Author: வெங்கட்

கவிஞர் மாலதி மைத்ரி

சமீபத்தில் கவிஞர் மாலதி மைத்ரியின் சங்கராபரணி எனும் கவிதைத் தொகுப்பு படிக்கக் கிடைத்தது. இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இன்னும் நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தொகுதியில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் ஒன்று; சங்கராபணி – மாலதி மைத்ரி அதனதன் உலகம் நினைவுகளை கொத்திக் கொத்தி தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய் மரங்கொத்தியின் அலகில் சிக்கித் தவித்து சிறு காற்று கிளை அசைக்க பிடிநழுவி பட்டாம் பூச்சியாய் திசைவிலகும் நீ தழும்பாய் வளர்கிறது மரம் இரை ஏமாற்றிய பசியுடன் பறவை வானத்தை தன் சிறகுகளில் சுருட்டி அமர்ந்திருக்கிறது நீ எங்கு போய்விடுவாய் என்று பறவையின் பார்வைக்கு அப்பால் பாறைக்குள் விரிகிறது தேரையின் இன்னும் ஒர் உலகம் * * * முழு கவிதைத் தொகுதியையும் குறித்த என்னுடைய விமர்சனைத்தை இன்னொரு நாள் எழுதுவேன். என்றாலும் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது மனதில் நெருடிய விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ஒற்றெழுத்துக்களின் தேவை முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. சமகாலக் கவிஞர்களுக்கும் கதையாசிரியர்களுக்கும் இலக்கணம் முற்றிலும் தேவையில்லாத ஒன்றாக மாறிவிட்டிருப்பது சோகமான உண்மை. இவர்களிடமிருந்துதான் இது இறங்கி வெகுஜன எழுத்தாளர்களையும், தொடர்ந்து சராசரி மனிதர்களையும் ஆட்டுவிக்கிறது. எந்த ஒரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் பொழுது அதை முடிந்தவரைப் பிழையின்றி முடிக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும். அரைகுறைக் காரியங்கள் சான்றான்மைக்கு உகந்தன அல்ல. இவர்கள் எல்லோரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது; அடிப்படை இலக்கணப்பிழைகளுடன் எழுதி உங்களால் ஆங்கிலத்தில் (உதாரணத்திற்கு தி ஹிந்துவில் ஆசிரியருக்குக் கடிதம்) பதிப்பிக்க முடியுமா? ஏன் தமிழ் தாழ்ந்து போக வேண்டும். இவர்களில் பலருக்கு இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் அவர்கள் படைப்பாளியின் அடிமடியில் கைவைப்பதாகச் சீறி எழுவார்கள். தங்கள் சிறுமையை வீறு கொண்டு எழுந்து நியாயப்படுத்தும் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போவதைத் தவிர வேறு விடிவு இல்லை. * * * “It’s quicker, easier, and involves less licking.” (1994, Douglas Adams, on the benefits of speaking to his fans via e-mail) * *...

Read More

MP3 is No Sin

உலகெங்கும் இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்; இணையத்தின் வழியே பாடல்களைப் பகிர்ந்து கொள்வது. MP3 – தொழில்நுட்பம் வளர்ந்த உடன், கிட்டத்தட்ட 460 மெகாபைட் தேவையாக இருந்த ஒரு பாடலுக்கு 4 மெகாபைட் போதுமானதாக மாறிவிட்டது. இதனுடன் கூடவே, அதிவேக வலை இணைப்புகளும் பெருகியது, குறுவட்டுகளின் விலை வீழ்ச்சியடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களிடமுள்ள பாடல்களைப் பகிர்ந்து கொள்வது பெருகிவிட்டது. இதன் வேகத்தை Napster, Kazza, DC++ போன்ற நேரடிப் பரிமாறிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இது இசைத்தட்டுக்கள் விற்பனை இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. இந்தப் பன்னாட்டு சமாச்சாரங்களை வேறு மூலையில் போட்டுவிட்டு, நம் நாட்டு நிலைக்கு இதைப் பொருத்திப் பார்த்தால் இந்த MP3 ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்லவேண்டும். நம்மூரில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட திரையிசைக்கு எந்தவிதமான வணிகச் சாத்தியக்கூறுகளும் இல்லை. இருபது வருடங்களுக்கு மேற்பட்ட பாடல்கள் முற்றிலுமாக இழந்து போய்விடவேண்டிய நிலையில்தான் இருக்கின்றன. அந்த நாட்களில் பலருக்கும் இசைத்தட்டுக்களோ, ஒலிநாடாக்களோ வாங்கும் சக்தி இல்லை. பாடல்கள் பெரும்பாலும் வானொலியிலேயே அனுபவிக்கப்பட்டன. இந்த நிலையில் சில நல்ல பாடல்கள் இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு தனிநபர்களிடம்தான் இருக்கின்றன. இவற்றில் சில இப்பொழுது MP3 ஆகப் புணர்ஜென்மம் எடுத்திருக்கின்றன. இந்த வழியில் சமீபத்தில் கேட்கக் கிடைத்த ஒரு பாடல் “மங்கை ஒரு திங்கள்”. இது வெளியாகாத முன் ஒரு காலத்திலே என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பதிவான அருமையான பாடல். இதுபோல முற்றிலுமாக இழந்து போய்விடக்கூடிய பாடல்களைப் பாதுகாக்க MP3 வடிவத்தில் அவற்றை மாற்றி, kazza, DC++, FTP, இன்னும் எந்த வடிவத்திலாவது அவற்றை பலரிடமும் பரப்புவதுதான் ஒரே வழி. இது இசைவணிகர்கள் சொல்வதைப்போல் பாவமான காரியம் அல்ல; புண்ணியம் என்பது எனது அசைக்க முடியாத...

Read More

Tamil Unicode Test

தமிழில் எழுத முடிகிறது. இது தலையைச் சுற்றிக் காதைத் தொடும் முயற்சி. முதலில் சுவடியில் தகுதரத்தில் எழுதி, அதை வெட்டி ஜாவா யுனிகோட் மாற்றியில் ஒட்டி மாற்றினேன். பின், யுனிகோட் செய்தியை வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். விரைவில் இதற்கு ஒரு நேரடி வழி கண்டுபிடிக்கவேண்டும். ஜாவா-வில் யுனிகோட் தமிழை நேரடியாக எழுதுவது சிரமம். (சிரமம் என்று இல்லை, அந்தச் செயலி அமைந்த முறை செவ்வனே இல்லை). Blog-கிற்குத் தமிழில் வலைப்பூ என்று பெயரிடலாம் என்று சொல்கிறார்கள். வலை+பதிப்பு – வின் கவித்துவமான மரூஉவாம். இடிக்கிறது. கவித்துவம் சரிதான் – தொழில்நுட்பம் எங்கே? அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான சொற்களைத் தமிழாக்கம் மொழிமாற்றம் செய்கையில் அது ஆதார அறிவியல்(தொழில்நுட்பக்) கருத்தைச் சுட்டியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கவிநயம் தமிழைக் குழிதோண்டிப் புதைக்காமல் விடாது போலிருக்கிறது. சீக்கிரம் இதற்கு வேறு பெயரிட வேண்டும். இல்லாவிட்டால் இணையம் (Web) என்பதைப் போல் அங்கிங்கெனாதபடி எங்குமாய் வியாபிக்கத் தொடங்கிவிடும். 1998-ல் Internet-க்கு ஊடுவலை என்று முன்மொழிந்தேன், அது web (User Interface) என்பதிலிருந்து Internet (Worldwide Network infrastructure) என்பதைப் பிரித்துக்காட்ட உதவும் என்று நம்பினேன். ஆனால் கேட்பாரில்லாமல்...

Read More

Archives