இன்று எஸ்.பி.பி-யின் பிறந்த நாள். என் இசை ரசனையின் முதற்படி அவர்தான். அங்கிருந்து தொடங்கி கர்நாடக இசை, மேற்கத்திய செவ்வியலிசை, ராக், மெட்டல், ஜாஸ், ஆப்பிரிக்கன், ஜே-பாப், கே-பாப், ஹிப் ஹாஃப் என்று வகையில்லாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இருந்தபோதும் எஸ்.பி.பியை ஒருதரமாவது கேட்காமல் ஒரு நாள் கழிவதில்லை. இதைத் தவிர அவரைப்பற்றி என்னால் பெரிதாக என்ன சொல்லிவிட முடியும் என்று தெரியவில்லை. இன்று தனது 75-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்; இன்றுவரை அவருடைய குரலின் இனிமை குன்றவில்லை, கற்பனைவளம் வற்றவில்லை. வாழ்த்த வயதெல்லாம் தேவையில்லை, நீண்ட ஆயுளுடனும் நீங்காப்புன்னகையுடன் நீடு வாழுங்கள்.

பாடலுக்கு இசை வி. குமார். இவரைப்பற்றி இன்னொரு நாள் எழுதிக்கொள்ளலாம். தமிழ்த் திரையிசையில் வந்த அற்புதமான பியானோ இசைகளுள் ஒன்று இப்பாடல். இடையீடுகளில் வரும் கார்ட் ப்ரோக்ரெஷன்ஸ் உன்னதமானவை.

எத்தனைக் காலம் வாழ்ந்தாலும் என்னென்ன கோலம் கொண்டாலும், என்னுயிர் நாதம், சங்கீதம்.

பாடல்: ஓராயிரம் கற்பனை…
படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி. குமார்
பாடல்: வாலி