• நகைச்சுவை

    அனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்

    by  • February 8, 2008 • நகைச்சுவை • 4 Comments

    வழக்கமாக நமது திரைப்படங்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், ஆறு பரிமாணத்தில் இது கொஞ்சம் ஓவராகவே தோன்றுகிறது. மொஹஞ்சதாரோவைப் பற்றிய இந்தப் படத்தில் வழக்கமான கட்புல, செவிப்புல உணர்வுகளுடன் கூடவே நாசி, தொடுகை உணர்ச்சிகளுக்கும் உண்டாம். “People can not only see but feel, smell and touch all the images and visuals in this film.” smell, touch புரிகிறது. பீலிங்க்ஸ்தான் வழக்கமாக இந்தியப்படத்தில் எப்பொழுதும் உண்டே, இங்கே [...]

    Read more →

    ஃபிடல் காஸ்ட்ரோ நம்மாளுதான்

    by  • January 18, 2008 • நகைச்சுவை • 3 Comments

    ஒரு அல்ப சந்தோஷம். இன்றைக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும் நீக்கான் காமெரா பயன்படுத்துகிறார் என்று தெரிய வந்தது. என் அபிமான காமெரா நீக்கான். சமீபத்தில் ஹவானா வந்த பிரேஸில் குடியரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா-வை காஸ்ட்ரோ படம் எடுக்கிறார்.

    Read more →

    Pregnancy Test : Twin Pack

    by  • January 8, 2008 • நகைச்சுவை • 2 Comments

    ஆன்லைனில் Pregnancy Test – Twin Pack என்று விற்கிறார்களே, இதைக் கொண்டு இரட்டைக் குழந்தை இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி? இரண்டு சோதனைகளிலுமே பாஸிட்டிவ் வர வேண்டுமா, இல்லை ஒன்றில் வந்தால் போதுமா?

    Read more →

    அஸ்தி டெட்டி பேர்

    by  • December 22, 2007 • நகைச்சுவை • 1 Comment

    அபத்தத் தயாரிப்புகள் வரிசையில் இன்னொன்று. அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்த மாதம் ஒரு காப்புரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் நினைவாக அவர்களது பூதவுடலின் ஒரு பாகத்தை (நகம், தலைமயிர், எரியூட்டப்பட்ட சாம்பல், இத்யாதி) உள்ளடக்கி நிரந்தரமாக நெஞ்சோடு கட்டிக்கொள்ள கரடி (அல்லது குதிரை, பூனை) பொம்மை (Teddy Bear), தலையணை போன்றவற்றைத் தயாரிப்பதற்கு இவர்களுக்கு உரிமையளிக்கப்பட்டிருக்கிறது. செத்துப்போனவர்களை நிழற்படமாக்கி சட்டத்தில் அடைத்து தொங்கவிட்டால் மாத்திரம்போதாது நிரந்தமாகத் தலைக்கடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு இப்பொழுது இது [...]

    Read more →

    முத்தமிடுவது எப்படி?

    by  • June 12, 2007 • நகைச்சுவை • 1 Comment

    பில் ப்ளிம்டன் (Bill Plympton) புகழ் பெற்ற உயிரூட்டி (Animator). New York Times, Vogue, Rolling Stones, Penthouse, Vanity Fair உள்ளிட்ட பல முன்னணி சஞ்சிகைகளில் இவருடைய கேலிச்சித்திரங்கள் வெளியாகின்றன. அரசியல் கேலிச்சித்திரங்களும் வரையும் ப்ளிம்டன் பல உயிரூட்டப் படங்களை எடுத்திருக்கிறார். இவருடைய சமீபத்திய உயிரூட்டப் படம்.

    Read more →

    சீனாவில் என் வலைப்பதிவு தடை

    by  • March 30, 2007 • அறிவிப்புகள், நகைச்சுவை • 6 Comments

    வெள்ளிக்கிழமையும் அதுவுமா என் நண்பன் ஒருத்தன் ஒரு நல்ல சேதியைச் சொல்லியிருக்கிறான். சீனாவில் என் தளம் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். காரணம் – யாருக்குத் தெரியும்? ஒரே ஒரு தடவை கம்யூனிஸமும் கத்தோலிக்கமும் கை கோர்த்துக் கொள்கின்றன என்று எழுதியிருந்தேன். ஒரு வேளை அதை யாராவது படித்துச் சொல்லிவிட்டார்களோ? (படத்தில் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்). சிரிப்புத்தான் வருகிறது. உங்களுக்கும் இந்தத் தடை இருக்கிறதா என்று http://greatfirewallofchina.org/ போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

    Read more →

    வேசித்தனத்தின் கணிதச் சமன்பாடு

    by  • March 21, 2007 • அறிவியல்/நுட்பம், நகைச்சுவை • 0 Comments

    மனித வரலாற்றில் எல்லா சமூகங்களிலும் காணக்கிடைக்ககூடிய ஒரே விஷயமாக பரத்தமை இருக்கிறது. இந்த பண்பாட்டு சமாச்சாரத்திற்கு சமன்பாடு எழுதினால் எப்படியிருக்கும்? இந்த விஷயம் இன்றைக்குக் காணக்கிடைத்தது. மூன்று பொருளியலாளர்கள் – மரீனா டெல்லா கியூஸ்டா (ஐக்கியக் குடியரசு), மரியா லாரா டி தொமாஸோ (இத்தாலி) மற்றும் ஸ்டெய்னர் ஸ்ட்ரோம் (நார்வே) பொருளாதரக் கோட்பாடுகளின் அடிப்படியில் வேசித்தனத்தை விளக்க முற்படுகிறார்கள். இவர்களது ஆய்வறிக்கையின்படி பரத்தமையின் விலைபொருள் அவர்களது உடல். அது மாத்திரமே விலைபோவதற்குப் போதுமானதல்ல. துய்ப்பவரின் சுகானுபவம், சந்தையில் [...]

    Read more →

    Jim Carrey and Conan O’Brien on Quantum Mechanics

    by  • March 2, 2007 • நகைச்சுவை • 0 Comments

    நகைச்சுவை நடிகர் ஜிம் கேரியும் தொலைக்காட்சி நட்சத்திரம் கொனான் ஓ’ப்ரெய்னும் குவாண்டம் இயற்பியலைப் பற்றி விவாதிக்கிறார்கள். அற்புதம்.

    Read more →

    உம்மாச்சி செல்ஃபோன்

    by  • February 28, 2007 • கனடா, சமூகம், நகைச்சுவை • 4 Comments

    நான் நிறைய நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்த விஷயம் இது. இங்கே பாட்டு கேட்பதற்காக, படம் பார்ப்பதற்காக செல்பேசிகளை விற்கிறார்கள். கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாக கனடாவின் மூன்றாவது பெரிய செல்பேசி நிறுவனமான டெலஸ் செல்பேசிகளில் ஃபோர்னோ படங்களையும் விற்க முடிவெடுத்தது. அதற்கு கொஞ்சம் எதிர்ப்பு வரவே இப்பொழுது ஒத்திப் போட்டிருக்கிறது. பாட்டு, படம், ஃபோர்னோ இவை மூன்றுக்கும் அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகக் கூடிய சமாச்சாரம் ஆத்திகம். இதை இன்னும் செல்பேசிக்காரர்கள் பயன்படுத்தவில்லையே என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.

    Read more →