சமீபத்தில் படிக்க நேர்ந்த இந்த தெகல்கா கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. நம் சமூகத்தில் நாம் எதையும் வெளிப்படையாகப் பேசி விவாதிப்பதில்லை. எனவே இதை எப்படிக் கையாளப் போகிறோம் எனப் பிரமிப்பாக இருக்கிறது.

Sex, Lies & Homework – Tehelka.

Mini’s parents still don’t know how to deal with what they found out. Mini is a dainty, extremely pretty 14-year-old. When she was 12, her first boyfriend and she were both eager to claim BTDT (Been There, Done That) about oral sex. One evening at home alone, they tried it out, anticipating a definite move up the social ladder. Sure enough, the next day at school her friends congratulated her even while making faces at the slight grossness in ‘going down’ on a boy.

Unfortunately for Mini, her parents found out through the grapevine. The horrified couple sent her to a psychologist to find out ‘what was wrong with her’. She’s been in therapy for two years. Mini has no social life, no cellphone and a crushing weekly reminder in the psychologist’s office of that impulsive evening. Today, while Mini opens up with some encouragement she remains silent in the presence of most adults, particularly her parents. The shaming she received from her parents and the now long-lost friends two years ago has left its mark. It does not help that her erstwhile boyfriend did not even receive a rap on the knuckles from his parents.

எனக்கு இந்தக் கட்டுரையில் வரும் வயதில் இரு மகன்கள் இருக்கிறார்கள்.  இயன்றைவரை வெளிப்படையாக அவர்களுடன் விவாதிக்கிறேன். நேரடியாக அவர்கள் கண்களைப் பார்த்துச் சொல்லும் பதில்கள் நாளதுவரை அவர்களுக்கு என்ன தெரியும் என்பது எனக்குத் தெரியும் என்றே நம்பவைக்கிறது.  குழந்தைகளுக்கு மறைத்து வைக்க ஒன்றுமில்லை என்பதே என் எண்ணம். விஷயத்தை அவர்களுக்கு எப்படித் தருகிறோம் என்பதுதான் முக்கியம்.

மறுபுறத்தில் இங்கிருக்கும் என் நட்புக் குடும்பங்களில் பல இந்த விஷயத்தை முறையாகக் கையாளவில்லை என்றே தோன்றுகிறது. மேலை நாடுகளில் வளரும் இரண்டாம் தலைமுறை பல விஷயங்களில் அவர்களது பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருக்கிறது.  இந்தத் தெகல்கா கட்டுரையை இங்கிருக்கும் சக பெற்றோர் வாசிக்க நேர்ந்தால் அதிர்ச்சியடைவார்கள் என்பது நிச்சயம். அவர்களுக்கு இந்தியாவைப் பற்றி வேறுவிதமான பிம்பம் இருக்கிறது. சிலர் தங்கள் பெண்களுக்கு இந்தியாவில் வளர்ந்த கணவனும், பையன்களுக்கு அங்கிருந்து குனிந்த தலையுடன் தரையைப் பார்த்து நடக்கும் பெண்ணும் வேண்டுமென நினைக்கிறார்கள்.