• About வெங்கட்

    http://

    திரையிசையில் இராகங்கள் – மாயாமாளவ கௌவ்ள

    by  • January 5, 2010 • Uncategorized, இசை • 8 Comments

    இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம்.  இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது.  மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு [...]

    Read more →

    திரையில் கர்நாடக இசை இராகங்கள்

    by  • January 3, 2010 • இசை • 7 Comments

    நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புது வருடத்தில் என்னுடைய வானொலி நிகழ்ச்சியில் புதிதாக கர்நாடக இசையின் அடிப்படையிலமைந்த திரைப்பாடல்களை வாரந்தோறும் வழங்கவிருக்கிறேன். சென்ற வருடத்தின் இறுதியில் தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் என்ற தொடரை நிறைவு செய்தேன். பதினெட்டு பாகங்களாக ஒலிபரப்பப்பட்ட இந்தத் தொடர் ஏற்கனவே நான் வலைப்பதிவில் எழுதியவற்றைச் சற்றே விரிவுபடுத்தி வழங்கப்பட்டது. ஜாஸ் இசையைப் பற்றி நம்மவர்களுக்கு அதிகம் பரிச்சயமிருக்காது என்ற காரணத்தால் நிறைய விளக்கங்களையும் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு பாடல்களை மட்டுமே [...]

    Read more →

    தாளம் உலகெங்கும் -3

    by  • November 24, 2009 • இசை • 2 Comments

    பல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது.  கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி நேரங்கிடைக்கும் பொழுது சிறிய பதிவுகளானாலும் தொடர்ந்து எழுத உத்தேசம். வரும் கருத்துகள்/உரையாடல்களைப் பொருத்து இந்தத் தொடர் விரிவடையலாம். இப்போதைக்கு சுருக்கமாக. டெனிஸ் சேம்பர்ஸ் (Dennis Chambers) முதல் தர ஜாஸ்-ப்யூஷன் கலைஞர். முறையான பயிற்சியில்லாதவர். நான்கு வயதிலேயே [...]

    Read more →

    ஒபாமாவுக்கு நோபெல் அமைதிப் பரிசு

    by  • October 9, 2009 • சமூகம் • 3 Comments

    சற்றுமுன் வெளியான செய்தியின்படி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே பராக் ஒபாமாவின் கொள்கைகளை ஆதரித்துவரும் எனக்கேகூட இது அதிர்ச்சியான செய்திதான்; சொல்லாப்போனால் எனக்கு இது அருவருப்பைத் தருகிறது.  இந்தப் பரிசுக்கு எந்த விதத்திலும் ஒபாமா தகுதியானவரில்லை. வருங்காலத்தில் ஒருநாள் அவர் இதற்குத் தகுதியாகக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கும்பொழுதும், இப்பொழுது இது அபத்தமாகத்தான் தோன்றுகிறது.

    Read more →

    முடிவில்லா அபத்தங்களின் கதாநாயகன்

    by  • September 22, 2009 • சமூகம் • 3 Comments

    சமீபத்தில் ஜான் எட்வர்ட்ஸைப் போல ஒரு அடிமுட்டாள் அரசியல்வாதியை நான் கண்டதில்லை.  சென்ற வருடம்வரை இந்த ஆள் அமெரிக்க அரசியலில் ஒழுக்கத்தைத் தூக்கிப் பிடிப்பதாக மேடைதோறும் முழங்கி வந்தவர்.  பின்னர் அமெரிக்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்பொழுது இவருக்கு மனைவியைத் தவிர ஒரு தொடுப்பு இருப்பது தெரியவந்த்து.  எட்வர்ட்ஸின் மனைவி ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டே அவருடன் ஏன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற கேள்வி இருந்தது.

    Read more →

    தமிழ்மணம் ஐந்தாண்டு நிறைவையொட்டி

    by  • August 29, 2009 • சமூகம் • 0 Comments

    முதலில் தமிழ்மணத்திற்கும் அதன் நிர்வாகக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். வியப்பாக இருக்கிறது திரும்பிப் பார்ப்பதற்குள் ஐந்து ஆண்டுகளாகியிருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் காசி தமிழ்மணத்தின் ஐந்தாண்டு நிறைவிற்காக என்று சில கேள்விகளை அனுப்பி பதிலளிக்கச் சொல்லியிருந்தார். கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் வேலைப்பளுவின் காரணமாகப் பாதியில் நின்றுபோயிற்று. காலம் கடந்தேனும் பதில்களை முடித்து, சில கருத்துகளைச் சொல்லிவைக்கிறேன்.

    Read more →

    பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்

    by  • July 4, 2009 • கல்வி, சமூகம், விளையாட்டு • 13 Comments

    இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது. அருள்செல்வன் சொல்வதுபோல பள்ளிச் சிறுவர்களை துப்புரவில் ஈடுபடுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சூழலையும் துப்புரவாக வைத்துக் கொள்ள குழந்தைகளுகுக்குக் கற்றுக் கொடுப்பது எந்தவகையில் தவறாகிறது என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் படித்த ஒரத்தநாடு ஊராட்சி [...]

    Read more →

    வெண்பாம் வெள்ளி

    by  • June 20, 2009 • நகைச்சுவை • 0 Comments

    வெட்டியான ஒரு வெள்ளிக்கிழமை இரவு. இங்கிருந்து துவங்குகிறது @donion வெங்கட் நீங்களும் இருக்கிறீர்களா? வந்து ஒரு கை கொடுப்பது?11:25 AM Jun 19th from TwitterFox in reply to donion பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து ஆப்புஅடிக்கிறதே வேலை – http://twitter.com/donion/status/2247312202

    Read more →

    அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

    by  • May 16, 2009 • இலக்கியம், கனடா • 2 Comments

    அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள் அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி – ஒரு நிகழ்வு காலம் – 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை இடம் – Munk Centre, 1 Davenshire Place, University of Toronto சிறப்புப் பேச்சாளர் – கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி) சிறப்பு விருந்தினர் – எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்) வாழும் [...]

    Read more →

    டொராண்டோ முக்கிய நெடுஞ்சாலையை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு

    by  • May 10, 2009 • கனடா, சமூகம் • 1 Comment

    இன்று மாலை டொரண்டோ நகரின் அதிமுக்கியமான கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். மாலை ஏழு மணியளவில் நகர மையத்திலிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் குழந்தைகள் முதியோர்களுடன் ஆதரவாளர்கள் நுழைய போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் பெரும் அமளி நிலவுகிறது. சற்றுமுன் நகரின் போலீஸ் கமிஷனர் பில் ப்ளேயர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகித்து அவர்களை அகற்றத் தயாராகிவருவதாகச் சொல்கிறார். நான் கேள்விப்படும்வரை நகரில் பொதுமக்கள் பலரும் இதனால் அதிக எரிச்சலடைந்திருப்பதாகத்தான் தெரிகிறது. இது திட்டமிடாமல் தன்னிகழ்வாக நடத்திருப்பதாகச் சொல்கிறார்கள். [...]

    Read more →