• ஜப்பான்

    பின் தொடரும் நவீனத்துவத்தின் குரல்

    by  • November 28, 2005 • ஜப்பான் • 12 Comments

    < %image(20051128-toto_mp3_full.jpg|419|211|தொத்தோ எம்பி3)%> 2001ல் பின் நவீனத்துவம் – ஜப்பானிய கழிவறைகளின் மீதான ஒரு ஆய்வு என்ற கட்டுரையை எழுதினேன். தொடர்ந்து சென்ற வருடம் அந்தக் கட்டுரையில் நான் எதிர்பார்த்திருந்ததைப் போலவே கழிவறைகளில் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டது.

    Read more →

    பெரிய வாலு – ஜப்பானில்

    by  • May 13, 2005 • ஜப்பான் • 14 Comments

    நேற்று வீட்டில் எதையோ தேடிக்கொண்டிருந்தபொழுது கையில் சிக்கிய பெரிய வாலு (விக்ரம்) படம். ஐந்து வருடங்களுக்கு முன்னால் எடுத்தது.

    Read more →

    சட்டை மடிக்கத் தெரியுமா?

    by  • April 16, 2005 • ஜப்பான் • 1 Comment

    பல வருடங்களாக இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தாலும் இன்றைக்கும் சட்டையை ஒழுங்காக மடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்குக் கிடையாது. வார இறுதியில் இரண்டு நாட்கள் வீட்டிலேயே கழித்தாலும், திங்கட் கிழமை காலை அந்த முக்கியமான மீட்டிங்குக்குச் செல்ல சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ளும் பொழுது வலது பக்கம் இரண்டு மடிப்புகளும் இடது தோளில் திராவிடக் கழகம் போல ஒன்றாக ஆரம்பிக்கும் மடிப்பு பணம் இருக்கும் இடமான சட்டைப் பைக்கு அருகில் வந்தவுடன் திமுக, அதிமுக என்று இரண்டாகக் [...]

    Read more →

    தமிழும், ஜப்பானும் ரஜினி ஊ&#

    by  • August 20, 2004 • ஜப்பான் • 0 Comments

    கொஞ்சம் கொஞ்சமாக இந்த ரஜினி ஆர்வம் தமிழ்-தமிழர்கள்-தமிழ்நாடு என்ற மொழி-குழு-இடம் பற்றிய ஆவலாக மாறியது. இதற்கு முக்கிய காரணம் – வியாபாரிகள். இவர்களைப் பற்றி கொஞ்சம் விலாவரியாகப் பார்க்க வேண்டும். முத்து திரைப்படத்தை முதலில் ஜப்பானுக்கு அனுப்பிவைத்தவர்கள் சிங்கப்பூர், மலேஷியாவில் அந்தப் படத்தின் உரிமையைப் பெற்றிருந்தவர்கள்தான். 1998-99 வாக்கில் புள்ளிவணி குமிழி உச்சத்திலிருந்தபொழுது ஜப்பானியர்களுக்கு ஏன் இந்தியர்களை வைத்துக்கொண்டு அமெரிக்கா எழுதும் மென்கலன்களுக்கு அதிகவிலை தரவேண்டும், அந்த இந்தியர்களையே இங்கே கொண்டுவந்து மென்கலன் துறையை வளர்க்கலாமே என்ற [...]

    Read more →

    தமிழும் ஜப்பானும் – ரஜினி ஊ&

    by  • August 18, 2004 • ஜப்பான் • 0 Comments

    நான் டோக்கியோவில் வசித்த 1999-2001 ஜப்பானில் ரஜினி அலை வீசிக்கொண்டிருந்த நேரம். என்னுடைய ஆய்வகத்திற்கு இரண்டுமாதம் கோடை மாணவர்களாக வந்த இருவர் மெதுவாக என்னிடம் முத்து திரைப்படத்தில் குறுந்தகடு இருக்கிறதா என்று கேட்டார்கள். இல்லை என்று சொல்ல அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். முத்து படத்தில் தொடங்கி இன்று ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்து ரஜினியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை அவருடைய இரசிகர் மன்றத் தலைவரையாவது பார்த்து காலில் விழுந்துவிட்டுப் போகலாம் என்ற அளவிற்கு முத்திப் போயிருப்பதன் இரகசியம் என்ன?

    Read more →

    ஜப்பானியரும் அமர்விடமுமĮ

    by  • February 3, 2004 • ஜப்பான் • 0 Comments

    ஜப்பானியர்களுக்குள்ள விசேட பழக்க வழக்கங்களைப் பதிவுசெய்யும் தொடரில் அடுத்தபடியாக – அமரும் இடம். {இந்தத் தொடரின் பிற வலைக்குறிப்புகளை ஆவணங்கள் பகுதியில் ஜப்பான் தலைப்பின்கீழ் பார்க்கலாம்} ஜப்பானிய சமூகம் மேல் கீழ் அடுக்குகளாகத் தர நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் ஒவ்வொருவருக்கும் அவருக்கான தகுதி நிச்சயப்படுத்தப்பட்டது. இதை உணர்ந்து நடந்துகொள்வது ஜப்பானிய சமூகத்தில் மிகவும் அவசியம்.

    Read more →

    ஜப்பானியர்களும் தலைவணங்Ĩ

    by  • December 24, 2003 • ஜப்பான் • 1 Comment

    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!! * * * பல நூறு ஆண்டுகளாகவே ஜப்பானில் தலைவணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. வரவேற்பு, வழியனுப்பல், மரியாதையைக் காட்டல், மன்னிப்புக் கோருதல், தன்னடக்கத்தைக் காட்டல், புரிதலை உணர்த்தல், அனுமதியைத் தெரிவித்தல், இப்படி ஒரே தலையை தாழ்த்துவதன் மூலம் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவது ஜப்பானியர்களின் பழக்கம். எப்பொழுது இந்தப் பழக்கம் தொடங்கியது என்று அறுதியிட முடியாது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஏனென்றால், இது மிருகங்களிடமும் காணப்படுகிறது. பல குரங்குகள் பலம் வாய்ந்த [...]

    Read more →

    ஜப்பானியர்களும் பெயரட்டĭ

    by  • December 5, 2003 • ஜப்பான் • 3 Comments

    என்னுடைய இரண்டாண்டு ஜப்பானிய வாழ்க்கை அவர்களது சமூகத்தைப் பற்றிய ஆச்சரியத்தைப் போக்கப் போதுமானதாக இல்லை. மிகவும் சிக்கலான சமுகம் அது; ஒரு புறம் நெருக்கமான, கிட்டதட்ட ஆண்டான்-அடிமையை ஒத்த சமூக அடுக்குகள், மறுபுறம் தொழில்நுட்பத்தில் வெறித்தனமான ஆர்வம், மென்மையான நளினமான தேநீர் விருந்தோம்பல், மறுபுறம் பெண்களைப் பொம்மைகளாகவும், போகப் பொருளாகவும் பாவிக்கும் பாங்கு. இப்படியாக ஜப்பானில் நிறைய முரண்பாடுகள். அவ்வப்பொழுது இதையெல்லாம் பற்றிய என் பார்வையை பதிவு செய்ய முயற்சிக்கிறேன். இதில் முதல் தவணையாக, ஜப்பானிய சமூகத்தில் [...]

    Read more →