இது இளையராஜாவின் இரண்டாவது படம். வாய்ப்பு தேடி அலைந்த காலங்களிலேயே இளையராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தபோதும் அன்னக்கிளியில் ஆண்குரலில் அமைந்த ஒரே பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே) சோகப்பாடல், எனவே அதற்கு எஸ்.பி.பி பொருந்தவில்லை. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களுக்கு மேலாகக் கொடிகட்டிப் பறந்த இளையராஜா-எஸ்.பி.பி-எஸ்.ஜானகி கூட்டணியின் துவக்கம். என்றும் அலுக்காத மெல்லிசை இது.

பாடல்: நான் பேச வந்தேன்..
படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: வாலி