தியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது

theodore_bhaskaranமிக மகிழ்ச்சியான செய்தி; 2014-க்கான இயல் விருது தியோடர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது.

தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுசூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்

1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு பாம்பின் கண் 2012இல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003இல் தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராக பணியாற்றினார் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உண்டு.

இயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

காலம் - 40வது இதழ் வெளியீடு

காலம் சஞ்சிகையின் நாற்பதாவது இதழ் வெளியீடு

நேரம் : டிசம்பர், 1, 2012.  மாலை 5:30

இடம்: தூய மரியா கொரெட்டி கத்தோலிக்கப் பள்ளி

21 கென்மார்க் பொலிவார்ட்  (கென்னடி - எக்லிங்டன் இடைநிறுத்தமருகே), ஸ்கார்புரோ

 

2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
2010 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 31 மே 2010
விண்ணப்பம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு : http://sites.google.com/site/tcaward/
பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.

நிழற்படப் போட்டி பரிசு

[album id=1 template=extend]
கடந்த வார இறுதியில் டொராண்டோ தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர தெற்கு ஓண்டாரியோ ஆர்கிட் சொஸைட்டியின் வாலண்டைன் தின கண்காட்சியில் என்னுடைய இரண்டு நிழற்படங்களையும் இரண்டு டிஜிட்டல் ஓவியங்களையும் (புகைப்படமாக எடுத்து மென்கலன் உதவிகொண்டு ஓவியங்களாக மாற்றப்பட்டவை) போட்டிக்கு வைத்திருந்தேன். ஒரு போட்டியாளர் தொகுதியில் இரண்டு படைப்புகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டார். நான் வைத்திருந்த படங்களை மேலுள்ள குறும்படத்தில் சொடுக்கிப் பார்க்கலாம். எல்லா படைப்புகளையும் 12' X 18' அளவில் வைத்திருதேன். இங்கே சற்று குறைந்த தரத்தில் போட்டிருக்கிறேன். Continue reading "நிழற்படப் போட்டி பரிசு"

அறிவியல் கூட்டுப்பதிவு

பல நாட்களாக நினைத்து ஒத்திப் போட்டுக்கொண்டிருந்த அறிவியல் கூட்டுப்பதிவு ஒரு வழியாகத் தொடங்கப்பட்டிருக்கிறது. ariviyal.info தளம் இப்பொழுது செயற்பாட்டிலுள்ளது.  நண்பர்கள் பத்ரி, அருண் இருவருடன் நானும் இணைந்து தமிழில் அறிவியல் சம்பந்தமான விஷயங்களை எழுதவிருக்கிறேன்.  இப்பொழுது எங்களுடன் கூட அருள் செல்வனும் இணைந்திருக்கிறார்.

இந்த வருடம் உலக வானியல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை அறிவியல் தளத்தில் எழுதியிருக்கிறேன்.  இயன்றவரை வானியல் சமப்ந்தப்பட்ட விஷயங்களை அதிகம் எழுத உத்தேசம்.  நான் வாரந்தோறும் கனேடியத் தமிழ் வானொலியில் வழங்கி வரும் அறிவியல் செய்திகள் நிகழ்ச்சியையும், நேரடி தொலைபேசி கேள்வி-பதில் நிகழ்ச்சியையும் ஒலிச்சேவையாக வழங்க முயற்சி செய்கிறேன்.

அறிவியல் தளத்திற்கு உங்கள் ஆதரவை வேண்டுகிறேம். இயன்றவரை பிறருக்கு இதைப் பற்றி தெரிவியுங்கள். நீங்கள் வலைப்பதிவோ இணையதளமோ வைத்திருந்தால் அதில் அறிவியல் தளத்திற்கு தொடுப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். உங்கள் எண்ணங்களைத் தவறாது எழுதுங்கள்.

அன்றாட அறிவியல்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக விட்டுப்போயிருந்த என் வானொலி அறிவியல் நிகழ்ச்சியை கடந்த ஐந்து வாரங்களாக மீண்டும் நடத்திவருகிறேன். நண்பர் விஜயகுலதுங்கன் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சி கனேடிய தமிழ் வானொலியில் டொராண்டோ பெருநகரப் பகுதியில் நேரடி ஒலிபரப்பாகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நேரப்படி இரவு 9:00 முதல் 10:00 வரை திங்கட்கிழமைதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 9:25க்கு என் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வாயிலாக நேரடியாக இணைகிறேன். நிகழ்ச்சியை இணையம் வாயிலாக உலகெங்கும் கேட்கமுடியும் (இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் மாத்திரம்தான் வேலைசெய்கிறது). Continue reading "அன்றாட அறிவியல்"

புலி மேலேந்து எறங்கியாச்சு

சரியாக ஐந்து வருடமாகச் சவாரி செய்துகொண்டிருந்த புலியின் மீதிருந்து இன்றைக்குக் காலை வெற்றிகரமாக கீழே இறங்கிவிட்டேன் (என்று நம்புகிறேன்).

தமிழிலில் வலைப்பதிவு எழுதும் யாரும் செய்யாத ஒரு காரியத்தை நான் இவ்வளவு நாளாகத் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததேன்.  2003 ஜூலையில் தொடங்கிய நாளிலிருந்து நேற்றுவரை என் வலைப்பதிவு என் வீட்டிலிருந்த சேவை வழங்கியால் இயங்கிக் கொண்டிருந்தது. நண்பர்களில் பலரும்  ப்ளாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் என்று இலவசச் சேவைகளைப் பயன்படுத்திவருகிறார்கள். மிகச் சிலர் (ஒரு சதவீதம்??) சொந்தமாக இணைய தளம் பதிவு செய்து வழங்குசேவை நிறுவனத்துடன் ஒப்பந்தம் கொண்டு தாமாகவே வலைப்பதிவுப் பொதிகளை நடத்தி வருகிறார்கள். நான் இது நாள்வரை என் வீட்டிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த லினக்ஸ் கணினி ஒன்றின் உதவியுடன்  என் domesticatedonion.net தளத்தை நடத்திக் கொண்டிருந்தேன். Continue reading "புலி மேலேந்து எறங்கியாச்சு"

மறுபடியும்

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக  என் வழங்கியில் கேளாறுகள் போன்ற பல காரணங்களினால் என் வலைப்பதிவு செயலிழந்து போக நேரிட்டது. இதைச் சரி செய்யப் போக வழங்கி இயங்கும் உபுண்டுவின் புது வடிவத்திற்கு மாற வேண்டியிருந்தது. அப்படி மாறப்போக தரவுத்தளம் (mysql)  கோபித்துக் கொண்டுவிட்டது. இடையில் வேலை நிமித்தமாக ஐரோப்பியப் பயணமும் சேர்ந்துகொள்ள  "ஆவின மழைபொழிய இல்லம்வீழ..." கதைதான்.

ஒரு வழியாக இப்பொழுது கொஞ்சம் சரி செய்திருக்கிறேன். இனி பதிவுகளைத் தொடர்ந்து எழுதமுடியும்.  தற்பொழுது பழைய பதிவுகளின் வரிசை எண்கள் மாறிப்போயிருக்கின்றன.  எனவே பழைய இணைப்புகளில் சில சரிவரச் செயற்படா.  இயன்ற அளவிற்கு இதைச் சரிசெய்ய முயற்சிக்கிறேன். இசைப்பதிவுகளில் பாடல்களுக்கான இணைப்புகள் சரியாக இல்லை என்று தெரிகிறது. இதையும் சரி செய்கிறேன். வேறு ஏதாவது சிக்கல்கள் இருந்தால் தெரியப்படுத்துபவர்களுக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.

வரும் நாட்களில் உங்களுடன் மீண்டும் உரையாட முடியும் என்பதில் மகிழ்ச்சி.

சோதனை - wordpress 2.5

வேர்ட்பிரஸ் 2.5 நிறுவிய பின் பதிவுகளை எழுதுவதில் சிக்கலிருக்கிறது. நீண்ட பதிவுகளை உள்ளிடமுடியவில்லை.

இந்தச் சிறிய இடுகையைப் பதிப்பிக்க முடியுமா?

நிழற்படப் போட்டி - விருது

first_prize.jpgthird_prize.JPG

ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden - ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. ராயல் பொட்டானிக்கல் கார்டன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட் செடிகள் இடம்பெறுகின்றன. ஆர்க்கிட்களின் பல பிரிவுகளுக்கும் தனித்தனி பரிசுகள் உண்டு. போட்டியின் மறுபுறத்தில் நிழற்படங்களைத் தவிர கோட்டோவியம், நீர்வண்ணம், எண்ணெய்ப்பூச்சு, பீங்கான்/களிமண் என்று பல பிரிவுகளில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே மூன்று பரிசுகள் உண்டு.

மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிழற்படப் பிரிவில் என் படங்கள் (ஒரு போட்டியாளர் இரண்டு படைப்புகளை மாத்திரமே சமர்ப்பிக்கலாம்) மூன்றாவது மற்றும் இரண்டாவது முதலாவது பரிசுகளைப் பெற்றன. நிழற்படப் போட்டியொன்றில் நான் பங்குபெறுவது இதுதான் முதல்முறை. இரண்டு படங்களும் சென்ற வருடக் காட்சியில் எடுக்கப்பட்டவை (காட்சியில் முக்காலி மற்றும் விசேட ஒளியமைப்புகளுக்கு அனுமதி இல்லை, எனவே இருக்கும் நிலையைக் கொண்டே படங்களை எடுக்க வேண்டும்.) நிக்கான் ரா (RAW) கோப்பாகப் பதியப்பட்டவை, Apple Aperture உதவியுடன் JPG வடிவில் மாற்றப்பட்டன. பின்னர் கிம்ப், உதவியுடன் பின்புலங்கள் நீக்கம் செய்யப்பட்டன.

பரிசு பெற்ற படங்கள் இங்கே

மூன்றாவது பரிசு : http://domesticatedonion.net/photos/index.php/2008/01/13/cymbidium/

முதல் பரிசு : http://domesticatedonion.net/photos/index.php/2008/03/12/phyllis-scott-milne-award/

கூடுதலாக, Digital Photography and Digital Art இரண்டுக்குமான ஒட்டுமொத்தப் பரிசான Best in Class - Phyllis and Scott Milne Award-ம் மஞ்சள் ஃபெலனாப்ஸிஸ் ஆர்க்கிட் படத்திற்குக் கிடைத்தது.