அறிவியல்/நுட்பம்

செல்பேசிவழியே நீர் இறைத்தல்

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.
புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் [...]


உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது

மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID   சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். 


அஞ்சலி – மார்ட்டின் கார்ட்னர்

புகழ்பெற்ற கணிதவியலாளர், வெகுஜன அறிவியல் எழுத்தாளர் மார்ட்டின் கார்ட்னர் (Martin Gardner) சென்ற சனிக்கிழமை, 22 மே 2010 அன்று காலமானார்.  கார்ட்னர் கிட்டத்தட்ட எழுபது புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  எண்ணிக்கை கடந்து அவர் புத்தகங்கள் பல காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கின்றன.  அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதும்பொழுது காலத்தால் அழியாமல் அவை நிலைத்திருப்பது அசாத்தியமானதும், ஒரு வகையில் வருந்தத்தக்கதுமாகும். வெகுவாகத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் அறிவியலில் நேற்றைய சாதனைகள் இன்றைய சாதாரணங்கள், நாளை அவை முற்றிலுமாக மாறிப்போயிருக்கும்.  [...]


லேசருக்கு ஐம்பது வயது -2

இன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள். இதையொட்டி லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது இரண்டாம் பகுதி.
[Audio clip: view full post to listen]


லேசருக்கு ஐம்பது வயது – 1

இன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள்.  இதையொட்டி  லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது பகுதி ஒன்று.
[Audio clip: view full post to listen]


2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
2010 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் [...]


Photonics in India

டிசம்பர் மாத Photonics Spectra சஞ்சிகை Photonics Is Heating Up in Indiaஎன்று ஒரு முகப்புக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது. ஆர்வத்துடன் கட்டுரையைப் படித்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எந்த புண்ணியவதியோ தெரியவில்லை, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே ஒரு கவர் ஸ்டோரி எழுதியிருக்கிறார்.  கட்டுரையில் கொச்சி பல்கலைக்கழகம், பெங்களூர் ராமன் ஆய்வுக்கூடம், ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிறுவனம் இவற்றைப் பற்றி மாத்திரமே எழுதியிருக்கிறார்.
உண்மையில் இவற்றைத் தாண்டி பல விஷயங்கள் இந்தியாவில் இருக்கின்றன. (நான் இந்தியாவை விட்டு [...]


அறிவியல் திருவிழா

நேற்று டொராண்டோ நகர் முழுவதிலும் அறிவியல் திருவிழா நடந்தது. Science Rendezvous என்று பெயரிடப்பட்ட இந்த விழாவுக்கு இது இரண்டாம் ஆண்டு. சென்ற வருடம் இதே நாளில் நான் துருக்கி செல்ல நேர்ந்ததால் விழாவில் ஒரு மணிநேரம்தான் செலவிட முடிந்தது, நேற்று நாள் முழுவதும் பையன்களுடனும் மனைவியுடனும் முழுவதுமாகக் களிக்க முடிந்தது.


அறிவியல் கூட்டுப்பதிவு

பல நாட்களாக நினைத்து ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த அறிவியல் கூட்டுப்பதிவு ஒரு வழியாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. ariviyal.info தளம் இப்பொழுது செயற்பாட்டிலுள்ளது.  நண்பர்கள் பத்ரி, அருண் இருவருடன் நானும் இணைந்து தமிழில் அறிவியல் சம்பந்தமான விஷயங்களை எழுதவிருக்கிறேன்.  இப்பொழுது எங்களுடன் கூட அருள் செல்வனும் இணைந்திருக்கிறார்.
இந்த வருடம் உலக வானியல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை அறிவியல் தளத்தில் எழுதியிருக்கிறேன்.  இயன்றவரை வானியல் சமப்ந்தப்பட்ட விஷயங்களை அதிகம் எழுத உத்தேசம்.  நான் வாரந்தோறும் கனேடியத் தமிழ் [...]


அன்றாட அறிவியல்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விட்டுப்போயிருந்த என் வானொலி அறிவியல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து வாரங்களாக மீண்டும் நடத்திவருகிறேன். நண்பர் விஜயகுலதுங்கன் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி கனேடிய தமிழ் வானொலியில் டொராண்டோ பெருநகரப் பகுதியில் நேரடி ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை திங்கட்கிழமைதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 9:25க்கு என் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வாயிலாக நேரடியாக இணைகிறேன். நிகழ்ச்சியை இணையம் வாயிலாக உலகெங்கும் கேட்கமுடியும் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரம்தான் வேலைசெய்கிறது). [...]