இரண்டாவது குழந்தை - பேயோனை முன்னெடுத்து

அன்புள்ள பேயோன் சார்,

நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உ.யிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல் குழந்தையைத் தனியாக விடாதே, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை.

கோபி,
செட்டிப்பாளையம்

என்ற கேள்விக்கு ரைட்டர் பேயோன் எழுதிய பதிலில் விடுபட்டுப் போனவை.   Continue reading "இரண்டாவது குழந்தை - பேயோனை முன்னெடுத்து"

ஜொள்ளெனப்படுவது யாதெனின்

பலருக்கும் பாவ்லோவ் நாய் சோதனைபற்றி தெரிந்திருக்கும். நாய்களில் உணவுக்கு எச்சில் ஊறலெடுப்பதன் மேலாக உணவைக் கொண்டுவரும் ஆளைப் பார்த்தவுடனேயே ஜொள்விடத் துவங்குவதை பாவ்லோவ் கண்டறிந்தார். இதேபோல மனிதனுக்கும் எச்சில் ஊறுகிறதா என்று இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சோதித்திருக்கிறார்கள்.

... salivas were collected over 5 min in response to olfactory, mechanical, gustatory, visual (images of foods only) stimuli and compared to unstimulated period. The images shown to subjects included pizza, hot dogs, Thai curry, stir fry, strawberries, cake, lemons, pasta bake, Indian curry, roast beef, sweet trolley and roast chicken. Stimuli were randomized but the gustatory stimuli was always given last as citric acid can have a lasting taste. These experiments were repeated five times, before and after lunch, on two subjects.

முடிவு: மனிதன் சாப்பாட்டின் படத்தைப் பார்த்து ஜொள்விடுவதில்லை.

In agreement with several studies ...there was no statistical increase in... salivary flow rates in response to visual images of food. By using a computer screen to present the images rather than using food, any olfactory component was removed. For the stimuli known to cause secretion, there was no effect of hunger (assessed by using a before-and-after lunch collection) nor was there any effect on the resting saliva flow rates.

ஆனால், வேறொரு விஷயத்திற்கு படத்தைக் கூடப் பார்க்கமலேயே ஜொள்விடுவது மனிதனுக்கு மாத்திரம்தான் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.

நன்றி: Improbable Research

பேராசிரியரும் துறைத்தலைவரும்

நான் பொதுவில் மின்னஞ்சலில் வரும் துணுக்குகளைப் பிறருக்கு முற்செலுத்துவதில்லை; வலைப்பதிவில் போடுவதில்லை. ஆனால், இது தவறவிடக்கூடாத விஷயமாகத் தோன்றுவதால் இங்கே;

A man in a hot air balloon realized he was lost. He reduced altitude and spotted a woman below. He descended a bit more and shouted, "Excuse me, can you help me? I promised a friend I would meet him an hour ago but I don't know where I am."

The woman below replied, "You're in a hot air balloon hovering approximately 30 feet above the ground. You're between 40 and 41 degrees north latitude and between 59 and 60 degrees west longitude."

"You must be a professor," said the balloonist.

"I am," replied the woman, "how did you know?"

"Well," answered the balloonist, "everything you told me is probably technically correct, but I've no idea what to make of your information and the fact is, I'm still lost. Frankly, you've not been much help at all. If anything, you've delayed my trip."

The woman below responded, "You must be a department head."

"I am," replied the balloonist, "but how did you know?"

"Well," said the woman, "you don't know where you are or where you're going. You have risen to where you are, due to a large quantity of hot air. You made a promise, which you've no idea how to keep, and you expect people beneath you to solve your problems. The fact is you are in exactly the same position you were in before we met, but now, somehow, it's my fault."

Agathiyar Antideath

இன்று  iTunes மேய்ந்துகொண்டிருந்தபொழுது கண்ணில்பட்டது.  99 டாலருக்கு சகா வித்தை கற்றுத்தரும் இந்த பயனி (Application, app)யில் என்ன இருக்கிறது என்று யாராவது சொன்னால் தன்யனாவேன்.

அந்தநாளும் வாராதோ

29 அக்டோபர் 1932 நாளிடப்பட்ட ஆனந்தபோதினி எனும் திங்களிதழ் காணப்பெற்றோம். என். முனுசாமி முதலியார் எனும் பெருந்தகையின் ஆசிரியத்தில் வெளிவந்த இந்த ஸஞ்சிகையில் நாம் கண்ட நயத்தகு நல்விஷ்யங்களை அன்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பரம சந்தோஷம். லோகத்தார் வாஸித்து நல்லின்பங்களை அடைவார்கள் என்பது நம் நல்லவா!

வெண்பாம் வெள்ளி

வெட்டியான ஒரு வெள்ளிக்கிழமை இரவு.

இங்கிருந்து துவங்குகிறது

@donion வெங்கட் நீங்களும் இருக்கிறீர்களா? வந்து ஒரு கை கொடுப்பது?11:25 AM Jun 19th from TwitterFox in reply to donion

பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
ஆப்புஅடிக்கிறதே வேலை
- http://twitter.com/donion/status/2247312202 Continue reading "வெண்பாம் வெள்ளி"

13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு

(வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

புகழ்பெற்ற பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கவிஞர் ஜலாலுதீன் ரூமியின் கவிதை (கண்டுபிடிப்பு) சமீபத்திய மருத்துவ சஞ்சிகைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. Archives of Sexual Behavior என்ற மருத்துவ சஞ்சிகையில் பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மானிய மருத்துவர் ஒருவர் பெண்களின் கஷ்டத்தைப் போக்க கண்டுபிடித்த வழியைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

Kompanje, E. J. O. (2006). Painful sexual intercourse caused by a disproportionately long penis: An historical note on a remarkable treatment devised by Guilhelmus Fabricius Hildanus (1563–1643). Archives of Sexual Behavior, 35, 603–605.

இதற்கு பின்னூட்டமாக அதே சஞ்சிகையில் கவிஞர் ஜலாலுதீன் ரூமி இத்தகைய கண்டுபிடிப்பு ஒன்றை 13ஆம் நூற்றாண்டிலேயே தனது கவிதையில் விவரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

(ஜலாலுதீன் ரூமியின் பல கவிதைகள் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கிடைப்பதால் நான் இதைத் தமிழாக்கம் செய்ய முயற்சிக்கப்போவதில்லை. Continue reading "13ஆம் நூற்றாண்டுக் கவிஞர் ரூமியின் அற்புதக் கண்டுபிடிப்பு"