Archive for February, 2009

நிழற்படப் போட்டி பரிசு

கடந்த வார இறுதியில் டொராண்டோ தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர தெற்கு ஓண்டாரியோ ஆர்கிட் சொஸைட்டியின் வாலண்டைன் தின கண்காட்சியில் என்னுடைய இரண்டு நிழற்படங்களையும் இரண்டு டிஜிட்டல் ஓவியங்களையும் (புகைப்படமாக எடுத்து மென்கலன் உதவிகொண்டு ஓவியங்களாக மாற்றப்பட்டவை) போட்டிக்கு வைத்திருந்தேன். ஒரு போட்டியாளர் தொகுதியில் இரண்டு படைப்புகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டார். நான் வைத்திருந்த படங்களை மேலுள்ள குறும்படத்தில் சொடுக்கிப் பார்க்கலாம். எல்லா படைப்புகளையும் 12′ X 18′ அளவில் வைத்திருதேன். இங்கே சற்று குறைந்த [...]


IPL – இன்றைய தேவைகள்

இன்னும் சில மணி நேரங்களில் ஐபிஎல்-லின் இரண்டாவது வருட ஏலம் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கணிப்பில் எந்த அணி யாரைக் குறிவைக்கும் என்று எழுதுகிறேன். இதில் எவ்வளவு மெய்ப்படுகிறது என்று பார்க்கலாம். சென்ற வருடத்தில் கடைசி இடம் பெற்ற அணியிலிருந்து வெற்றி பெற்ற ராஜஸ்தானுக்கு வரலாம்.


இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே

சில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்;
The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands [...]