• கனடா

    P2P downloading is legal; It is Canada!

    by  • December 13, 2003 • கனடா • 0 Comments

    நேற்றைய அறிக்கையின்படி, நேரடி பரிமாற்ற வலைகளின் மூலம் கோப்புகளை இறக்கிக் கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று விளக்கப்பட்டிருக்கிறது. இது கனடா!! இந்த விளக்கம் இசை வணிகர்களை மிகவும் புண்படச் செய்யப்போகிறது. சராசரி பயனர் இதனால் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் வலைகளில் பிறர் எடுத்துக் கொள்ளும்வகையில் கோப்புகளைப் போட்டுவைப்பது குற்றம்தான். க்ரெனடா, வெஸ்டர்ன் சமோவா போன்ற நாடுகளில் உட்கார்ந்துகொண்டு யாராவது போட்டுவைக்கும் எதையும் இனி கனேடியர்கள் பயப்படாமல் இறக்கிக் கொள்ளலாம். கனடாவின் மக்கள்தொகை அமெரிக்காவைவிட மிகவும் குறைவுதான். ஆனால் சராசரி [...]

    Read more →

    Farewell Jean Chr

    by  • December 12, 2003 • கனடா • 0 Comments

    இன்று காலை கனடாவின் இருபதாவது பிரதமர் ழான் க்ரெட்ச்யன் (Jean Chrétien) பிரதமர் பதவியிலிருந்து விலகினார் இத்துடன் அவரது நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும் முடிந்து போகிறது. யார் இந்த ழான் க்ரெட்ச்யன்? கனடாவை விடுத்த பல நாடுகளில் அவரை யாருக்கும் தெரியாது. கனடா உலகின் ஏழு முக்கியமான நாடுகளுள் ஒன்று, அந்த ஏழு நாடுகளுள்ளும் நிலையான அரசியலமைப்பு, வளர்ந்துவரும் பொருளாதாரம், அகதிகள் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களால் முன்னால் இருக்கும் நாடு. அந்த நாட்டின் பிரதமரை [...]

    Read more →

    கனடாவின் இரத்ததானக் கொள்

    by  • July 29, 2003 • கனடா • 0 Comments

    சில நாட்களுக்கு முன் டொராண்டோ பல்கலையில் நடந்த இரத்ததான முகாமிற்கு தானமளிக்கச் சென்றிருந்தேன். 1990 முதல் 1996 வரை, இந்தியாவில் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இரத்ததானம் செய்துவந்தேன். இதுதவிர IISc-ல் படிக்கும் பொழுது அவரசங்களுக்கு இரத்ததானிகளை ஏற்பாடு செய்து உதவும் அமைப்பில் முக்கிய அங்கத்தினனாகவும் இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியே வந்தபின் இரத்தமளித்ததே இல்லை. பொதுவில் யாரைச் சென்றுபார்ப்பது, முகாம் எங்கே நடக்கும் போன்ற விபரங்கள் உள்ளூர் மொழி தெரியாததால் மத்தியப் பிரதேஷிலும், [...]

    Read more →