• பொது

    நிழற்படப் போட்டி பரிசு

    by  • February 22, 2009 • அறிவிப்புகள், பொது • 3 Comments

    [album id=1 template=extend] கடந்த வார இறுதியில் டொராண்டோ தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர தெற்கு ஓண்டாரியோ ஆர்கிட் சொஸைட்டியின் வாலண்டைன் தின கண்காட்சியில் என்னுடைய இரண்டு நிழற்படங்களையும் இரண்டு டிஜிட்டல் ஓவியங்களையும் (புகைப்படமாக எடுத்து மென்கலன் உதவிகொண்டு ஓவியங்களாக மாற்றப்பட்டவை) போட்டிக்கு வைத்திருந்தேன். ஒரு போட்டியாளர் தொகுதியில் இரண்டு படைப்புகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டார். நான் வைத்திருந்த படங்களை மேலுள்ள குறும்படத்தில் சொடுக்கிப் பார்க்கலாம். எல்லா படைப்புகளையும் 12′ X 18′ அளவில் வைத்திருதேன். இங்கே சற்று [...]

    Read more →

    இந்தியா – இதுவரை

    by  • December 25, 2008 • பொது • 6 Comments

    டொராண்டோவிலிருந்து கிளம்பி சரியாக மூன்று வாரங்களாகிவிட்டன.  முதல் நான்கு நாட்கள் லண்டனில் ஓடிவிட்டன (அந்நிய லண்டனை இலண்டன் என்று இலக்கணத்தூய்மை ‘படுத்து’பவர்களை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலலாம்). மியூசியம், கோட்டைகள் என்று ஏறி இறங்கி வெள்ளைக்காரனின் மூன்னூறு வருட கொள்ளை வரலாற்றுச் சான்றுகளை நேரில் பார்த்தாகிவிட்டது. பொறுக்கிகள் பஞ்சலோக புத்தர், ஆச்சி பாம்படம் என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பத்தமடைப் பாயைக் கூட விடாமல் சுருட்டியிருக்கிறார்கள். லண்டனைப் பற்றி விரிவாகப் பின்னர். இப்பொழுது இந்தியாவில் இதுவரை கண்ட [...]

    Read more →

    நிழற்படப் போட்டி – விருது

    by  • March 12, 2008 • அறிவிப்புகள், கனடா, பொது • 21 Comments

    ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden – ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. ராயல் பொட்டானிக்கல் கார்டன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட் செடிகள் இடம்பெறுகின்றன. ஆர்க்கிட்களின் பல பிரிவுகளுக்கும் தனித்தனி பரிசுகள் உண்டு. போட்டியின் மறுபுறத்தில் நிழற்படங்களைத் தவிர [...]

    Read more →

    தற்புகழ்ச்சி

    by  • June 17, 2007 • பொது • 23 Comments

    லஷ்மி அவருடைய ஆங்கிலப் பதிவின் வழியே விடுத்த அழைப்பை ஒட்டியது: ஆங்கிலப் பதிவெழுதும் பல இந்திய நண்பர்கள் இந்தத் தொடர் விளையாட்டை ஆடி வருவது தெரியவந்தது. லக்ஷ்மியின் அழைப்பு இந்தத் தொடர் விளையாட்டை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் நகர்த்துகிறது. தொடர்ச்சியான அலுவல்களுக்கிடையில் மனதில் வெறுமை தங்கும் நேரம் இது. பொதுவில் இதுபோன்ற தொடர் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வமில்லை என்றபோதும் இந்த மனநிலைக்கு மாற்றாக கொஞ்சம் ‘என்ன பெரிதாக கிழித்திருக்கிறேன்’ என்று பார்க்கலாம். இனி, சுயவியப்புச் சும்மாடை தலையில் சுற்றிக் [...]

    Read more →

    பணவீக்கம்

    by  • April 9, 2007 • பொது • 1 Comment

    பணவீக்கத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இது கொஞ்சம் அதீதமான வீக்கம்; 16 மாத இடைவெளியில் யூகோஸ்லாவியாவின் பணம் 5 க்வாட்ரில்லியன் சதவீதம் மதிப்பிழந்தது. அதாவது அக்டோபர் 1, 1993 அன்று உங்களிடம் 5,000,000,000,000,000 யூகோஸ்லோவிய தினார் பணம் இருந்திருந்தால் ஜனவரி 24, 1995 அன்று அதன் மதிப்பு ஒரு தினார். இந்த அளவிற்கு உலகத்தில் எந்த கரண்ஸியும் மதிப்பிழந்ததில்லை. இதனால் பல அபத்தங்கள் விளைந்தன.

    Read more →

    ஐய்யோ பத்திக்கிச்சு : சுடர்

    by  • March 20, 2007 • பொது • 7 Comments

    சன்னாசி ஸார்தான் பத்தவச்சார். 1. உங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா? நியாயமா? நான் உங்களைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது . என்னவென்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று தெரியவில்லை. காரணம் எதிலுமே பெரிதாக ஒன்றும் சாதித்ததில்லை. நிரந்தரமாக என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒரே ஒரு வரையறைதான் சாத்தியம் என்று நினைக்கிறேன்: எல்லாவற்றிலும் ஆர்வமும் எதிலும் சொல்லிக்கொள்ளத்தக்க அறிவும் இல்லாத ஒரு அற்ப ஜீவன்.

    Read more →

    வலைப்பதிவு அமைப்பு மாற்றங்கள்

    by  • February 4, 2007 • அறிவிப்புகள், பொது • 13 Comments

    என்னுடைய வலைப்பதிவுகளின் அமைப்பில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயிருக்கிறேன். முதலாவதாக பழைய Pentium II 233 MHz, Fedora Core 2 Linux -ல் இயங்கிக் கொண்டிருந்த என் வழங்கியிலிருந்து புதிய ( இதுவும் பழைய பெட்டிதான்). இந்த புதிய பெட்டி Pentium 4, 1.3 GHz, Ubuntu Linux-ல் இயங்குகிறது. இதுவும் என் இல்லத்திலிருந்துதான் இயக்கப்படுகிறது.

    Read more →

    ஆட்டோ இந்தியா – 2006

    by  • January 16, 2007 • அறிவியல்/நுட்பம், பொது, விளையாட்டு • 1 Comment

    இன்றைய Wired சஞ்சிகையில் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தேறிய நெடுந்தூர ஆட்டோ போட்டியைப் பற்றிய குறிப்பு வெளியாகியிருக்கிறது. இதை நான் முன்னர் படிக்கவில்லை (தமிழ் வலைப்பதிவுகளில் யாராவது இதைப்பற்றி எழுதினார்களா என்று தெரியவில்லை). தேடிப்பார்த்த பொழுது தி ஹிந்துவில் வெளியான இந்தச் செய்திக் குறிப்பு கிடைத்தது. wired -ல் இது வந்திருக்காவிட்டால் எனக்கு இப்படியொரு போட்டி நடந்தது தெரிந்திருக்க சாத்தியமில்லை.

    Read more →

    MySQL உதவி தேவை

    by  • January 12, 2007 • பொது • 0 Comments

    எனக்கு MySQL தரவுத்தள உதவிகள் கொஞ்சம் தேவைப்படுகின்றன. (நான் இதில் ஞானசூன்யம்). குறிப்பாக version 3.x இல் இருக்கும் மூன்று தரவுக் கோப்புகளை version 5.x -ல் மாற்ற உதவி வேண்டும். இது முற்றிலும் தனிப்பட்ட (என்னுடைய சுயநலம் சம்பந்தப்பட்ட விஷயம்) வேண்டுகோள். உதவ முன்வருபவர்களுக்கு நான் மிக்க நன்றியுடையவனாவேன். உதவமுடியுமென்றால் எனக்குத் தனியஞ்சல் எழுதவும். முகவரி : venkat அட் domesticatedonion டாட் net.

    Read more →