தியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது

theodore_bhaskaranமிக மகிழ்ச்சியான செய்தி; 2014-க்கான இயல் விருது தியோடர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது.

தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுசூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்

1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு பாம்பின் கண் 2012இல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003இல் தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராக பணியாற்றினார் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உண்டு.

இயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

காலம் - 40வது இதழ் வெளியீடு

காலம் சஞ்சிகையின் நாற்பதாவது இதழ் வெளியீடு

நேரம் : டிசம்பர், 1, 2012.  மாலை 5:30

இடம்: தூய மரியா கொரெட்டி கத்தோலிக்கப் பள்ளி

21 கென்மார்க் பொலிவார்ட்  (கென்னடி - எக்லிங்டன் இடைநிறுத்தமருகே), ஸ்கார்புரோ

 

அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள்

அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி - ஒரு நிகழ்வு

காலம் - 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை

இடம் - Munk Centre, 1 Davenshire Place, University of Toronto

சிறப்புப் பேச்சாளர் - கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி)

சிறப்பு விருந்தினர் - எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)

வாழும் தமிழ் புத்தகங்களின் கண்காட்சியும் இடம்பெறும் (நண்பகல் முதல் மாலை 7 மணி வரை)

Love Marriage - V.V. Ganeshananthan

ஒவ்வொரு குடும்பமும் திருமணத்தில் துவங்குகிறது; ஒவ்வொரு திருமணமும் குடும்பத்திலிருந்து.  வாசுகி கணேசானந்தனின் Love Marriage குடும்பங்களைத் திருமணங்கள் வழியே ஆராய்கிறது.  இருபத்தியொரு வயதாகும் யாழினி ஈழத்துப் பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறை அமெரிக்கப் பெண். யாழினியின் எண்ணவோட்டங்களாகக் கதை நகர்த்தப்படுகிறது. படிப்பின் இடையே தன்னுடைய பெற்றோர்களின் வார்த்தைக்கு இணங்க யாழினி கனடாவின் டொராண்டோ நகருக்கு வருகிறார்.  இலங்கையிலிருந்து தன் அந்திமக் காலத்தைக் கழிக்க வரும் அவருடைய மாமாவைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றோர்களுடன் இணைந்து ஏற்றுக் கொள்கிறாள்.  குமரன் ஒரு முன்னாள் விடுதலைப்புலி.  'முன்னாள் புலி' என்று ஒன்று கிடையாது, முற்றிப்போன நோயால் பீடிக்கப்பட்டிருப்பதால் குமரனுக்குக் களப்பணியிலிருந்து (இயக்கத்திலிருந்தல்ல) விலகி இறுதிநாட்களைக் குடும்பத்துடன் கழிக்க அனுமதி கிடைக்கிறது.  அவருடன் கூடவே வரும் அவரது பதினெட்டு வயது மகள் ஜெனனி.  இயக்கத்திலிருக்கும் குமரன்-சகபோராளி இல்லற உறவின் எச்சம். ஜெனனியின் தாய் களத்தில் இறந்துபட, குமரனைப் புற்றுநோய் பீடிக்க  இயக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறுதி நாட்களைக் கழிக்க டொராண்டோ வரும் குமரனுக்கு யாழினியின் குடும்பம் உதவுகிறது.

{Love Marriage by V.V. Ganeshananthan, Random House, 2008 Amazon Link}

Continue reading "Love Marriage - V.V. Ganeshananthan"

வலையும் படைப்புச் சாத்தியங்களும்

எல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர அடைக்கலம் கீபோர்ட். விரைவில் இணையம் வழியே அவரைப் போல ஆர்வம் இந்திய மென்கலன் நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பாடல்களை வெளியிட்டார். இதில் முக்கியமான விஷயம் திரையிசையை ஒத்த பாடல்களை உருவாக்குவதற்கு பல பேர் ஒன்று சேர வேண்டியிருக்கிறது; பாடலாசிரியர், இசையமைப்பாளர், வாத்தியக் கலைஞர்கள், பாடகர், ஒலிப்பதிவு நுட்பர் என்று பலருடைய ஒத்துழைப்பு தேவை. முந்தைய நாட்களில் இவரகள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே ஒலிப்பதிவுக் கூடத்தில் கூட வேண்டியிருந்தது. நவீன நுட்பம் இதைத் தேவையற்றதாக ஆக்கியிருக்கிறது. ஆரம்பகாலப் பாடகர் ஒருவரை வைத்துப் பாடலைப் பதிவு செய்து அனுப்பினால் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவருக்குத் வசதிப்படும் நேரத்தில் அதே பாட்டையில் (track) தன் குரலில் பாடியதைப் பதிவு செய்து அனுப்பிவிடுவார். இதே முறையில் ஸ்ரீகாந்தும் அவர் நண்பர்களும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துகொண்டே பாடல்களை உருவாக்கினார்கள். இவற்றில் பல mp3.com, iTunes போன்ற தளங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. விரைவில் ஸ்ரீகாந்தின் திறமை அவரைப் புதிய இடங்களுக்கு இட்டுச் சென்றது. சென்னையில் ஸ்ரீநிதி சிதம்பரத்தின் க்ரியா கிரியேஷன்ஸ் ஸ்ரீகாந்தின் மாஹாகவி என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டது. இந்தத் தொகுப்பில் பாரதியாரின் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் மெட்டமைத்து இசை கோர்க்க எஸ்.பி. பாலசுப்ரமணியம், சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்ரீனிவாஸ் போன்ற முன்னணி திரையிசைப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு பாடல் இங்கே;

பாடல்: சின்னஞ்சிறு கிளியே...
இசை : ஶ்ரீகாந்த் தேவராஜன்
தொகுப்பு: மஹாகவி (2006)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடலாசிரியர் : பாரதியார்
[audio:chinanchiru.mp3]

Continue reading "வலையும் படைப்புச் சாத்தியங்களும்"

வலைப்பதிவுகள் செயற்படும் விதம் - 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்

முதல் பகுதி

மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொழி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள் உலகில் கருத்தரங்கம், குழு விவாதம் என்பவை அறிவுப் பெருக்கத்தை விரைவுபடுத்தும் ஊக்கிகளாகச் செயல்படுவதை மனித வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும். மறுபுறம் சராசரி மனிதர்களின் திண்ணை கூடிப் பேசல், டீக்கடை அரட்டைகள் என்று உலகியல் நெருக்கடிக்களுக்கு இடையில் கணநேரக் கருத்துப் பரிமாறல் நடப்பதைக் காணமுடியும். தகவல் பரிமாற்றம்தாண்டி கலைகளிலும் இது நெடுகிலும் பரவியிருப்பதைப் பார்க்கமுடியும். கமலையில் நீர் சேந்தும்பொழுது எசப்பாட்டும் எதிர்ப்பாட்டும் நம்மூரின் கலாச்சார வெளிப்பாடுகள். இணையம் அந்த எசப்பாட்டிற்கான வெளியை விரித்திருக்கிறது. Continue reading "வலைப்பதிவுகள் செயற்படும் விதம் - 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்"

வலைப்பதிவுகள் செயல்படும் விதம் - 1

தமிழில் வலைப்பதிவுகள் தோன்றி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பொழுது இப்படி ஒரு தலைப்பிட்டு ஒன்றை எழுதுவதன் அபத்தம் தெரிகிறது. மறுபுறத்தில் சென்ற இரண்டு வாரத்தில் பிரபு ராஜதுரை பதிவு மற்றும் என் பதிவில் அச்சு ஊடகம், மின்னூடகம், இவை செயல்படும் விதங்கள் குறித்த கருத்துப் பரிமாறல்களைத் தொகுத்து இப்படியொன்றை எழுதினால் பாவமில்லை என்றுதான் தோன்றுகிறது.

முன்னதாக - இது வலைப்பதிவுகள் செயற்பாட்டைக் குறித்த மதிப்பீடோ விமர்சனமோ இல்லை. வெறும் நுட்ப ரீதியான என் புரிதல்களைத் தொகுத்து எழுதுவதே இதன் நோக்கம். வலைபபதிவுகள் எப்படித் தோன்றின? (பத்து மதிப்பெண்கள்), தமிழின் முதல் வலைப்பதிவாளர் யார்? (இருபது மதிப்பெண்கள்) போன்ற கேள்விகளைத் தெரிவில் விட்டுவிடுகிறேன். Continue reading "வலைப்பதிவுகள் செயல்படும் விதம் - 1"

புத்தக விமர்சனம் : The Indian Clerk

indian_clerk.jpgInline23.gif
இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச் சரித்திர நாவல் துவங்குகிறது. சரித்திர நாவல்களில் நாம் பெரிதும் கண்டவை உண்மை நிகழ்வுகளினூடாக புனைவு மாந்தர்கள் உலவும் களங்களைத்தான். கற்பனை கதாபாத்திரங்கள் உண்மை சரித்திர நிகழ்வுகளில் பங்குபெறுவார்கள் (புலிநகக் கொன்றை நாவலில் கண்ணனும், நம்பியும் பெரியார் பேருரையைக் கேட்பதைப் போல). தொட்டுக்கொள்ள ஊறுகாயாக உண்மை சரித்திர நாயகர்கள் அவ்வப்போது வந்துபோனாலும் கதையின் மையமாக கற்பனை மாந்தர்களே பெரிதும் இருப்பார்கள். வேறொருவகையான சரித்திரப் புதினத்தில் உண்மைக் கதாமாந்தர்கள் கற்பனை சம்பவங்களில் இடம்பெறுவார்கள். (இருந்தபோதும் கதையின் பெரும நிகழ்வுகள் பெரிதும் சரித்திர சம்பவங்களை ஒத்திருந்தாக வேண்டும்). இந்த இரண்டாம் வகை சரித்திரப் புனைவுகள் அதிகம் எழுதப்படுவதில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அதிகம் மாற்றமுடியாது, உண்மைக் கதைமாந்தர்களின் பிம்பத்தைப் பெரிதும் சிதைக்கமுடியாது என்ற புனைவு நெருக்கடிக்களுக்கு இடையில் கதாசிரியனுக்கான எல்லைகள் குறுகிச் செல்ல, கதாமாந்தர்களின் உளவியல், தனிப்பட்ட சம்பவங்கள், ஒன்றிரண்டு புனைவுப் பாத்திரங்களின் கோப்பு ஆகியவைமட்டுமே இதில் சாத்தியம். இத்தனைச் சிக்கல்களுக்கிடையில் டேவிட் லெவிட் இந்தப் புதினத்தை எழுதியதே ஒரு சாதனையாகத்தான் தோன்றுகிறது. Continue reading "புத்தக விமர்சனம் : The Indian Clerk"

ஶ்ரீரங்கம் "சுஜாதா" ரெங்கராஜன்

sujatha.pngசற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.

ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.

என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் உருவகித்துக் கொண்டு ஸ்டெப் கட்டிங், சாக்பீஸைத் தூக்கிப்போட்டு வாயால் பிடித்தல் என்று தங்களுக்கான பிம்பங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் எனக்காக நான் வரித்துக் கொண்ட தோற்றம் வஸந்த். அது "மோபெட்டில் ஏறி ஆக்ஸ்லரேட்ட எட்டு நொடிக்குள் அறுபது" என்று செயலில் துரிதம் காட்டுவதிலும், அடுத்தத் தெரு உஷாவிடம் அபத்த ஜோக் சொல்லவும், மதியம் தூங்கி எழுந்தவுடன் பேச்சு குளறும் பாட்டிக்கு வந்திருப்பது மயஸ்தேனியா க்ராவிஸ் என்று வாயில் நுழையாத பெயரைச் சொல்லி மாமாவைப் பயமுறுத்தவும், நீண்ட நேரமாக கட்டைப் போட்டு ஓவர்களை வீணடிக்கும் பீக்காசுவை 'ஹேபியஸ் கார்பஸில்' வெளியே அழைக்கிறேன் என்று எதிர் காப்டனிடம் சொல்லவும், செஸ்ஸில் தோற்றுப் போன வக்கீல் மாமாவிடம் ரை லோபெஸ் ஒப்பனிங்க்கு நைட்டை வெட்டுக்கொடுத்ததுதான் உங்கள் தோல்விக்குக் காரணம் என்று அவர் முகத்தில் பேஸ்த் அடிக்கச் சொல்லிவிட்டு நகர்வதற்கும் இன்னும் இத்யாதி மூளை, ஆண்மை, இளமை சமாச்சாரங்களுக்கும் நம்மிடம் இருக்கும் வஸந்த்-தனம்தான் காரணம் என்ற பதின்மக் கதாநாயகக் கனவுகளுக்குப் பேருதவியாக இருந்தது. Continue reading "ஶ்ரீரங்கம் "சுஜாதா" ரெங்கராஜன்"

மு. தளையசிங்கம் படைப்புகள் - வெளியீட்டு விழா

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொள்ள வேண்டும். மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் மு.பொன்னம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தத் தொகுப்பு தமிழின் மைய நீரோட்டத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் புதிய சிந்தனையாக ஈழத்தில் கிளைத்தெழுந்த விதத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். தனிப்பட்ட முறையில் நான் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

திரு. தளையசிங்கத்தின் சில எழுத்துக்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் நூலகம் தளத்தில் கிடைக்கின்றன.
அவரைப்பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை நண்பர் டாம். சிவதாசன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.
இன்னொரு நல்ல கட்டுரை வீரகேசரியிலிருந்து வசந்தனால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

மு. தளையசிங்கம் படைப்புகள் - நூல் வெளியீடு

இடம்: ஸ்கார்ப்ரோ சிவிக் சென்டர்
நாள் : 26 ஜனவரி 2008,சனிக்கிழமை
நேரம் : பிற்பகல் 1:00 மணி
ஒழுங்கமைப்பு : புங்குடுதீவு, பழைய மாணவர்கள் சங்கம். டொராண்டோ, கனடா.