• அறிவியல்/நுட்பம்

    அமெரிக்க காங்கிரஸ் நூலகப் புகைப்படங்கள் ஃபிளிக்ரில்

    by  • January 17, 2008 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    உலகத்தின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் பல அரிய புத்தகங்களுடன் கூட பிற ஆவணங்களும் குவிந்து கிடக்கின்றன. இன்றைக்கு இந்த நூலகம் அவர்களுடைய மிகப் பழைய புகைப்படங்களை ஃபிளிக்ர் மூலம் வெள்ளோட்டமாக வெளியிட்டிருக்கிறார்கள். மிக அற்புதமான பல படங்கள் இருக்கின்றன. நான் அவற்றில் அமிழ்ந்து போனதில் ஒரு மணி நேரம் காலி.

    Read more →

    அதிகுறை வெப்பநிலை – இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சி

    by  • January 8, 2008 • அறிவியல்/நுட்பம் • 9 Comments

    அமெரிக்காவின் பொதுச்சேவை ஒலி(ளி)பரப்புக் கழகத்தின் PBS தொலைக்காட்சியில் இன்று இரவு ஒரு நல்ல அறிவியல் நிகழ்ச்சி வரவிருக்கிறது. இந்த வாரமும் அடுத்தவாரமும் ஒளிபரப்பாகவிருக்கும் இது கட்டாயம் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அறிவியலில் குறைந்தபட்ச ஆர்வமுள்ளவர்களுக்கு இதை முழுமனதாகப் பரிந்துரைக்கிறேன்.

    Read more →

    வாளினும் வலிய பேனா

    by  • January 4, 2008 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    கணினிகளின் வருகைக்குப் பிறகு அச்சிட்ட தகவல் அழிந்துபோகும் என்று பலரும் ஆரூடம் சொல்லத்தொடங்கி கால் நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை அச்சிட்ட நாளிதழுக்கான சந்தை வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. கணினிகளின் கோப்புகளாக்கிவிட்டால் காகிதத்திற்குத் தேவையிருக்காது என்று நம்பப்பட்டது; ஆனாலும் நிறுவனங்களில் காகிதத்திற்கான செலவு சில சமயங்களில் கணினிகளுக்கான செலவைவிட இன்னும் அதிகமாகத்தான் இருக்கிறது. இணையத்தில் எல்லா தகவலும் கொட்டிக்கிடந்தாலும் மாலை அலுவலிலிருந்து வீடு திரும்பும்பொழுது இரயிலில் வரும் சகபிரயாணிகள் அன்றைய செய்தித்தாள் விமர்சனக் கட்டுரையை அச்செடுத்து வந்து படிப்பதைப் [...]

    Read more →

    உலகளாவிய சூடேற்றம் பற்றிய கணிப்புகள் பொய் – போப்பாண்டவர்

    by  • December 13, 2007 • அறிவியல்/நுட்பம், சமூகம் • 7 Comments

    உலக நாடுகளின் தலைவர்களுக்கான தன்னுடைய வருடாந்திர உரையில் போப் உலகளாவிய சூடேற்றம் குறித்த கவலைகளைத் தெரிவிப்பவர்கள் அழிவின் வருகைக்குக் கட்டியம் கூறுபவர்கள் என்று சொல்லியிருக்கிறார். The leader of more than a billion Roman Catholics suggested that fears over man-made emissions melting the ice caps and causing a wave of unprecedented disasters were nothing more than scare-mongering… His remarks will be made in [...]

    Read more →

    இயற்பியலில் உண்மையும் அழகும்

    by  • December 11, 2007 • அறிவியல்/நுட்பம் • 5 Comments

    இயற்பியலில் உண்மையும் அழகும் பற்றிய சிறிய உரை. பி.எஸ்.ஸி படிக்கும் காலத்தில் அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) பேராசிரியர் மர்ரே ஜெல்-மான கோட்பாடு படிக்கும் காலத்தில் ஜெல்-மான், யுக்காவா, ஹான்ஸ் பெத்தா, போன்ற பெயர்கள் ஒரு கனவைப் போலத் தோன்றும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த ஜாம்பவான்களின் பேச்சை வருங்காலத்தில் கேட்கமுடியும் என்று யோசித்துப் பார்த்ததுகூட இல்லை. இயற்பியலில் (பொதுவில் அறிவியலில்) மெய், சமச்சீர், அழகு போன்ற கருத்தாக்கங்களின் அடிப்படையில் பல அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. [...]

    Read more →

    Apple Leopard -3

    by  • December 1, 2007 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    கால இயந்திரம் வெளியிடப்பட்ட அன்றே சிறுத்தையை நான் வாங்கி சோதித்துப் பார்க்க முக்கியமான காரணம், ஆப்பிள் விளம்பரித்த Time Machine என்ற அமைப்புதான். இன்றைய வைரஸ் உலகில் கோப்புகளின் பாதுகாப்பும், அவற்றைப் பாதுகாப்புக்காக பிரதியெடுத்து வைப்பதும் மிகவும் முக்கியமானவை. ஆனாலும் பலரும் இவற்றை ஒழுங்காகச் செய்வதில்லை. இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு; ஒன்று பிரதியாக்கம் ஒரு அசுவாரசியமான விஷயம், மற்றது, அது சிக்கலானது. பல நேரங்களில் குறுவட்டுகளிலும், அடர்வட்டுகளிலும் பாதுகாப்புக்காகச் சேமித்துவைக்கப்பட்ட ஒரு பழைய படத்தையோ, பாடலையோ [...]

    Read more →

    Apple Leopard -2

    by  • November 25, 2007 • அறிவியல்/நுட்பம் • 4 Comments

    இதன் முதல் பாகம் புதுமைகள் 300 க்கும் மேற்பட்ட புதிய, முன்னேற்ற சமாச்சாரங்களை உள்ளடக்கியது என்று ஆப்பிள் விளம்பரித்தது. இதில் சாரளத்தின் மூலை கூர்மையாக இருப்பதற்குப் பதிலாக மழுங்கலாக இருப்பதெல்லாம் புதுமை என்பதைக் காற்றில் விட்டுவிட்டாலும்கூட கொஞ்சம் புதுமையான விஷயங்கள் நிச்சயம் உண்டு. தோற்றத்திலும் அமைப்பிலும் சில மாறுதல்களைச் செய்திருக்கிறார்கள். இவற்றில் சில நன்றாக இருக்கின்றன, சில அபத்தமாக இருக்கின்றன. நல்ல விஷயத்தில் மின்னஞ்சல் பொதியின் குறும்படத் தோற்றம், அபத்த விஷயத்தில் டாக் (Dock)-ன் முப்பரிமாண தோற்றம் [...]

    Read more →

    Apple Leopard -1

    by  • November 20, 2007 • அறிவியல்/நுட்பம் • 1 Comment

    {எழுதத்துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன, 75% எழுதி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. ஒருவழியாக இன்று வலையேற்றம்} Click on the image to enlarge சில காலம் முன்பு மைக்ரோஸாஃப்ட் விஸ்டாவை வெளியிட்டபொழுது நான் எழுதிய விமர்சனம் இங்கே கிடைக்கிறது:பகுதி 1, பகுதி 2, பகுதி 3 சென்றவாரம் ஆப்பிள் தனது அடுத்த இயக்குதளத்தை வெளியிட்டது. பெரும்பூனைகளின் வரிசையில் இந்தச் சிறுத்தை அடுத்த வெளியீடு. (Puma, Tiger, Leopard). மைக்ரோஸாஃப்டைப் போலில்லாமல் ஆப்பிள் விரைவாகவே தனது அடுத்தடுத்த [...]

    Read more →

    2007 நோபெல் பரிசுகள்

    by  • October 10, 2007 • அறிவியல்/நுட்பம் • 13 Comments

    எல்லோரும் சிவாஜி பற்றி மும்முரமாக எழுதிக்கொண்டிருந்த காலத்தில் கையில் சரக்கில்லாமல் காணமல் போன அதே நான் தான். யாரும் கண்டுகொள்ளாத வருடாந்திர விஷயம் வந்திருப்பதால் கொஞ்சம் எழுதலாமே என்று…. * * * இந்த வருடத்திற்கான மருத்துவம்/உடற்கூறியல், இயற்பியல் மற்றும் வேதியியல் நோபெல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்த வருடம் இந்த மூன்று துறைகளிலும் இந்த வருடம் மிக சுவாரசியமான கண்டுபிடிப்புகள் கவனம் பெற்றிருக்கின்றன. கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் இவை ஒவ்வொன்றையும் குறித்து விரிவாக எழுதலாமென்றிருக்கிறேன்.

    Read more →

    ஃப்ரிஸ்பீ-க்கு ஐம்பது வயது

    by  • June 18, 2007 • அறிவியல்/நுட்பம் • 7 Comments

    நேற்றுடன் ஃப்ரிஸ்பீ (Frisbee) தட்டுக்கு ஐம்பது வயதாகிறது. Wham-O Inc என்ற நிறுவனத்தால் ப்ளூட்டோ ப்ளாட்டர் என்று அழைக்கப்பட்ட விளையாடுத்தட்டிற்கு ஃப்ரிஸ்பீ என்று பெயரிடப்பட்டு அரை நூறாண்டு ஆகிவிட்டது. இன்னும் இது மிகப் பிரபலமான விளையாட்டு சாதனமாக இருந்து வருகிறது. எனக்கு ஃப்ரிஸ்பீ தட்டுகளின்மீது தனியாத ஆர்வமுண்டு. முகாம்களுக்குச் செல்கையிலும் நண்பர்களுடன் கேளிக்கைகளிலும் ஃப்ரிஸ்பீ விளையாடத் தயங்கியதேயில்லை. இன்றைக்கும் என்னுடைய காரில் ஒரு ஃபிரிஸ்பீயாவது எப்பொழுதும் இருக்கும். சென்ற வருடம் ஒரு மாபெரும் ஆட்டோமொபைல் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். [...]

    Read more →