பல நாட்களுக்கு முன் எனக்குப் பிடித்த தாள வாத்தியக் கலைஞர்களைப் பற்றி எழுதுவதாகத் தொடங்கி ரஷ் குழுவின் நீல் பீர்ட் ஒருவருடன் நின்று போய்விட்டது.  கொஞ்சம் விபரமான பதிவுகளை எழுத தற்பொழுது அதிகம் நேரம் கிடைப்பதில்லை. எனவே, இனி நேரங்கிடைக்கும் பொழுது சிறிய பதிவுகளானாலும் தொடர்ந்து எழுத உத்தேசம். வரும் கருத்துகள்/உரையாடல்களைப் பொருத்து இந்தத் தொடர் விரிவடையலாம். இப்போதைக்கு சுருக்கமாக.

டெனிஸ் சேம்பர்ஸ் (Dennis Chambers) முதல் தர ஜாஸ்-ப்யூஷன் கலைஞர். முறையான பயிற்சியில்லாதவர். நான்கு வயதிலேயே தன்னிச்சையாக வாசிக்கத் தொடங்கியவர்.   ஜாஸ் ட்ரம்மர்களில் பலர் பழைய பிடி (traditional grip) என்று சொல்லப்படக்கூடிய வலது கை கீழ் நோக்கியும், இடது கை மேல்நோக்கியும் இருக்கும் பிடிப்பில்தான் வாசிப்பார்கள். ராக், பாப் குழுக்களில் வாசிப்பவர்கள் நேர் பிடி (Matched grip) முறையில் இரண்டு கைகளும் கீழ்நோக்கி இருக்கப்பிடிப்பார்கள்.  இப்படி நேர் பிடியில் ஸ்நேர் ட்ரம்மில் மிக விரைவாக வாசிப்பவர்கள் குறைவு. இங்கே டெனிஸ் சேம்பர்ஸ் நேர் பிடியில் விளாசுவதைப் பார்க்கலாம்.  இந்த தனி ஆவர்த்தனம் ஜான் மெக்ளாக்ளின் மற்றும் ஃப்ரீ ஸ்ப்ரிட்ஸ் (John McLaughlin and Free Spirits) குழுவில் சேம்பர்ஸ் வாசித்தது.

[youtube]http://www.youtube.com/watch?v=1uDZBIBfOeY[/youtube]