கடந்த சில தினங்களாக வலுவாக எழும்பிவரும் தமிழர்கள் குரல் ஈழத்தின் சமீபத்திய அவலத்தை நோக்கி கனேடியர்களின் கவனத்தைத் திருப்பி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நேற்று டொராண்டோ நடுநகர் மையத்தின் யூனியன் இரயில்நிலைய வாசலலில் தொடங்கி யுனிவர்ஸிட்டி அவென்யு, டொராண்டோவின் அதிமுக்கிய யங் வீதிகளில் 45,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்து கனேடிய அரசை ஈழத்தின்பால் கவனத்தைத் திருப்பப் போராட்டம் நடத்தினார்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் இந்தத் தெருக்களும், இரயில் நிலையமும் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடியவை; அலுவல் முடிந்து வீடு திரும்புபவர்கள், அண்டை கிராமங்களுக்கு வாரயிறுதி விடுமுறைக்குச் செல்லும் மாணவர்கள்,ஊழியர்கள், நடுநகரில் கேளிக்கைக்காக வெள்ளி இரவு கூடுபவர்கள் என்று சாதாரணமாகவே கூட்டம் நிறைந்து காணப்படும் பகுதி இது. மிக முக்கியமான நேரத்தில் போராட்டம் நடத்தியது நல்ல உத்தி.