவுக்கு அருகில் சீதாப்பூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சுமந்து சென்ற கார் சுலக்ஷ்ண் மித்தல் என்ற பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மகனுடையது. கொல்லப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாகத்தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் வர்த்தக மேலாளரான மஞ்சு நாதன் என்றழைக்கப்படும் மஞ்சுநாத் சண்முகம் முறைகேடுகளின் காரணமாக மித்தலின் பெட்ரோல் பங்கை இழுத்து மூட உத்தரவிட்டிருந்தார். தன்னுடைய கடைமைச் செய்ததற்காக உயிரை இழந்திருக்கும் இந்த இளைஞர் லக்னோ [...]

    Read more →

    தில்லி சட்டசபை உறுப்பினர்களுக்கு சம்பள இரட்டிப்பு

    by  • November 22, 2005 • பொது • 0 Comments

    இன்றைக்கு படித்த தி ஹிந்துவின் இந்தச் செய்தி ஆச்சரியத்தைத் தருகிறது. தில்லி சட்டசபை உறுப்பினர்களுக்கும், மந்திரிகளுக்கும் சம்பளம் இரட்டிக்கப்படுகிறதாம். முதலமைச்சருக்கு மாதம் அரை இலட்சம் சம்பளமாகக் கொடுக்கப்படவிருக்கிறது (கட்டாயம் இவர்களுக்கு இலவசக் குடியிருப்பு, வாகன வசதி, இவையெல்லாம் சட்டபூர்வமாகவும், தினசரி சமையலுக்குக் கத்தரிக்காயிலிருந்து இரவு விருந்துக்கு சாராயம் வரை திருட்டுத்தனமாகவும் இலவசமாகக் கிடைக்கும்). என்ன ஒரு விரயம்!! நானறிந்த வகையில் எந்த ஒரு ப்தவியிலும் சம்பளம் ஒரே தவணையில் இரட்டிக்கப்படுவதில்லை. (பல நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு இப்படிக் [...]

    Read more →

    வேதிஆயுதங்களும் அமெரிக்காவும் – சாத்தான் ஓதும் வேதம்

    by  • November 20, 2005 • பொது • 7 Comments

    ஈராக்கின் மீது போர் தொடுக்கச் சென்ற பொழுது அமெரிக்கா உலகிற்குக் கூறியது – “சதாம் ஹுசேன் ஈராக்கியர்கள் மீது அணு ஆயுதங்களையோ வேதி-ஆயுதங்களையோ பயன்படுத்தக் கூடும். இந்தப் பேரழிவிலிருந்து ஈராக்கிய மக்களைக் காப்பதற்காகத்தான் நாம் அதன் மீது போர் தொடுக்கிறோம்”. சதாம் ஹுசேன் குவித்துவைத்திருப்பதாகச் சொல்லப்பட்ட பேரழிவு ஆயுதங்களைத் தோண்டியெடுக்க என்று சொல்லிக் கொண்டு சென்ற அமெரிக்காவால் இன்றுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு ஆயுதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் நிலைமை இப்பொழுது முற்றிலும் மாறாகத் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவே [...]

    Read more →

    கே.ஆர். நாராயணன் – காந்தி உரையாடல்

    by  • November 13, 2005 • பொது • 6 Comments

    காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணணைப் பற்றிய விரிவான குறிப்புகளும் அஞ்சலிகளும் வந்திருக்கின்றன. தமிழ் வலைப்பதிவுகளில் பத்ரி அவரைப் பற்றி எழுதியிருக்கிறார். திரு. நாராயணனுக்கு என்னுடைய அஞ்சலியாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக அவர் காந்தியைக் கண்ட பேட்டியின் ஒரு பகுதியைத் தமிழாக்கப்படுத்தித் தருகிறேன். டாட்டா மானிய உதவியைப் பெற்று லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்க்குச் செல்லவிருந்த கே.ஆர். நாராயணனிடம் குளிரைத் தாங்கக்கூடிய உடைகள் இல்லாததால் மறு வாரம் செல்லவிருந்த கப்பலைத் தவறவிட்டுவிட்டு ஆறு மாதம் காத்திருக்க நேர்ந்தது. [...]

    Read more →

    பொருளாதாரச் சுதந்திரம் :: தமிழகம் முதலிடத்தில்

    by  • November 12, 2005 • பொது • 1 Comment

    பிஸினஸ் ஸ்டாண்டார்டின் இந்தக் கட்டுரை பொருளாதாரச் சுதந்திரத்தில் இந்திய மாநிலங்களுக்குள்ளே தமிழகத்தை முதலிடத்தில் வைக்கிறது. மூன்று முக்கிய தலைப்புகளின் அடிப்படையில் இந்த் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தின் அளவு – வருமானம், செலவு, மாநில உற்பத்தித்துறையில் அரசின் பங்கு, சக்தி உதவித் தொகை, அமைப்பு ரீதியான வேலைகளில் அரசின் பங்கு, … சட்ட அமைப்புமுறையும் சொத்துரிமை பாதுகாப்பும் – திருடப்பட்ட சொத்துக்களின் மீட்டெடுப்பு, கொடுங்குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், தீர்க்கப்பட்ட வழக்குகள்,…) கடன், வேலை மற்றும் வாணிக ஒழுங்கமைப்பு (குறைந்தபட்ச [...]

    Read more →

    எளியவனுக்கு உபதேசம்

    by  • November 12, 2005 • பொது • 2 Comments

    சென்ற வாரம் ஐரோப்பாவில் நடந்த உலக வர்த்தப் பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து பிரஸில் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் முன்னேறிய நாடுகள் (அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான்) தங்கள் விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை நிறுத்தாதவரை வர்த்தக தாராளமயமாக்கல் பேச்சுக்கள் இம்மியளவும் நகராது என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். நேற்றைய நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் பிரஸில் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரைப் பாராட்டியிருக்கிறது. பொதுவில் அமெரிக்காவில் தற்பொழுது நிலவும் பிரெஞ்சு எதிர்ப்பை உள்ளார்ந்த நோக்கமாகக் கொண்டிருந்தாலும் நி.யா.டைம்ஸ் வளர்ந்துவரும் நாடுகளின் நிலைப்பாட்டை தயக்கமின்றி [...]

    Read more →

    CBSE : ஒற்றைப் பெண் குழந்தைக்கு இலவசக் கல்வி

    by  • November 5, 2005 • பொது • 35 Comments

    சமீபத்தில் இந்தியாவின் மத்திய உயர்நிலைப் பள்ளிக் கல்வி குழுமம் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு தனது மத்திய பள்ளிகளில் இலவசக் கல்வி தருவதாக அறிவித்திருக்கிறது. ஒற்றைக் குழந்தையாக இருந்தால் முழு உதவியும், இரண்டு பெண்குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் பாதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. வீட்டில் ஒரு ஆண் குழந்தை இருந்தால் கூட இந்தத் தகுதி கிடையாது என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இருக்கும் பராபட்சத்திற்குப் பரிகாரமாக இந்த உதவி இருக்கும் என்று [...]

    Read more →

    க்ளீவ்லாண்ட் , சிகாகோ -காரார்கள் யாராவது இருக்கிறீர்களா?

    by  • October 25, 2005 • பொது • 2 Comments

    அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு அமெரிக்க-கனேடிய சிறப்புக் குழு சந்திப்புக்காக ஒஹயோ மாநிலம் க்ளீவ்லாண்ட் செல்லவிருக்கிறேன். வேலைகளுக்கு இடையில் நிறைய மாலை நேரம் வெட்டியாக இருப்பேன் என நினைக்கிறேன். யாராவது நண்பர்கள் இப்பகுதியில் (அல்லது அண்டை நகரங்களில்) இருந்தால் சந்திக்க விருப்பம். (ஒரு காலத்தில் நண்பர் செல்வராஜ் இங்கிருந்தார்). அடுத்த மாதம் இரண்டு நாட்கள் இன்னொரு மாநாட்டிற்காக சிகாகோ பயணம் இருக்கிறது. இங்கும் யாராவது இருக்கிறீர்களா? அறியத் தரவும்.

    Read more →