அஞ்சலி : ஸ்டீவ் ஜாப்ஸ், 1955-2011

இந்த நூற்றாண்டின் இணையற்ற நுட்பர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் இன்று காலமானார். சமகால வாழ்வில் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகளுள் ஒன்றைப் பயன்படுத்தியிராதவர்கள் மிகச் சிலர்தான் இருக்கக்கூடும். இந்த அளவிற்குத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள் யாருமில்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த அஞ்சலிக் கட்டுரையை நான் ஆப்பிள் மாக் புக் ப்ரோ கணியில் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். என் சட்டைப் பையில் ஐபோன் இருக்கிறது. என் முத்த மகன் ஐபாடில் இப்பொழுது பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறான். இளையவன் ஐபேடில் எதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறான்.  மனைவி மேல் தளத்திலிருக்கும் ஆப்பிள் சர்வர் வழியாகத் தொலைகாட்சியில் ஏதோஒரு பாட்காஸ்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  இதுவே என் குடும்பம் ஸ்டீவ்க்குச் செலுத்தும் மிகச் சிறந்த அஞ்சலியாகத் தெரிகிறது. ஒவ்வொரு இல்லத்திலும் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆப்பிளின் சாதனங்கள் மாறியிருக்கின்றன.  Continue reading "அஞ்சலி : ஸ்டீவ் ஜாப்ஸ், 1955-2011"

2011-சுந்தர ராமசாமி விருது பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ் இலக்கியத் தோட்டம்

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது - பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.

2011 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும்.

பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 12 மார்ச்சு 2011

பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும்.

மேலதிக விபரங்களுக்கு - https://sites.google.com/site/tcaward/home/tamil

ஐஸ்வர்யா ராயை வெளுப்பாக்கல்

சமீபத்திய Elle சஞ்சிகையின் அட்டையில் ஐஸ்வர்யா ராய் பச்சனின் படம் வெளியாகியிருக்கிறது.  இதிலென்ன ஆச்சரியம் என்று கேட்கலாம். ஐஸ்வர்யா வழமையாக இருப்பதைவிட வெளிறிக் காணப்படுகிறார். தொடர்ச்சியாக வெளுப்பு == அழகு என்று புகட்டிவரும் நம் ஊடகங்களுக்கு ஐஸ்வர்யா ராயின் அழகுகூட போதவில்லை போலிருக்கிறது.

நன்றி : Sociological Images

செழியனின் வானத்தைப் பிளந்த கதை புத்தக வெளியீடு

சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்! 'காலம்' இலக்கிய நிகழ்வு: 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்!

சிறப்புப் பேச்சு:   பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி (Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University).

புத்தக வெளியீடு :‘வானத்தைப் பிளந்த கதை’ - செழியன் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்றது.

சிறப்பிதழ் வெளியீடு : 'காலம் 36' மு.பொ. சிறப்பிதழ்

காலம்: நவம்பர் 28 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30

இடம் : 2467 EGLINTON AVE EAST'Toronto. (Close to Kennady Subway)

வாழும் தமிழ் புத்தகங்களின் விற்பனை நடைபெறும்.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அஞ்சலி : பாடகி ஸ்வர்ணலதா

கண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை.

இரவு உறங்கச் செல்லும்பொழுது நாளைய நாளை அமைதியாகக் கழிக்க வேண்டும்.  இயன்றவரை மனதுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கச் செல்வது வழக்கம். குறிப்பாக நீண்ட நாட்களாக வேலையின் பளு நெருக்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு வார இறுதியை இப்படிக்கழிக்கலாமே என்ற ஆதங்கம் இயல்பானது. நேற்று அப்படித்தான் நினைத்திருந்தேன். இன்று காலை விடிந்ததும் என் கண்ணில்பட்ட முதல் செய்தி "பாடகி ஸ்வர்ணலதா மறைவு". Continue reading "அஞ்சலி : பாடகி ஸ்வர்ணலதா"

செல்பேசிவழியே நீர் இறைத்தல்

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.

புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, பின்னர் ரேடியோ அலைவரிசையை முயன்று இறுதியாக செல்பேசிகளின் வழியே குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் தொலைவிலிருந்தபடி பம்ப் செட்களை இயக்க வழிகண்டிருக்கிறார். இந்த அயராத பயணத்தில் அவரது மனைவி அவருக்குப் பெருந்துணையாகத் தொடர்ந்து வந்திருக்கிறார்.  நானோ கணேஷ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கண்டுபிடிப்பு வளரும் சந்தைகளுக்கான செல்பேசி பயன்பாடுகளுக்கான முதல் பரிசை நோக்கியாவிடமிருந்து பெற்றிருக்கிறது. Continue reading "செல்பேசிவழியே நீர் இறைத்தல்"

பேராசிரியரும் துறைத்தலைவரும்

நான் பொதுவில் மின்னஞ்சலில் வரும் துணுக்குகளைப் பிறருக்கு முற்செலுத்துவதில்லை; வலைப்பதிவில் போடுவதில்லை. ஆனால், இது தவறவிடக்கூடாத விஷயமாகத் தோன்றுவதால் இங்கே;

A man in a hot air balloon realized he was lost. He reduced altitude and spotted a woman below. He descended a bit more and shouted, "Excuse me, can you help me? I promised a friend I would meet him an hour ago but I don't know where I am."

The woman below replied, "You're in a hot air balloon hovering approximately 30 feet above the ground. You're between 40 and 41 degrees north latitude and between 59 and 60 degrees west longitude."

"You must be a professor," said the balloonist.

"I am," replied the woman, "how did you know?"

"Well," answered the balloonist, "everything you told me is probably technically correct, but I've no idea what to make of your information and the fact is, I'm still lost. Frankly, you've not been much help at all. If anything, you've delayed my trip."

The woman below responded, "You must be a department head."

"I am," replied the balloonist, "but how did you know?"

"Well," said the woman, "you don't know where you are or where you're going. You have risen to where you are, due to a large quantity of hot air. You made a promise, which you've no idea how to keep, and you expect people beneath you to solve your problems. The fact is you are in exactly the same position you were in before we met, but now, somehow, it's my fault."

உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது

மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID   சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். 

Continue reading "உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது"