சமூகம்

செல்பேசிவழியே நீர் இறைத்தல்

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.
புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் [...]


மாறிவரும் குழந்தைகள் உலகம்

சமீபத்தில் படிக்க நேர்ந்த இந்த தெகல்கா கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. நம் சமூகத்தில் நாம் எதையும் வெளிப்படையாகப் பேசி விவாதிப்பதில்லை. எனவே இதை எப்படிக் கையாளப் போகிறோம் எனப் பிரமிப்பாக இருக்கிறது.
Sex, Lies & Homework – Tehelka.
Mini’s parents still don’t know how to deal with what they found out. Mini is a dainty, extremely pretty 14-year-old. When [...]


ஒபாமாவுக்கு நோபெல் அமைதிப் பரிசு

சற்றுமுன் வெளியான செய்தியின்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே பராக் ஒபாமாவின் கொள்கைகளை ஆதரித்துவரும் எனக்கேகூட இது அதிர்ச்சியான செய்திதான்; சொல்லாப்போனால் எனக்கு இது அருவருப்பைத் தருகிறது.  இந்தப் பரிசுக்கு எந்த விதத்திலும் ஒபாமா தகுதியானவரில்லை. வருங்காலத்தில் ஒருநாள் அவர் இதற்குத் தகுதியாகக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கும்பொழுதும், இப்பொழுது இது அபத்தமாகத்தான் தோன்றுகிறது.


முடிவில்லா அபத்தங்களின் கதாநாயகன்

சமீபத்தில் ஜான் எட்வர்ட்ஸைப் போல ஒரு அடிமுட்டாள் அரசியல்வாதியை நான் கண்டதில்லை.  சென்ற வருடம்வரை இந்த ஆள் அமெரிக்க அரசியலில் ஒழுக்கத்தைத் தூக்கிப் பிடிப்பதாக மேடைதோறும் முழங்கி வந்தவர்.  பின்னர் அமெரிக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்பொழுது இவருக்கு மனைவியைத் தவிர ஒரு தொடுப்பு இருப்பது தெரியவந்த்து.  எட்வர்ட்ஸின் மனைவி ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே அவருடன் ஏன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற கேள்வி இருந்தது.


தமிழ்மணம் ஐந்தாண்டு நிறைவையொட்டி

முதலில் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். வியப்பாக இருக்கிறது திரும்பிப் பார்ப்பதற்குள் ஐந்து ஆண்டுகளாகியிருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் காசி தமிழ்மணத்தின் ஐந்தாண்டு நிறைவிற்காக என்று சில கேள்விகளை அனுப்பி பதிலளிக்கச் சொல்லியிருந்தார். கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் வேலைப்பளுவின் காரணமாகப் பாதியில் நின்றுபோயிற்று. காலம் கடந்தேனும் பதில்களை முடித்து, சில கருத்துகளைச் சொல்லிவைக்கிறேன்.


பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்

இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது.
அருள்செல்வன் சொல்வதுபோல பள்ளிச் சிறுவர்களை துப்புரவில் ஈடுபடுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சூழலையும் துப்புரவாக வைத்துக் கொள்ள குழந்தைகளுகுக்குக் கற்றுக் கொடுப்பது எந்தவகையில் தவறாகிறது என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் படித்த ஒரத்தநாடு [...]


டொராண்டோ முக்கிய நெடுஞ்சாலையை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு

இன்று மாலை டொரண்டோ நகரின் அதிமுக்கியமான கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். மாலை ஏழு மணியளவில் நகர மையத்திலிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் குழந்தைகள் முதியோர்களுடன் ஆதரவாளர்கள் நுழைய போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் பெரும் அமளி நிலவுகிறது. சற்றுமுன் நகரின் போலீஸ் கமிஷனர் பில் ப்ளேயர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகித்து அவர்களை அகற்றத் தயாராகிவருவதாகச் சொல்கிறார்.
நான் கேள்விப்படும்வரை நகரில் பொதுமக்கள் பலரும் இதனால் அதிக எரிச்சலடைந்திருப்பதாகத்தான் தெரிகிறது. இது திட்டமிடாமல் தன்னிகழ்வாக [...]


இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே

சில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்;
The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands [...]


டொராண்டோவில் தமிழர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

கடந்த சில தினங்களாக வலுவாக எழும்பிவரும் தமிழர்கள் குரல் ஈழத்தின் சமீபத்திய அவலத்தை நோக்கி கனேடியர்களின் கவனத்தைத் திருப்பி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நேற்று டொராண்டோ நடுநகர் மையத்தின் யூனியன் இரயில்நிலைய வாசலலில் தொடங்கி யுனிவர்ஸிட்டி அவென்யு, டொராண்டோவின் அதிமுக்கிய யங் வீதிகளில் 45,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்து கனேடிய அரசை ஈழத்தின்பால் கவனத்தைத் திருப்பப் போராட்டம் நடத்தினார்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் இந்தத் தெருக்களும், இரயில் நிலையமும் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடியவை; அலுவல் முடிந்து [...]


ஈழத்து நிலைகுறித்த இன்றைய டொராண்டோ ஸ்டார் தலையங்கம்

ஒரு வழியாக கனடாவின் கவனம் இலங்கை அவலங்களின்மீது திரும்பத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை. கடந்த அக்டோபர் மத்தியில் கனடாவில் தேர்தல் நடந்தது.  சிறுபான்மை கன்ஸர்வேட்டிவ் ஆட்சி சற்றே பலங்கூடிய சிறுபான்மையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதே சமயத்தில் உலகெங்கும் சந்தைகள் சரியத் தொடங்க சிக்கனத்தை முன்வைக்கிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த அரசு மானியத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார்கள். உடனடியாக மற்ற எதிர்க்கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்றன.  இவை [...]