• இசை

    அஞ்சலி : பாடகி ஸ்வர்ணலதா

    by  • September 12, 2010 • இசை • 3 Comments

    கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை. இரவு உறங்கச் செல்லும்பொழுது நாளைய நாளை அமைதியாகக் கழிக்க வேண்டும்.  இயன்றவரை மனதுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கச் செல்வது வழக்கம். குறிப்பாக நீண்ட நாட்களாக வேலையின் பளு நெருக்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு வார இறுதியை இப்படிக்கழிக்கலாமே என்ற ஆதங்கம் இயல்பானது. நேற்று அப்படித்தான் நினைத்திருந்தேன். இன்று காலை விடிந்ததும் என் கண்ணில்பட்ட முதல் செய்தி “பாடகி ஸ்வர்ணலதா மறைவு”.

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – கல்யாணி

    by  • April 24, 2010 • இசை • 1 Comment

    கல்யாணி   மிகப் பிரபலமான இராகங்களுள் ஒன்று.  கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் திரையிசையிலும் கல்யாணி பலராலும் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது.  ஏறு, இறங்கு வரிசைகளில் ஏழு ஸ்வரங்களையும் முழுமையாகக் கொண்ட இராகங்களை மேளகர்த்தா இராகம் அல்லது ஜனன இராகம் என்று அழைப்பார்கள். நாம் சென்ற வாரம் பார்த்த மோகனம் அப்படியல்ல அது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது.  இராகங்களின் வரிசையில் கல்யாணி 65-வது மேளகர்த்தா இராகம்.  இதன் ஏறு/இறங்கு ஸ்வர வரிசைகள் ஆரோகணம் : ஸ ரி2 [...]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – மத்யமாவதி

    by  • March 29, 2010 • Uncategorized, இசை • 2 Comments

    திரையிசையில் இராகங்கள் தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப்போவது மத்யமாவதி இராகம். இது மங்களகரமான இராகமாக அறியப்படுகிறது.   22ஆம் மேளகர்த்தா இராகமான கரகரப்ரியா இராகத்திலிருந்து பிறக்கும் ஜன்ய இராகம் இது. கடந்த சில வாரங்களாக நாம் பார்த்த மோகனம், ஹிந்தோளம் இராகங்களைப் போலவே இது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இந்த இராகத்தின் ஏறு/இறங்கு வரிசைகள் : ஆரோகணம் : ஸ ரி2 ம1 ப நி2 ஸ அவரோகணம் : ஸ நி2 ப [...]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – ஹிந்தோளம்

    by  • March 18, 2010 • இசை • 8 Comments

    ஹிந்தோளம் கச்சேரிகளில் மிகப் பரவலாகப் பாடப்படும் மற்றொரு இராகம். இதுவும் மோகனத்தைப் போலவே ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்ட ஔடவ இராகமாகும். இதன் ஸ்வரங்கள் பின்வருமாறு; ஆரோகணம்: ஸ க2 ம1 த1 நி2 ஸ அவரோகணம்: ஸ நி2 த1 ம1 க2 ஸ

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – மோகனம்

    by  • January 26, 2010 • இசை • 4 Comments

    மோகனம் திரையிசையில் மிகப் பரவலாகக் கையாளப்படும் இராகங்களுள் ஒன்று. இது மேளகர்த்தா இராகமான ஹரிகாம்போதியிலிருந்து பிறக்கும் இராகமாகும்.  சென்ற முறை மாயாமாளவ கௌவ்ளையைப் பற்றிச் சொல்லும்பொழுது அது ஏழு ஸ்வரங்களையும் ஏறு-இறங்கு முகங்களில் (ஆரோகண அவரோகணத்தில்) கொண்டது என்று சொன்னோம். அப்படிப்பட்ட இராகங்களுக்கு சம்பூர்ணராகம் என்று பெயர். மோகனம் ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது. ஐந்து ஸ்வரங்களைக்கொண்ட இராகங்களை ஔடவ இராகம் என்று அழைப்பார்கள். ஆரோகணம்: ஸ ரி2 க3 ப த2 ஸ அவரோகணம்: ஸ [...]

    Read more →

    திரையிசையில் இராகங்கள் – மாயாமாளவ கௌவ்ள

    by  • January 5, 2010 • Uncategorized, இசை • 8 Comments

    இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம்.  இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது.  மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு [...]

    Read more →

    திரையில் கர்நாடக இசை இராகங்கள்

    by  • January 3, 2010 • இசை • 7 Comments

    நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்ற தொடரை நிறைவு செய்தேன். பதினெட்டு பாகங்களாக ஒலிபரப்பப்பட்ட இந்தத் தொடர் ஏற்கனவே நான் வலைப்பதிவில் எழுதியவற்றைச் சற்றே விரிவுபடுத்தி வழங்கப்பட்டது. ஜாஸ் இசையைப் பற்றி நம்மவர்களுக்கு அதிகம் பரிச்சயமிருக்காது என்ற காரணத்தால் நிறைய விளக்கங்களையும் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு பாடல்களை மட்டுமே [...]

    Read more →

    தாளம் உலகெங்கும் -3

    by  • November 24, 2009 • இசை • 2 Comments

    பல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது.  கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி நேரங்கிடைக்கும் பொழுது சிறிய பதிவுகளானாலும் தொடர்ந்து எழுத உத்தேசம். வரும் கருத்துகள்/உரையாடல்களைப் பொருத்து இந்தத் தொடர் விரிவடையலாம். இப்போதைக்கு சுருக்கமாக. டெனிஸ் சேம்பர்ஸ் (Dennis Chambers) முதல் தர ஜாஸ்-ப்யூஷன் கலைஞர். முறையான பயிற்சியில்லாதவர். நான்கு வயதிலேயே [...]

    Read more →

    Masters of Scat

    by  • April 25, 2009 • இசை • 3 Comments

    ஜாஸில் Scat Singing என்பதன் உச்சத்தைச் சொல்லும் பாடல். உலகின் இரண்டு உன்னத ஸ்கெட் பாடகர்கள் லூயி ஆம்ஸ்ட்ராங் மற்றும் டானி கேய் (Louis Armstrong – Danny Kaye) இங்கே. உற்சாகமான ஒரு சனிக்கிழமை நள்ளிரவு.

    Read more →

    தூள் – ஓராயிரம்

    by  • March 19, 2009 • இசை • 8 Comments

    இன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற வீதத்தில் வந்து கொண்டிருந்தது, இப்பொழுது அவ்வப்பொழுது எந்த [...]

    Read more →