டொராண்டோ முக்கிய நெடுஞ்சாலையை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு
இன்று மாலை டொரண்டோ நகரின் அதிமுக்கியமான கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். மாலை ஏழு மணியளவில் நகர மையத்திலிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் குழந்தைகள் முதியோர்களுடன் ஆதரவாளர்கள் நுழைய போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் பெரும் அமளி நிலவுகிறது. சற்றுமுன் நகரின் போலீஸ் கமிஷனர் பில் ப்ளேயர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகித்து அவர்களை அகற்றத் தயாராகிவருவதாகச் சொல்கிறார்.
நான் கேள்விப்படும்வரை நகரில் பொதுமக்கள் பலரும் இதனால் அதிக எரிச்சலடைந்திருப்பதாகத்தான் தெரிகிறது. இது திட்டமிடாமல் தன்னிகழ்வாக நடத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தக்க தலைமை ஏதுமில்லாமல் போராட்டம் திசை திரும்பியிருக்கிறது; வானொலி தொலைகாட்சிகளில் பலரும் இதுபோன்ற சட்ட ஒழுங்கின்மை நிகழ்ந்ததில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
என் கவலை கனேடிய பொதுமக்களின் கருத்து தமிழர்களுக்கு எதிராகத் திரும்பிவிடக்கூடாதே என்பது. விரைவில் அவர்கள் அங்கிருந்து அகன்றால் நல்லது.
Popularity: 49% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.












உணர்ச்சிவசப்படுதலே அரசியல்ரீதியாக இந்தியாவில் பலரின் ஆதரவை பெற முடியாமல் போனதற்கு காரணமென்று நினைக்கிறேன், அந்த தவறு மறுபடியும் நிகழாமல் இருக்க வேண்டுகிறேன்..