கலைகள்

படத்தொடர்

பாலாஜி இழுத்துவிட்டது.
1. சென்ற வருடத்தில் (2007) நீங்கள் எடுத்த ஒரு படத்தை இட வேண்டும்
2. பிடித்ததற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் (செய்நேர்த்தி, கலையம்சம், சுயவிருப்பம்…)
3. ஏன் பிடித்தது என்று நாலு வரி எழுதவேண்டும்
இழுத்துவிட்டார் என்று சொன்னாலும் இதைப் பற்றி எழுதக்கூடிய மனநிலையில்தான் இப்பொழுது. எனவே இல்லாவிட்டாலும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் புகைப்படம் குறித்து எழுதியிருக்கக்கூடும்.


ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது

2006 ஆம் ஆண்டிற்கான இயல்விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் இணைத்துப் புதிய போக்கை உண்டாக்கியவர் திரு தாசீசியஸ். அது பலரின் வரவேற்பைப் பெற்றதுடன், நவீன நாடகத்தில் பலரை ஈடுபடவும் வைத்தது.
இதற்கு முன்னர் இயல்விருது பெற்றவர்களின் பட்டியல்
2001 : சுந்தர ராமசாமி [...]


பியர் - மைக்ரோக்ஸ்கோப்பின் அடியில்

பியரும் நேரமும் கிடைத்தால் என்ன செய்யலாம்? கொஞ்சம் கொஞ்சமாக இரசித்துக் குடிக்கலாம். நிறைய பியரும் கொஞ்சம் நேரமும் கிடைத்தால் அப்படியே வாயில் கவிழ்த்துக் கொள்ளலாம். கொஞ்சம் பியரும் நிறைய நேரமும் கூடவே ஒரு மைக்ரோஸ்கோப்பும் கிடைத்தால் என்ன செய்யலாம்? அற்புதமான படங்களை உருவாக்கலாம்.

(Click on the images to enlarge)


கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை திரைப்படமாகிறது

ஏதோ ஒன்றுக்காகத் தேடிக்கொண்டிருந்தபொழுது இந்த தவறவிட்ட பிபிஸி செய்தி கண்ணில்பட்டது.
கணிதமேதை ராமானுஜனின் வரலாற்றைத் திரைப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பிரிட்டிஷ் இயக்குநர் ஸ்டீஃபன் ஃப்ரையும்  இந்தியர் தேவ் பெனகல்-ம் சேர்ந்து இந்த முயற்சியை மேற்கொள்கிறார்கள்.   இது மிகத் துவக்க நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
சென்ற வருடம் The Indian Clerk  என்ற தலைப்பில் புனைவாக்கம் செய்யப்பட்ட ராமானுஜனின் வரலாறு புத்தகமாக வெளிவரவிருந்து இதுவரை வந்ததாகத் தெரியவில்லை.   நியூயார்க் க்வீன்ஸ் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறை பேரா. இரா ஹாப்ட்மன் ராமானுஜனுக்கும் ஹார்டிக்கும் [...]


அஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்

அறிவியல் புனைகதைகள் என்றால் உஷ்… உஷ் என்று க்ராஃப்ட்வெர்க்கைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட அமானுஷ்ய சத்தங்களுடன் தலையின் கொம்பு அல்லது கவிழ்த்து வைக்கப்பட்ட சொம்பு போன்று விசித்திரமான உடையலங்காரங்களுடன் வௌவால்களைத் தொடும் கீச்சுக்குரலில் பேசுவது, மரமுருகி மனிதனாவது அல்லது மயிர்வளர்ந்து பாம்பாவது போன்ற அதிநுட்ப விட்டலாச்சார்யாவின் மறுவடிவம் என்றுதான் நம்மில் பலருக்கும் தெரியும்.
உண்மையான அறிவியல் புனைகதைகள் மானிடத்தின் இருப்பையும் சிந்தனை எல்லைகளையும் குறித்த கேள்விகளைக் கேட்பன. பிரபஞ்சத்தில் நம்மிடத்தையும் நாமும் பிரபஞ்சமும் [...]


டொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்

பாரதி கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படம் டொராண்டோ நகரில் காலம் சிற்றிதழால் திரையிடப்படுகிறது. தமிழக வரலாற்றில் படிந்த துயர சம்பவமான கீழ்வெண்மணி கொலைகள் குறித்த பல சரித்திர உண்மைகளை வெளிக்கொணரும் இந்த ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிக்கொடுமை கொலைகளின் பின்னணியையும் கோரத்தையும் 64 சாட்சியங்கள், மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மூலம் பாரதி கிருஷ்ணகுமார் திறமையாக தெளிவுபடுத்தியிருப்பதாக இந்த ஆவணத்தைக் குறித்த [...]


இனியும் அழவேண்டாம் சகோதரி - ஆவணப்படம்

ரஜினி திரணகம தனது முப்பத்தைந்தாவது வயதில் 1989ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பொழுது அவர் யாழ் பல்கலையின் உள்ளுடலியல் (anatomy) துறையின் பேராசிரியையாக இருந்தார். அவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். இவரைக் குறித்த No More Tears Sister ஆவணப் படம் National Film Board of Canada வால் தயாரிக்கப்பட்டு டொராண்டோவில் தற்பொழுது நடைபெறும் HotDocs என்ற ஆவணப்பட விழாவில் திரையிடப்படுகிறது.


H2G2 Trailer

நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த Hitchhiker’s Guide to the Galaxy (H2G2) திரைவடிவம் வரும் ஏப்ரிலில் வெளியாகவிருக்கிறது.
இன்றைக்கு அமேசான்.காமில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தின் கதையிலிருந்து இது மாறுபட்டிருக்கும் என்று சொல்கிறார்கள். (டக்ளஸ் ஆடம் வானொலி நாட்கம், புத்தகம், திரைப்படம் இவற்றின் வடிவங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்க வேண்டும் என்று சொன்னார். முடிந்தால் ஒன்றுக்கொன்று முரண்படுவதும் நல்லது என்று விரும்பினார்). எனவே திரைவடிவத்தில் நிறைய புதுமைகளை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
முன்னோட்டத்தில் இருப்பதைப் பார்த்தால் நடிகர்கள் தேர்வு [...]


Obscenity, aka Artistic Self-Expression

கலை வெளிப்பாடு என்ற பெயரில் கொச்சைப்படுத்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சாபக்கேடு. இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நண்பர் இரா. முருகன் பிரிட்டனில் தோளைத்தொடும் காதை ஒருவர் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் கடந்த ஆண்டுகளில் நான் படித்த கலைக்கேவலங்கள் நினைவில் வரத்தொடங்கின. இரண்டு சம்பவங்களில் தங்கள் இனப்பெருக்க விஷயத்தை வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் கலைஞர்கள்(?).


Bhupen Khakhar

The preceeding entry about Bhupen Khakhar was started about 10 days ago and completed today, thanks to ira. murugan’s posting in raayar kaapi klub.