ஒரு வழியாக கனடாவின் கவனம் இலங்கை அவலங்களின்மீது திரும்பத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை. கடந்த அக்டோபர் மத்தியில் கனடாவில் தேர்தல் நடந்தது.  சிறுபான்மை கன்ஸர்வேட்டிவ் ஆட்சி சற்றே பலங்கூடிய சிறுபான்மையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதே சமயத்தில் உலகெங்கும் சந்தைகள் சரியத் தொடங்க சிக்கனத்தை முன்வைக்கிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த அரசு மானியத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார்கள். உடனடியாக மற்ற எதிர்க்கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்றன.  இவை அனைத்தும் இடது சார்பு கொண்டவை, கனடா பொதுவில் இடது சார்பு கொண்ட, நலம்நாடு(ம்) மக்களாட்சிதான் (left-leaning, welfare democratic.) உடனடியாக பாரளுமன்றத்தை உறைநிலையில் பிரதமர் மூடிவைக்க, மீண்டும் கடந்த வாரம்தான் உயிர்ப்பெற்று எழுந்திருக்கிறது. முதன்மை எதிர்க்கட்சியான லிபரல்களின் முழுப்பிடியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ற வரவு-செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அரசை (தற்காலிகமாக) காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள் கன்சர்வேட்டிவினர்.  இதெல்லாம் நடந்து இன்னும் ஒருவாரம்கூட ஆகவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று எல்லோரும் வரைமுறையில்லாமல் ஆட்சிப் போட்டியில் முழ்கிக் கிடந்தததால் வேறெந்த விஷயமும் இங்கே அதிகம் பேசப்படவில்லை (ஒபாமா ஒரு விதிவிலக்கு).  இந்தியாவிற்கு வெளியே ஈழத்தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடு கனடா. ஈழத்தமிழர்களுக்கு வலுவான நாடு ஒன்றின் ஆதரவு என்றால் அது கனடாவாகத்தான் இருக்கும். கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனேடிய ஊடகங்களில் இலங்கையின் அவலங்களைப் பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கின்றன.  இன்றைய தலையங்கத்தில் டொராண்டோ ஸ்டார்

Canada’s large Tamil community has watched in growing alarm while family and friends are “caught up in the shelling and crossfire as the theatre of war shrinks on a daily basis,” as Liberal foreign affairs critic Bob Rae put it this week.

Prime Minister Stephen Harper’s government has voiced “deep concern” over the humanitarian crisis, and urged both sides to spare civilians. But Rae wants Ottawa to press for a United Nations envoy to monitor human rights, and to step up aid. Harper should heed his call. Rae knows Sri Lanka well. He was a constitutional adviser there.

தற்பொழுதைய கன்ஸர்வேட்டிவ்கள் தமிழர் நலனை நாடுபவர்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்தால் அவர்கள் இதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூடக் கவனிக்க மாட்டார்கள். ஆனால் லிபரல்களின் இடுக்கிப்பிடியில் இருப்பதாலும், சிறுபான்மை அரசுக்கு ஒவ்வொரு துளி ஆதரவுக்கும் இருக்கும் முக்கியத்துவத்தை கன்ஸர்வேட்டிவ்கள் உணரத் தொடங்கியிருப்பதாலும் தமிழர்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

(தலையங்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாப் ரே (Bob Rae) லிபரல்கட்சியில் இரண்டாவது தலைவராக இருக்கிறார். இவருக்குப் பிரதமராகும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறார். ரே இலங்கை விவகாரங்களைக் கூர்ந்து அவதானிப்பவர். இலங்கையில் பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் மைய அரசு வேண்டும் என்ற கொள்கையுடையவர். ஒரு கட்டத்தில் பெடரலிஸத்தின் அடிப்படையிலான புதிய அரசாட்சிக் கட்டமைப்பை இலங்கைக்காக இயற்ற முற்பட்டிருந்தார்.  கனடாவிலிருக்கு உயர்மட்டத் தலைவர்களுக்குள்ளே ஈழத்தமிழர்களுக்காக அதிகம் புரிந்துணர்வு கொண்டவர் இவராகத்தானிருக்க முடியும்).

அதே தலையங்கத்தில் ஸ்டார் தொடர்ந்து;

Rae also called on Harper to lobby the Sri Lankan government to “recognize the civil and human rights of the Tamil community” by introducing much needed political and constitutional reforms.

Canada is well-positioned to do this because Ottawa has designated Prabhakaran and his forces as terrorists. This stance gives Harper leverage to press for generous, provincial-style autonomy for Tamils in that part of the country where they comprise a majority.

While Sri Lanka’s population of 21 million is three-quarters Sinhalese, the Tamils and other minorities number in the millions. If Sri Lanka is to enjoy real peace, the Tamils must feel they have a stake in the nation’s success, instead of being marginalized. Otherwise, the insurgents will regroup over time and launch a new terror campaign.

As India’s foreign minister Pranab Mukherjee reminded Rajapaksa this week, “military victories offer a political opportunity to restore normalcy” in regions that have been traumatized for decades.

When the fighting ends, Rajapaksa promises to devolve power to the Tamil regions, with political clout and rights they now lack. He calls it his “Four D” approach: demilitarization, democratization, development and devolution. But past leaders have made similar pledges that turned out to be hollow. This time, change must happen.

இது நடந்துவரும் இலங்கை அராஜகப் போருக்கு எதிராக பெரும் ஊடகமொன்று சமீபகாலத்தில் எழுதியவற்றுள் முக்கியமானது.  கடந்த இரண்டு மாதங்களாக ஊடகங்கள் நடந்து வரும் சண்டையை வெறுமனே விவரித்தே வந்திருக்கின்றன.  இப்பொழுதுதான் முதன் முறையாக ஊடகத்தின் கவனம் பாயத் தொடங்கியிருக்கிறது.  தமிழர்கள் இந்தச் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு எல்லா கதவுகளையும் உரக்கத் தட்டவேண்டும்.