நகைச்சுவை
Agathiyar Antideath
இன்று iTunes மேய்ந்துகொண்டிருந்தபொழுது கண்ணில்பட்டது. 99 டாலருக்கு சகா வித்தை கற்றுத்தரும் இந்த பயனி (Application, app)யில் என்ன இருக்கிறது என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்.
அந்தநாளும் வாராதோ
29 அக்டோபர் 1932 நாளிடப்பட்ட ஆனந்தபோதினி எனும் திங்களிதழ் காணப்பெற்றோம். என். முனுசாமி முதலியார் எனும் பெருந்தகையின் ஆசிரியத்தில் வெளிவந்த இந்த ஸஞ்சிகையில் நாம் கண்ட நயத்தகு நல்விஷ்யங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பரம சந்தோஷம். லோகத்தார் வாஸித்து நல்லின்பங்களை அடைவார்கள் என்பது நம் நல்லவா!
வெண்பாம் வெள்ளி
வெட்டியான ஒரு வெள்ளிக்கிழமை இரவு.
இங்கிருந்து துவங்குகிறது
@donion வெங்கட் நீங்களும் இருக்கிறீர்களா? வந்து ஒரு கை கொடுப்பது?11:25 AM Jun 19th from TwitterFox in reply to donion
பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
ஆப்புஅடிக்கிறதே வேலை
- http://twitter.com/donion/status/2247312202
இலக்கிய விமர்சனம்
நன்றி : xkcd.com
பிரிட்னி ஸ்பியர்ஸ்-ம் ஜான் மெக்கெய்னும்
13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு
(வயதுவந்தவர்களுக்கு மட்டும்)
புகழ்பெற்ற பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் கவிதை (கண்டுபிடிப்பு) சமீபத்திய மருத்துவ சஞ்சிகைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Archives of Sexual Behavior என்ற மருத்துவ சஞ்சிகையில் பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய மருத்துவர் ஒருவர் பெண்களின் கஷ்டத்தைப் போக்க கண்டுபிடித்த வழியைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
Kompanje, E. J. O. (2006). Painful sexual intercourse caused by a disproportionately long penis: An historical note on a remarkable [...]
நிகோல் கிட்மன், நீச்சலுடை, இந்தியா, பசுமாடு
நடிகை நிகோல் கிட்மனின் நீச்சலுடை இந்தியாவில் ஏழைக்குடும்பங்களைக் காப்பாற்றியிருக்கிறது.
சுவீடன் நாட்டு நீச்சல் குளமொன்றில் நிகோல் விட்டுச் சென்ற நீச்சலுடை அங்கே ஏலம் விடப்பட்டது. கிடைத்த தொகை 16,200 ஸ்வீடிஷ் க்ரோனர்கள் (கிட்டத்தட்ட $3,270). இதை வைத்துக்கொண்டு ஒன்பது பசுமாடுகள் வாங்கி இந்தியாவில் ஏழைக்குடும்பங்களுக்குத் தானமாக வழங்கப்படவிருக்கிறது.
தவறு செய்துவிட்டார்கள். இதே நீச்சலுடையை இந்தியாவில் ஏலம் விட்டிருந்தால் கட்டாயம் இதைவிட அதிக பணம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு இன்னும் நிறைய பசுமாடுகளை வாங்கி, இன்னும் நிறைய குடும்பங்களைக் காப்பாறியிருக்கலாம். (அந்நியச் [...]
அனுபம் கேர் துணையுடன் ஆறுபரிமாணப்படம்
வழக்கமாக நமது திரைப்படங்களுக்கும் இயற்பியல் விதிகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், ஆறு பரிமாணத்தில் இது கொஞ்சம் ஓவராகவே தோன்றுகிறது.
மொஹஞ்சதாரோவைப் பற்றிய இந்தப் படத்தில் வழக்கமான கட்புல, செவிப்புல உணர்வுகளுடன் கூடவே நாசி, தொடுகை உணர்ச்சிகளுக்கும் உண்டாம். “People can not only see but feel, smell and touch all the images and visuals in this film.”
smell, touch புரிகிறது. பீலிங்க்ஸ்தான் வழக்கமாக இந்தியப்படத்தில் எப்பொழுதும் உண்டே, இங்கே என்ன விசேஷம்?
தகவல் [...]
ஃபிடல் காஸ்ட்ரோ நம்மாளுதான்
ஒரு அல்ப சந்தோஷம். இன்றைக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும் நீக்கான் காமெரா பயன்படுத்துகிறார் என்று தெரிய வந்தது. என் அபிமான காமெரா நீக்கான்.
சமீபத்தில் ஹவானா வந்த பிரேஸில் குடியரசுத் தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா-வை காஸ்ட்ரோ படம் எடுக்கிறார்.
Pregnancy Test : Twin Pack
ஆன்லைனில் Pregnancy Test – Twin Pack என்று விற்கிறார்களே, இதைக் கொண்டு இரட்டைக் குழந்தை இருக்கிறதா என்று கண்டுபிடிப்பது எப்படி?
இரண்டு சோதனைகளிலுமே பாஸிட்டிவ் வர வேண்டுமா, இல்லை ஒன்றில் வந்தால் போதுமா?











