• Archive for May, 2010

    உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது

    by  • May 26, 2010 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID   சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். 

    Read more →

    அஞ்சலி – மார்ட்டின் கார்ட்னர்

    by  • May 25, 2010 • அறிவியல்/நுட்பம் • 2 Comments

    புகழ்பெற்ற கணிதவியலாளர், வெகுஜன அறிவியல் எழுத்தாளர் மார்ட்டின் கார்ட்னர் (Martin Gardner) சென்ற சனிக்கிழமை, 22 மே 2010 அன்று காலமானார்.  கார்ட்னர் கிட்டத்தட்ட எழுபது புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  எண்ணிக்கை கடந்து அவர் புத்தகங்கள் பல காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கின்றன.  அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதும்பொழுது காலத்தால் அழியாமல் அவை நிலைத்திருப்பது அசாத்தியமானதும், ஒரு வகையில் வருந்தத்தக்கதுமாகும். வெகுவாகத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் அறிவியலில் நேற்றைய சாதனைகள் இன்றைய சாதாரணங்கள், நாளை அவை முற்றிலுமாக மாறிப்போயிருக்கும்.  [...]

    Read more →

    லேசருக்கு ஐம்பது வயது -2

    by  • May 16, 2010 • அறிவியல்/நுட்பம் • 3 Comments

    இன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள். இதையொட்டி லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது இரண்டாம் பகுதி. [Audio clip: view full post to listen]

    Read more →

    லேசருக்கு ஐம்பது வயது – 1

    by  • May 16, 2010 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள்.  இதையொட்டி  லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது பகுதி ஒன்று. [Audio clip: view full post to listen]

    Read more →