Author: வெங்கட்

தியோடர் பாஸ்கரனுக்கு இயல் விருது

மிக மகிழ்ச்சியான செய்தி; 2014-க்கான இயல் விருது தியோடர் பாஸ்கரனுக்கு வழங்கப்படுகிறது. தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுசூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக...

Read More

எந்த மின்விளக்கை வாங்கலாம்?

நான் Solid State Lighting,  (LED, Organic LED), Lighting, Photometry துறைகளில் ஆராய்ச்சியாளன். எனவே என் நண்பர்கள் பலரும் என்னிடம் என்ன மாதிரியான மின்சார விளக்குகளை வீடுகளுக்கு வாங்கலாம் என்று கேட்கிறார்கள்.  இன்று நண்பர் இலவசக் கொத்தனார்  இந்தச் சுட்டியைக் காட்டி இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்றார். எனவே, அந்த உந்துதலில்: முதலில் தன்னிலை விளக்கங்கள் சில: 1. நான் பன்னாட்டு   ஒளியூட்டல் கழகத்திற்கான ( International Commission on Illumination, CIE)  கனேடிய தேசியக் குழுவின் தலைவராகச் சென்ற வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு  பொறுப்பு வகிக்கிறேன். ஒளியூட்டல் துறை பல்வேறு நுட்பங்களை உள்ளடக்கியது ( Incandescent, Fluorescent, LED…) எனவே பொதுவில் பல்வேறு தொழில்நுட்பங்களின் சாதக பாதகங்களைப் பொதுவில் விவாதிக்கவும் ஒரு நுட்பத்தைத் தாழ்த்திச் சொல்லவும் தயக்கம்.  குறிப்பாக தற்சமயம் மிகவும் சூடாக விவாதிக்கப்படும் கருத்துகள் சில :  1. மின்னிழை பல்புகளைத் (Incandescent Bulbs)...

Read More

இரண்டாவது குழந்தை – பேயோனை முன்னெடுத்து

அன்புள்ள பேயோன் சார், நான் உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து படித்துவரும் நீண்டகால தீவிர வாசகன். எனக்குத் திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது. மனைவி உ.யிரோடு இருக்கிறார். 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இப்போது உறவினர்கள் முதல் குழந்தையைத் தனியாக விடாதே, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள் என்று நச்சரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். எனக்குக் குழப்பமாக இருக்கிறது. உங்கள் ஆலோசனை தேவை. கோபி, செட்டிப்பாளையம் என்ற கேள்விக்கு ரைட்டர் பேயோன் எழுதிய பதிலில் விடுபட்டுப் போனவை.   * * * இரண்டாம் குழந்தையைப் பெற்றுக்கொள்ள நினைப்பது பேராசை.  நம் சமூகம் சுயமாகத் தனக்குத்தானே வளர்த்தெடுத்த விழுமியங்களை மறந்துவிட்டு ஐரோப்பியர்கள் நம் கலச்சாரத் திரிபாக நம்மிடையே புகுத்தியதை இப்பொழுது நாம் சுமந்து நிற்கிறோம்.  பைபிளில் ஆதிமுதல் இணையான ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கேன், ஆபெல் என்று  இருப்பதாக வருகிறது. எனவே இரண்டு குழந்தை என்பது முற்றிலும் ஆபிரகாமிய மரபையொட்டி வருவது. நம்முடைய காப்பியங்களில் எங்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதாக வரவில்லை. நான்கு (இராமன், பரதன்…),  ஐந்து (பஞ்சபாண்டவர்), நூறு என்றுதான் வருகிறது. நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள தசரதனுக்கு மூன்று மனைவியர் தேவைப்பட்டிருக்கிறது.  அந்தக் கணக்கில் பார்த்தால் ஒரு தம்பதிக்கு 1.33 குழந்தைதான் வருகிறது, இது இரண்டைவிடக் குறைவு .  இராமனுக்கு லவன், குசன் என்று இருவர் இருக்கிறார்களே என்று நீங்கள் குதர்க்கம் பேசக்கூடும்.  புறனடைகள் ஒருபோதும் விதியாகது. அவை விதியை மேலும் நிறுவிக்கொண்டேதான் செல்லும். இந்த இயற்கை நியதியை யாராலும் தடுக்கவியலாது. எனவே நம் கலச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்குக் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகள் தேவை.  ஒவ்வொரு இசுலாமியரும் நான்கு மனைவிகளை மணந்துகொண்டு கணக்கிலடங்காத குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குரான் விதிக்கிறது.  எனவே கௌரவர்களைப் போல நூறுகுழந்தைகளைப் பெற்றுக்கொண்டால்தான் நாம் விரைவாக இழந்துவரும் இந்து-இசுலாமியர் விகிதத்தைச் சரிகட்டமுடியும்.  மறுபுறத்தில் தொடர்ச்சியாக நம் பேலி அறிவுஜீவிகளை பணத்தால் வாங்கி நம் கலாச்சாரம் இழிந்தது என்று நம் தலையில் கட்டி நம் மக்களை கிறிஸ்துவதத்திற்குத் தொடர்ச்சியாக மதம் மாற்றும் நடவடிக்கையையும் கௌரவர்களைப் போல நூறு குழந்தைகளைப் பெறுவது உறுதி செய்யும்.  ஆனாலும் சமகாலத்தில் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நூறு குழந்தைகளை வளர்தெடுக்க முடியாது. சற்றும் சமூகவளர்ச்சிக்கு உதவாத, நடைமுறை, யதார்த்தம்சாராத தொழிற்கல்வி...

Read More

காலம் – 40வது இதழ் வெளியீடு

காலம் சஞ்சிகையின் நாற்பதாவது இதழ் வெளியீடு நேரம் : டிசம்பர், 1, 2012.  மாலை 5:30 இடம்: தூய மரியா கொரெட்டி கத்தோலிக்கப் பள்ளி 21 கென்மார்க் பொலிவார்ட்  (கென்னடி – எக்லிங்டன் இடைநிறுத்தமருகே), ஸ்கார்புரோ...

Read More

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது

தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பரிந்துரைக்கான அழைப்பு   தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். 2012 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் தமிழ் இலக்கியத் தோட்டத்தால் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இப்பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ண்ப்பத்தில் கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் பரிந்துரைக்கப்படுபவரையும் அவரது தகுதிகளையும் குறித்த தகவல்களைத் தருவது நடுவர்களின் தெரிவுக்குப் பேருதவியாக இருக்கும். பரிந்துரைப்பவர் குறித்த தகவல்கள் முழுமையாக வழங்கப்படல் வேண்டும். பரிந்துரைகளை சமர்ப்பிக்க இறுதி நாள் 10  எப்ரில் 2012 பரிந்துரைக்கான விண்ணப்பப் படிவங்களை https://sites.google.com/site/tcaward/home தளத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். பரிந்துரைகளை tcaward@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். பரிந்துரைகளை அனுப்பிய இரண்டு நாட்களுக்குள் உங்கள் பரிந்துரை கிடைத்தமை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்யப்படும். அன்புடன் வெங்கட்ரமணன்...

Read More

Archives