ஐஸ்வர்யா ராயை வெளுப்பாக்கல்

சமீபத்திய Elle சஞ்சிகையின் அட்டையில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் படம் வெளியாகியிருக்கிறது.  இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். ஐஸ்வர்யா வழமையாக இருப்பதைவிட வெளிறிக் காணப்படுகிறார். தொடர்ச்சியாக வெளுப்பு == அழகு என்று புகட்டிவரும் நம் ஊடகங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் அழகுகூட போதவில்லை போலிருக்கிறது.

நன்றி : Sociological Images

இலங்கை வானொலி - அந்த நாட்கள்

இன்றைக்கு ட்விட்டரில் புகழ்பெற்ற விளம்பரங்கள் என்ற தொடர் ஓடிக்கொண்டிருக்க எப்போழுதோ இணையத்திலிருந்து இறக்கிவைத்திருந்த இந்த ஒலித்துணுக்கு நினைவில் வந்தது. பிரபல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் கே.எஸ். ராஜாவின் குரலில் வரும் விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் கொண்ட அற்புதமான பொக்கிஷம் இது.  எங்கிருந்து பெற்றேன் என்பது மறந்துவிட்டது. எனவே இணைப்புத் தரமுடியவில்லை. மன்னிப்பும் நன்றிகளும்.

[audio:http://domesticatedonion.net/tamil/wp-content/uploads/2010/02/ksraja.mp3|titles=ksraja]

அந்தநாளும் வாராதோ

29 அக்டோபர் 1932 நாளிடப்பட்ட ஆனந்தபோதினி எனும் திங்களிதழ் காணப்பெற்றோம். என். முனுசாமி முதலியார் எனும் பெருந்தகையின் ஆசிரியத்தில் வெளிவந்த இந்த ஸஞ்சிகையில் நாம் கண்ட நயத்தகு நல்விஷ்யங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பரம சந்தோஷம். லோகத்தார் வாஸித்து நல்லின்பங்களை அடைவார்கள் என்பது நம் நல்லவா!

Second hand smoking

DNFwrongside.jpg மனதைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களில் இன்னொன்று. மாற்றார் புகையை சுவாசித்தல் (Second hand smoking) எந்த அளவிற்குத் தீங்கானது என்று இந்தப் படம் அழகாகக் காட்டுகிறது. எதிர்ப்புறத்திலிருந்து வரும் புகையைக் காட்ட சிகரெட்டைத் திருப்பி வாய்ப்பக்கம் புகையச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உறைந்து போன பெண்ணின் முகம் நீண்ட காலமாக மாற்றார் புகையைச் சுவாசித்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. மிகவும் அற்புதமான வடிவாக்கம்.

Client: Droits Des Non Fumeurs
Agency: BDDP Unlimited, Paris
Creative Director: Guillaume Ulrich Chifflot

குழந்தைத் தொழிலாளர்கள்

child_labour.jpg
என்னைக் கவர்ந்த பொதுநல விளம்பரங்களின் வரிசையில் இன்னொன்று:

மிகச் சுருக்கமான, கோட்டுச் சித்திரத்தின் மூலம் அதிக தாக்கம் உண்டாக்கும் விளம்பரம் இது. இதன் செய்தி வாசகம் "Say no to child labour" என்பது. சிறுவயதில் வேலை செய்து சிறைப்பட்டுக் கிடக்கும் பெண் நோட்டுப் புத்தகத்தின் வாயிலாக வெளியுலகைக் காணமுடியும் என்று சுட்டுகிறது. இன்னொரு வகையில் படிப்பறிவைப் பெறுவதன் மூலம் சிறுமிக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்ளும் சாத்தியம் இருப்பதையும் சொல்லுகிறது. எந்தவிதமான முகபாவனைகளுக்கும் தேவையின்றி இருகைகளாலும் கம்பியைப் பிடித்திருப்பதன் மூலம் இயலாமையையும், ஆதங்கத்தையும் எளிதில் சொல்ல முடிகிறது. பார்த்த மாத்திரத்தில் சோகத்தை எளிதில் அறிய முடிவதால் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

சிறுமியின் உருவத்தைச் சிறுகுழந்தை வரையும் கோட்டுச் சித்திரம்போலவே வடித்திருப்பதால் இந்த விளம்பரத்தின் செய்தி சிறுமியின் வாயிலாகவே வெளிவருவத்தைப் போன்ற பாரிய தாக்கத்தை உண்டாக்குகிறது.

சென்னையின் முத்ரா விளம்ரம் நிறுவனம் தயாரித்த இந்தப் பொதுநல விளம்பரம் இந்திய விளம்பர நிறுவனங்கள் கழகத்தின் (Advertising Agencies Association of India (AAAI)) 2007 ஆம் ஆண்டிற்கான இளம் படைப்பாளிகளுக்கான விருதைப் (Young Creatives Competition) பெற்றிருக்கிறது. உலக அளவில் மதிப்பு மிக்க கான் விளம்பரப் போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

விளம்பர உத்தி : மறைமுக விளம்பரம்

Dulcolax_Toilet_Paper_Roll.jpg

நேரடியாக நெத்தியடியாகச் சொல்லும் விளம்பரங்களைக் காட்டிலும் மறைமுகமாகச் சுட்டிச் செல்லும் விளம்பரங்கள் சுவாரசியமானவை. இதற்கு அற்புதமான உதாரணம் இங்கே. இது ஜெர்மனியின் டுஸெல்டார்ஃப் நகரின் வீதியில் வைக்கப்பட்ட விளம்பரம். வயிற்றுப் போக்கிற்கு கழிவறைக் காகிதம் மாத்திரம் போதாது எங்கள் மாத்திரை தேவை என்று சுட்டிச் செல்கிறது.

மலம் நிறுத்தும் மாத்திரைக்கு சுவாரசியமாக விளம்பரம் செய்வது கடினம். இந்த விளம்பரம் சுவாரசியமானது மாத்திரமில்லாமல், விற்கப்படும் பொருளின்மீது நிர்வாகத்திற்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. இது 2007 ஆம் ஆண்டிற்கான எபிகா விருதைப் (Epica Award) பெற்ற விளம்பரம்.

பெண்ணழகு - கான் பெரும்பரிசு விளம்பரம்

http://www.youtube.com/watch?v=iYhCn0jf46U
வருடாந்திர கான் (Cannes) திரைப்பட விருந்துகள் விழா திரையுலகில் உலக அளவில் முக்கியமான ஒன்று. திரைப்படங்களுடன்கூட விளம்பரங்களுக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டின் அதிமுக்கிய விளம்பர விருது (க்ரான் ஃப்ரீ) டொராண்டோ நகரில் உருவாக்கப்பட்ட Evolution என்ற ஒரு நிமிடப் படத்திற்குக் கிடைத்திருக்கிறது. இது விளம்பர உலகில் ஒரு மைல்கல். Continue reading "பெண்ணழகு - கான் பெரும்பரிசு விளம்பரம்"

வண்ணங்கள் உயிர்த்தெழும்பொழுது

Bravia.jpg

இன்னொரு கண்ணைக் கவரும் விளம்பரம். இது சோனி நிறுவனத்தின் Bravia தொலைக்காட்சிகளுக்காக அர்ஜெண்டினாவைச் சேர்ந்த EURO RSCG நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

Optical Illusions என்ற கட்புல மாயம் வகைப் படங்களை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். (சலிக்கும் அளவுக்கு). ஆனாலும் இந்தப் படத்தில் பல வண்ணங்களையும் அமைப்புகளையும் திறமையாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அச்சில் வெளிவரும் விளம்பரத்தை உற்றுப் பார்க்கும்பொழுது சலனங்கள் தோன்றுவது தொலைக்காட்சியின் உயிர்ரோட்டத்தை அழகாக விளம்பரிக்கிறது.

Sexuality and U

sexualityandu.jpg

புத்திசாலித்தனமாகவும், கலைநுட்பத்துடனும் உருவாக்கப்பட்ட விளம்பரங்கள் எப்பொழுதுமே ஒரு நல்ல கலைப்படைப்பைத் துய்த்தலுக்கு நிகரான மகிழ்ச்சியைத் தரக்கூடியன. இனி தொடர்ந்து அவ்வப்பொழுது காணும் நல்ல விளம்பரங்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதலாமென உத்தேசம். ஆர்வமுள்ள நண்பர்களுடன் இவற்றைப்பற்றி அலசவும் ஆவல். இவற்றில் பெரும்பாலானவை பொதுநல விளம்பரங்களாகவும் இருக்கும். Continue reading "Sexuality and U"