இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனம் மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் உதவியாளராக, குறிப்பாக இசை ஒருங்கிணைப்பாளராக (Conductor) பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். பட்டணத்தில் பூதம் (அந்த சிவகாமி மகனிடம்…), கைராசி (அன்புள்ள அத்தான் வணக்கம்…). பூவும் பொட்டும் (நாதஸ்வர ஓசையிலே…), போன்ற பல பிரபலாமான பாடல்களைத் தந்தவர். இவர் சகோதரன் ஆர். சுதர்சனமும் ஒரு இசையமைப்பாளர்.

1964-ல் புதிய பறவை படத்தின் மெல்லிசை மன்னருக்கு உதவியாக இசைக்கோர்ப்பை நடத்திக்கொண்டிருந்த பொழுது மின்சாரம் தாக்கி, தன் கேட்கும் திறனை இழந்தார். அதற்குப் பின் ஐந்து படங்களுக்குத் தனியாக இசைமைத்திருக்கிறார். இந்தப் பாடல் இவர் கடைசியாக இசையமைத்த படத்திலிருந்து. அந்த ஒரு படத்தில் இளையராஜா ஆர். கோவர்த்தனத்தின் உதவியாளராக இருந்தார். பின்னாட்களில் ராஜாவுக்கும் இவர் ஒருங்கிணைபாளராகப் பணியாற்றியிருக்கிறார். ராஜாவின் தீவிர இரசிகர்களுக்கு இந்தப் பாடலின் இசைக்கோர்ப்பில் அவரது முத்திரைகள் நெடுகிலும் தென்படும்.

பாடல்: கங்கை நதியோரம்…
படம்: வரப்பிரசாதம் (1976)
பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
இசை: ஆர். கோவர்த்தனம்
பாடல்: புலவர் புலமைப்பித்தன்