மீள்வரவு – சோதனை
by வெங்கட் • January 8, 2007 • பொது • 14 Comments
நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிய உத்தேசம். இது சோதனைப் பதிவு.
Read more →நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பதிய உத்தேசம். இது சோதனைப் பதிவு.
Read more →நூறு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு தொழிலில் புதுமை புகுத்துவது என்பது ஆகக்கூடி இயலாத காரியம். ஆனால், அவ்வப்பொழுது அப்படியொரு முயற்சி அங்குமிங்குமாகத் தோன்றுபொழுது அதைக் கண்டுபிடித்தவரைப் பாராட்டத் தோன்றுவது நிச்சயம். இது சமீபத்தில் அப்படியொரு நிகழ்வு.
Read more →என்னால் சமீப காலமாக அதிகம் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லை. எழுதுவதும் நெருக்கியடிக்கும் வேலைகளுக்கிடையே சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்று எதேச்சையாக தமிழ்ப்பதிவுகளைப் படிக்கலாம் என்று ஆரம்பித்தபொழுது இந்த அதிர்ச்சிதரும் செய்தி கண்ணில்பட்டது. தேனீ யுனிகோட் என்ற எழுத்துருவை வடித்து இலவசமாகத் தந்த நண்பர் திரு. உமர் மறைந்துவிட்டதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. சொல்லமுடியாத வேதனை மனதைப் பிழிகிறது. இது சற்றும் எதிர்பாராத விதத்தில் வந்து தாக்கியிருக்கும் செய்தி. அவரைப் பிரிந்து தவிக்கும் அவரது உறவினர்கள், மற்றும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த [...]
Read more →நண்பர் காசி தமிழ்மணம் தளம் விற்பனைக்குத் தயாராக இருப்பதாகத் திறந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ் வலைப்பதிவு உலகில் இது மிகவும் முக்கியமான அறிவிப்பு. கிட்டத்தட்ட 90% தமிழ் வலைப்பதிவு வாசகர்கள் தமிழ்மணம் வழியாகவே பதிவுகளைச் சென்றடைகிறார்கள் என்பது என் கணிப்பு. சென்ற வாரத்தில் ஸ்ட்ரெப் த்ரோட் என்ற பாக்டீரியா தொற்றால் அவதியுற்றுக்கொண்டிருந்ததாலும், இந்த அவதிக்கு இடையிலும் அலுவலக வேலைகள் திமிறி நின்றதாலும் இதெல்லாம் என் கண்ணில் படவேயில்லை. இதைக் குறித்து மு.மயூரன் எழுதியிருக்கும் பதிவில் தமிழ்மணத்திற்கு நான் [...]
Read more →மதுரைத் திட்டத்தின் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் ஜுலை முதல் வாரத்தில் டொராண்டோ வரவிருக்கிறார். இவரது வருகையையொட்டி டொராண்டோ தமிழ் கழகத்தின் (MACA) இலக்கியக்குழு ஒரு விசேட நிகழ்வை ஒழுங்கைமக்கவிருக்கிறது ஒழுங்கமைக்கவிருக்கிறது. இது ஜூலை 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. இடம், காலம் முடிவானபின் அறியத் தருகிறேன். மதுரைத் திட்டம், தமிழிலக்கியம், தமிழ் கணிமை இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விழைகிறேன். 1998-ல் அதிகாரபூர்வமாக மதுரைத் திட்டம் துவக்கப்படுமுன்னரே கல்யாண் இதையொட்டிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். 1995-ல் நான் ஸ்காட்லாந்தில் வசித்தபொழுது தமிழ் [...]
Read more →என்னுடைய முந்தைய பதிவில் இட ஒதுக்கீடு செயலாக்க வழிமுறைகளைப் பற்றிப் பேசும்பொழுது பயன்பெற்றவர்களை அதிலிருந்து வெளியேற்றும் வழியையும் ஆராய வேண்டும் என்று சொல்லியிருந்தேன். இதைப் பற்றிப் பேசும் “என் உளவியலை” கார்த்திக் விமர்சித்திருந்தார். அவருக்குப் பதிலாக இது. {இந்தப் பதிவை நான் எழுதுவதால் நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம். இதன் நடைமுறைகளின் ஒரே ஒரு கூறை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். சொல்லப்போனால் கார்த்திக் இதை எழுப்பியிராவிட்டால் நான் இதைப் பற்றி [...]
Read more →நான் கடந்த நான்கு வருடங்களாக என்னுடைய வீட்டிலிருந்து என் தளத்தை நிர்மாணித்து முற்றாக இயக்கி வருகிறேன். ஒரு பழைய பெண்டியம் 2 கணினியில் லினக்ஸ் இயக்குதளத்தில் இது இயங்குகிறது. இது என் domesticated onion தளத்தை வழங்குவதுடன், என்னுடைய சொந்த கோப்பு பறிமாற்றியாகவும் (FTP server) என் வீட்டிற்குள்ளே எந்த அறையிலிருந்தும் என் 70 கிகா பைட்டுக்கு மேற்பட்ட இசை நூலகத்தைப் பெற வசதியான இசை வழங்கியாகவும் (Music Streaming server) செயல்படுகிறது. இருந்தபோதும் நான் இதில் [...]
Read more →அருளின் பதிவு வழியாக இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு தெரியவந்தது. வி.பி.சிங் காலத்தில் இட ஒதுக்கீட்டு எதிராக இருந்த என் மனநிலையையும் இன்று அர்ஜுன் சிங் காலத்தில் மாறிவரும் என் எண்ணங்களையும் நினைத்து எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். சமீபத்திய பதவி உயர்வும் அது தொடர்பான கூடுதல் வேலைகளும் விரிவாக எழுத எனக்கு நேரமளிப்பதில்லை. இந்த முறை இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையிருக்கிறது. அதன் கூடவே சில தெளிவான நடைமுறைகளும் வகுக்கப்பட வேண்டும். இடதுசாரிகளின் பரிந்துரை இந்த [...]
Read more →இந்த ஆர்க்கிட்கள் இப்பொழுது என் வீட்டில் பூத்துக் கொண்டிருக்கின்றன. இது AJAX நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களைக் காட்டும் முயற்சி. கீழிருக்கும் படத்தில் சொடுக்கினால் அதன் பெரியவடிவம் மேலெழுந்து வரவேண்டும். அதே சமயத்தில் தற்பொழுதைய காட்சிச் சாரளம் நிறம் மங்க வேண்டும். முதலாவதாக இருப்பது Phalenopsis என்ற ஆர்க்கிட் குடும்பத்தைச் சேர்ந்தது. வண்ணத்துப் பூச்சியின் வடிவத்தை ஒத்திருப்பதால் இதற்கு Moth Orchid என்ற பெயர் உண்டு. இந்த ஆர்க்கிட்களின் பூர்வீகம் இந்தியா. அடுத்த மஞ்சள் நிற ஆர்க்கிட் எக்வடார், [...]
Read more →என்னுடைய இந்த வலைப்பதிவு WordPress-ல் இயங்கும் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதன் சுட்டி http://domesticatedonion.net/tamil இவ்வடிவத்தில் இருக்கும் பழைய பதிவுகள் விரைவில் புதிய தளத்திற்கு மாற்றப்படும். இருந்தபோதும் தேடல் இயந்திரங்கள் மூலம் வருபவர்களுக்காக பழையனவற்றின் பிரதி இவ்விடத்திலும் சேமித்து வைக்கப்படும். உங்கள் வலைப்பதிவு/தளங்களில் என்னுடைய இந்த வலைப்பதிவுக்கு இணைப்பு கொடுத்திருப்பீர்களேயானால் தயவு செய்து அதை மேற்கண்ட சுட்டிக்கு மாற்றினால் நன்றியுடையவனாக இருப்பேன். * * * For quite sometime now I am also blogging [...]
Read more →