மிகவும் கஷ்டமான இந்த கோவிட்-19 காலகட்டத்தில் ஒரு ‘பக்திப்’ பாடலுடன் இசைக்குறிப்புகளைத் தொடங்கலாம்.

எனக்குத் தெரிந்தவரை இது தமிழில் மிகவும் தனித்துவமான பாடல். பக்திப் பாடல்தான்; ஆனால் எந்த ஒரு கடவுளையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. பாடல் வெளிந்தவந்த சமயத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சேவை 2-ல் மிகவும் பிரபலமாக இருந்தது. இசையமைப்பாள்ர் எல். வைத்யநாதனின் முதல் படம் இது. இவர் உலகப் புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர்களான எல். சுப்ரமண்யம், எல். சங்கரின் மூத்த சகோதரர். இந்தப் படம் வெளிவருவதற்க்கு முன்னால் எல்.வி இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷின் உதவியாளராக இருந்தார். (அதேசமயத்தில் இளையராஜாவும் அவருடைய உதவியாளர்). பின்னர் தூர்தஷனில் மிகப் பிரபலமாக் இருந்த மால்குடி டேஸ் தொடருக்கு இசைமைத்தார். மறுபக்கம், (இந்திரா பார்த்தசாரதியின் உச்சிவெயில் நாவலின் மறு ஆக்கம்), ஒருத்தி (கி. ராஜநாரயணின் நாவலின் மறு ஆக்கம்), சந்தியாராகம் (பாலுமகேந்திரா), கவிதை பாட நேரமில்லை (யூகி. சேது) போன்ற தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்தார். இவர் இசையில் வெளிவந்த தில்லாடனம் (தெலுகு), தபரன கதே (கன்னடம்) இரண்டு படங்களும் தேசிய விருது பெற்றவை. எல்லாவற்றுக்கும் மேலாக கமலஹாசன் நடிப்பில் வெளியான மௌனப் படமாக புஷ்பகவிமானம் படத்தில் இவருடைய பின்னனி இசை மிகவும் அருமையாக இருக்கும்.

பாடல்: அருள்வடிவே
படம்: வாழ்த்துகள் (1978)
பாடியவர்: கே.ஜே. யேசுதாஸ்
இசை: எல். வைத்யநாதன்
பாடலாசிரியர்: தெள்ளூர் தர்மராஜன்