• வெண்பாம் வெள்ளி

    by  • June 20, 2009 • நகைச்சுவை • 0 Comments

    வெட்டியான ஒரு வெள்ளிக்கிழமை இரவு.

    இங்கிருந்து துவங்குகிறது

    @donion வெங்கட் நீங்களும் இருக்கிறீர்களா? வந்து ஒரு கை கொடுப்பது?11:25 AM Jun 19th from TwitterFox in reply to donion

    பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
    வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
    காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
    ஆப்புஅடிக்கிறதே வேலை
    - http://twitter.com/donion/status/2247312202

    பதிலுக்கு பா.ரா.

    வேலை தடுக்கும் வேறுபணி வந்துநிற்கும்
    மாலைப்பனி மயக்கத்தி லாழ்த்தும் – ஜாலியென
    பாம்போட முடிவெடுத்துப் பாக்களத்தில் குதித்துவிடு
    பாம்பாய்நான் பின்வருவேன் பார்
    - http://twitter.com/writerpara/status/2247179932

    அய்யா சொல்றீங்க அப்பால இன்னுமென்ன
    கையில் அடிச்சிருந்த ஆப்பைப் புடுங்கிட்டு
    எளுதுறேன் கூடவே கொத்தும் பெனாத்தலும்
    நளுவாம சொக்கனும் வா
    - http://twitter.com/donion/status/2247683876

    இடையில் பாஸ்டன் பாலஜி வெண்பாம் சமூகத்திற்கு விடுத்த சவால்

    @elavasam @penathal நடால், பதால், தபால் என்றெல்லாம் இணைத்து வெண்பாம் போட முடியுமா :) எத்தனை டால் அதிகம் வருதோ அவர் வின்னர் ;) #Venbaa2:08 PM Jun 19th from twhirl in reply to elavasam

    நடால் தபால் இவைகூட பதால்
    படால் விடாய் கிடாய் – அடுக்கியே
    அடாசு பாடலாம் ஆனால் பயனேது
    கடாசு கச்சடா இதை
    - http://twitter.com/donion/status/2247483335

    கரண்டி பிடிப்பதில் கஷ்டமில்லை நண்பா
    முரண்டு பிடிப்பதில்லை நம்சமையல் – கரண்டடுப்பில்
    திரண்டு வரும்பாலை இறக்காது விட்டு
    சுரண்டித் தேய்த்தல் சுமை
    - http://twitter.com/donion/status/2247822349

    மாவா என்றே மடிச்சுக் கொடுத்தார்
    காமா சோமா எனக்குந்த ஆவல
    டக்கர் அடித்து தலைசுற்றி எல்லாம்
    மக்கர் ஆவுதே மாமு
    - http://twitter.com/donion/status/2248162269

    வெள்ளி விளக்கு வைத்தால் தவறாது
    சொல்லி வைத்தாற்போல் சோப்பு – டிவியில்
    கள்ளி உனக்கேதும் காதில் விழுமோடி
    கிள்ளி இழுக்கனுமோ சொல்
    - http://twitter.com/donion/status/2248046596

    சிந்தியில் வெண்பா கிடையாது சத்தியா
    பந்தியில் பால்கோவா போட்டாலும் மார்வாடி
    முந்தி விலைகேட்பார் காண்
    - http://twitter.com/donion/status/2247893420

    நடுவில் சத்தியா

    ஆகா ஆட்டமது வாகாக் களைகட்டுதே
    மாகா ளியவள் அருளினிலே பாகாய்
    வருகுதே தமிழ்ப் பா.

    http://twitter.com/msathia/status/2248108711

    மாகாளி மாதா கெடாவெட்டு பிடாரி
    வாகாக குந்தும் அய்யனார் – நீலியோடு
    சூலி மாரியாயி சப்ஜாடா எல்லாரும்
    காலி வெண்பாம் கேட்டு
    - http://twitter.com/donion/status/2248368879

    அதிவெட்டியான இன்னொரு ஒரு சனிக்கிழமை இரவில், பொன்னான கவியரங்கை உலகம் மறந்துவிடப்போகிறதே என்ற கவலையில் ட்விட்டரிலிருந்து இறக்கி வைத்தது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *