ஒரு பாடகராகத் திரையில் அறிமுகமான சந்திரபோஸ் (ஏன்டி முத்தம்மா… ஆறு புஷ்பங்கள்) என்பதுகளில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்தார். இதற்கெல்லாம் முன்பாக நாடக நடிகராக இருந்த இவர், பிற்காலத்தில் இசையில் வாய்ப்பு குறைய, தொலைக்காட்சித் தொடர்களில் நடிகராகவும் பங்காற்றியிருக்கிறார். இவர் இசையில் அவ்வப்பொழுது சில இனியமையான பாடல்கள் தோன்றும், அந்த வகையில் இந்தப் பாடல் ஒன்று. ஏனோ இந்தப் பாடல் அதிகம் கவனிப்பைப் பெறவில்லை.

பாடல்: கார்மேகம் ஊர்கோலம் போகும்
படம்: காலமெல்லாம் உன் மடியில் (1986)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ். ஜானக
இசை: சந்திரபோஸ்
பாடல்: வாலி