நிழற்படப் போட்டி பரிசு

2009_SOOS_ValentineShow

Photos entered for 2009 Valentine Day Orchid show of Southern Ontario Orchid Society

4 Photos

 

கடந்த வார இறுதியில் டொராண்டோ தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர தெற்கு ஓண்டாரியோ ஆர்கிட் சொஸைட்டியின் வாலண்டைன் தின கண்காட்சியில் என்னுடைய இரண்டு நிழற்படங்களையும் இரண்டு டிஜிட்டல் ஓவியங்களையும் (புகைப்படமாக எடுத்து மென்கலன் உதவிகொண்டு ஓவியங்களாக மாற்றப்பட்டவை) போட்டிக்கு வைத்திருந்தேன். ஒரு போட்டியாளர் தொகுதியில் இரண்டு படைப்புகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டார். நான் வைத்திருந்த படங்களை மேலுள்ள குறும்படத்தில் சொடுக்கிப் பார்க்கலாம். எல்லா படைப்புகளையும் 12′ X 18′ அளவில் வைத்திருதேன். இங்கே சற்று குறைந்த தரத்தில் போட்டிருக்கிறேன்.

புகைப்படப் பிரிவில் (Photographs – Botancial Portraiture) இரண்டாவது பரிசும், டிஜிட்டல் ஓவியப் பிரிவில் முதல் பரிசும் கிடைத்தது. மஞ்சள் நிற Paphiopedilum (popularly known as Lady Slipper Orchid) எனக்கு மிகவும் திருப்தி தந்த படம். இதில் ஒவ்வொரு பகுதியும் மிகத் துல்லியமாக வந்திருக்கிறது, கூர்ந்து கவனித்தல் மெல்லிய பஞ்சுபோன்ற படலத்தை பூவின் மையத்தில் காணமுடியும். இந்தப் பிரிவில் முதல் பரிசு பெற்றவர் ஒரு தொழிற்முறை படக்காரர்.

போட்டுத்தான் பார்ப்போமே என்ற அசட்டுத் தைரியத்தில் டிஜிட்டல் ஆர்ட் பிரிவுக்காக (Photographs – Artistic (manipulated)) இன்னொரு லேடி ஸ்லிப்பார் ஆர்க்கிட் படத்தை எடுத்து போட்டோஷாப்பில் சில ஜிகினா வேலைகளைச் செய்தேன் (மொத்தம் அரைமணி நேரம் ஆனது). எதேச்சையாக வால் மார்ட்டில் குறைந்த செலவில் இந்தப் படத்திற்கு அற்புதமாகப் பொருந்தும் ஒரு அரக்கு வண்ணச் சட்டகம் கிடைத்தது, அதில் மாட்டிய பிறகு எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முதல் பரிசு கிடைத்தது ஆச்சரியம்தான்.

போட்டியின் முழு முடிவுகளையும் அவர்கள் தளத்தில் பார்க்கலாம்.

சென்ற வருடம் வேறொரு போட்டியில் (ராயல் பொட்டானிக்கல் கார்டன் ஆர்க்கிட் சொஸைட்டியில் முதலாவது இடத்தையும் மூன்றாவது இடத்தையும் பெற முடிந்தது). இந்த வருடம் அதே போட்டி இன்னும் இரண்டு வாரங்களில் வருகிறது, ஆனால் நான் அநேகமாக ஊரில் இருக்கமாட்டேன்; ஒரு மாநாட்டிற்காக டென்வர் போகவேண்டியிருக்கிறது.

Popularity: 33% [?]

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

வெங்கட்,
பரிசு பெற்ற படங்கள் அருமை. முதல் பரிசு பெற்ற படத்தின் கற்பனை அட்டகாசம்!

வெங்கட்,
பரிசு பெற்ற படங்கள் அருமை. முதல் பரிசு பெற்ற படத்தின் டிஜிட்டல் கற்பனை அட்டகாசம்!

ராஜா கூட போய் ரஹ்மானை வாழ்த்திட்டு வந்துட்டாரு… உங்க விமர்சனம் வராது போல இருக்கே!!!. இங்கே இணையதளதில் நடக்கும் கோஷ்டி சண்டைகள் அந்த விழா மேடை வரை போய் விட்டது…. இப்ப நீங்க என்ன சொல்றீங்க…..

Leave a comment

(required)

(required)