இசை

தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - பதின்மூன்று

இந்தத் தொடரின் முடியும் கட்டத்தில் ஜாஸின் அடிப்படை பாதிப்புகளைக் கொண்டு வேற்று இசைகளின் வடிவங்களையும் கொண்ட ஒன்றிரண்டு பாடல்களைப் பார்க்கலாம்.

பாடல் : தேடினேன் வந்தது…
படம் : ஊட்டி வரை உறவு (1967)
பாடியவர்: பி.சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
[Audio clip: view full post to listen]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - பன்னிரண்டு

இன்னும் இரண்டு வாரங்களில் இந்தத் தொடர் முடியும் என்ற நிலையில் ஒரு தவிர்க்க முடியாத இடைவெளி. நான் ஏற்கனவே எழுதியிருந்ததைப் போல இளையராஜாவின் நீண்ட தமிழ்த் திரையிசை வரலாற்றில் மிகத்தாமதமாகத்தான் அவருடைய ஜாஸ் முயற்சி நடந்திருக்கிறது. இந்தத் தொடரை வாசித்துவரும் பலராலும் இதை நம்பவே முடியவில்லை. இன்னும் சிலபேர் புன்னகை மன்னன் (கவிதை கேளுங்கள்), மௌனராகம் (மன்றம் வந்த தென்றலுக்கு) போன்ற இளையராஜா பாடல்கள் ஜாஸ் வகையைச் [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - பதினொன்று

இந்தத் தொடரில் ஏ.ஆர். ரஹ்மானின் இருவர் படத்தைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதியாகிவிட்டது. இருந்தாலும் இன்னொரு முக்கியமான பாடலை ஒதுக்கிவிட்டுச் சென்றால் தொடர் எந்த வகையிலும் முழுமையடையாது.

பாடல் : வெண்ணிலா, வெண்ணிலா
படம் : இருவர்
பாடியவர் :ஆஷா போன்ஸ்லே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
[Audio clip: view full post to listen]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - பத்து

பாடல் : பூப்பூத்தது…
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷால், சோனு நிகம்,
இசை: இளையராஜா
படம்: மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
[Audio clip: view full post to listen]

ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஜாஸ் இசை அடிப்படையில் இருவர் ஒரு மைல்கல் என்றால் இளையராஜாவுக்கு மும்பாய் எக்ஸ்பிரஸ். என்னுடைய கணிப்பில் சமீபத்திய இளையராஜாவின் இசைகளில் ஹே ராம்-க்கு அடுத்தபடியாக மிகவும் சிக்கலான இசையைக் கொண்டது மும்பாய் எக்ஸ்பிரஸ்தான். சென்ற வருடம் வரை என்னுடைய [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஒன்பது

பீ-பாப் (Bebop) பற்றி கடந்த அத்தியாயங்களில் எழுதியிருந்தேன். ஸ்விங் அமைப்பிலான ஜாஸை எப்படி பீபாப் சிக்கலான அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று பார்த்தோம். சார்லி பார்க்கர், டிஸ்ஸி கில்லெஸ்பி, தெலோனியஸ் மாங்க் மிகத் திறமை மிக்க கலைஞர்கள் சிக்கலான சுருதிக்கோர்வைகளின் அடிப்படையில், சற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அமைத்த வடிவம் பீ-பாப். பீ-பாப் பைப் புரிந்துகொள்வது, ரசிப்பது மிகவும் கஷ்டம். வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் பீ-பாப் கலைஞர்களுக்கான இசை, [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - எட்டு

ஏ.ஆர். ரஹ்மான் தமிழ்த் திரையுலகிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் பல தொழில்நுட்ப விஷயங்களை அறிமுகப்படுத்தியவர். என்னுடைய கணிப்பில் இந்திய இசையமைப்பாளர்களில் சோதனை முயற்சிகளில் மிக மிக அதிகமாக முனைந்து ஈடுபட்டவர் (ஈடுபடுபவர்) எ.ஆர்.ரஹ்மான். இவருடைய பாடல்களில் கற்பனையைவிட அசாத்திய உழைப்புதான் மேலோங்கி நிற்கிறது. இதற்காகவே இவர் ஒவ்வொரு பாடலுக்கும் இசையமைக்க நிறைய நாட்கள் எடுத்துக்கொள்கிறார்.

பாடல்: ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
படம் : இருவர் (1997)
பாடியவர்கள்: ஹரிணி, ராஜகோபால் [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஏழு

ஜாஸின் ஆதாரம் ப்ளூஸ் என்று சொல்லப்படும் சோக இசையில்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் நாளாக ஆக அது ஆட்ட அரங்குகளுக்கான இசை என்று மாறிப்போனது (பின்னர் அது மைல்ஸ் டேவிஸ் போன்ற முதல்தரக் கலைஞர்களால் மீட்டெடுக்கப்பட்டது). இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஜாஸிற்கே அடிப்படையாக உள்ள ரிதம் அமைப்பு. தட்டையான சுரங்களைக் கொண்டு இசைக்கப்பட்டாலும் ஜாஸில் ட்ரம்ஸ், ரிதம் கிடார், பாஸ் கிட்டார் போன்றவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஆறு

பாடல் : பளிங்கினால் ஒரு மாளிகை
படம் : வல்லவன் ஒருவன்
பாடியவர் : எல்.ஆர். ஈஸ்வரி
இசை : வேதா
[Audio clip: view full post to listen]

வேதா என்கிற எஸ்.வேதாச்சலம் தமிழ்த் திரை இசையமைப்பாளர்களுள் கொஞ்சம்வித்தியாசமானவர். தான் எங்கிருந்து பாடலை நகலெடுக்கிறேன் என்ற விஷயத்தையெல்லாம் மறைக்க அவர் முயற்சி செய்ததே இல்லை. அந்தக் காலங்களில் (1950-60) ஹிந்திப் பாடல்களை நேரடியாகத் தமிழில் தந்தவர் வேதா. [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - ஐந்து

பாடல் : நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
படம் : நம்நாடு (1969)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தர்ராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
[Audio clip: view full post to listen]

எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் வேற்றுமைகள் துளிர்விடத் துவங்கியிருந்த காலம் அது. தன்னுடைய திரைப்படங்களில் கறுப்பு-சிவப்பு சட்டைகள், உதயசூரியன், கழகம் என்ற வார்த்தைகள் வரும்படியாக வெளிப்படையாக வசனங்கள் அமைத்து, பாடல் வரிகள் அமைத்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், [...]


தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் - நான்கு

ஜாஸின் முக்கியமான இலக்கணங்களில் ஒன்று (ஜாஸிற்கு இலக்கணம் உண்டா?) ஸிவிங் என்று சொல்லப்படும் ஊசல். இதை வரையறுப்பது மிகவும் கடினம். (நோட்ஸ் எல்லாம் எழுதி இன்னும் கொஞ்சம் குழப்ப முடியும்). முதல் விஷயம் இந்த ஊசலை அதிகமாகக் கையாண்டவை பெருங்குழுக்கள் (Big Band Jazz). பல வாத்தியங்கள் இருக்கும் பொழுது ஒவ்வொருவரும் மானாவாரியாக சுயகற்பனையோடு (independent improvisation) என்று சொல்லிக் கொண்டு தனித்தனிப் [...]