வெட்டியான ஒரு வெள்ளிக்கிழமை இரவு.

இங்கிருந்து துவங்குகிறது

@donion வெங்கட் நீங்களும் இருக்கிறீர்களா? வந்து ஒரு கை கொடுப்பது?11:25 AM Jun 19th from TwitterFox in reply to donion

பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
ஆப்புஅடிக்கிறதே வேலை
– http://twitter.com/donion/status/2247312202

பதிலுக்கு பா.ரா.

வேலை தடுக்கும் வேறுபணி வந்துநிற்கும்
மாலைப்பனி மயக்கத்தி லாழ்த்தும் – ஜாலியென
பாம்போட முடிவெடுத்துப் பாக்களத்தில் குதித்துவிடு
பாம்பாய்நான் பின்வருவேன் பார்
– http://twitter.com/writerpara/status/2247179932

அய்யா சொல்றீங்க அப்பால இன்னுமென்ன
கையில் அடிச்சிருந்த ஆப்பைப் புடுங்கிட்டு
எளுதுறேன் கூடவே கொத்தும் பெனாத்தலும்
நளுவாம சொக்கனும் வா
– http://twitter.com/donion/status/2247683876

இடையில் பாஸ்டன் பாலஜி வெண்பாம் சமூகத்திற்கு விடுத்த சவால்

@elavasam @penathal நடால், பதால், தபால் என்றெல்லாம் இணைத்து வெண்பாம் போட முடியுமா 🙂 எத்தனை டால் அதிகம் வருதோ அவர் வின்னர் 😉 #Venbaa2:08 PM Jun 19th from twhirl in reply to elavasam

நடால் தபால் இவைகூட பதால்
படால் விடாய் கிடாய் – அடுக்கியே
அடாசு பாடலாம் ஆனால் பயனேது
கடாசு கச்சடா இதை
– http://twitter.com/donion/status/2247483335

கரண்டி பிடிப்பதில் கஷ்டமில்லை நண்பா
முரண்டு பிடிப்பதில்லை நம்சமையல் – கரண்டடுப்பில்
திரண்டு வரும்பாலை இறக்காது விட்டு
சுரண்டித் தேய்த்தல் சுமை
– http://twitter.com/donion/status/2247822349

மாவா என்றே மடிச்சுக் கொடுத்தார்
காமா சோமா எனக்குந்த ஆவல
டக்கர் அடித்து தலைசுற்றி எல்லாம்
மக்கர் ஆவுதே மாமு
– http://twitter.com/donion/status/2248162269

வெள்ளி விளக்கு வைத்தால் தவறாது
சொல்லி வைத்தாற்போல் சோப்பு – டிவியில்
கள்ளி உனக்கேதும் காதில் விழுமோடி
கிள்ளி இழுக்கனுமோ சொல்
– http://twitter.com/donion/status/2248046596

சிந்தியில் வெண்பா கிடையாது சத்தியா
பந்தியில் பால்கோவா போட்டாலும் மார்வாடி
முந்தி விலைகேட்பார் காண்
– http://twitter.com/donion/status/2247893420

நடுவில் சத்தியா

ஆகா ஆட்டமது வாகாக் களைகட்டுதே
மாகா ளியவள் அருளினிலே பாகாய்
வருகுதே தமிழ்ப் பா.
http://twitter.com/msathia/status/2248108711

மாகாளி மாதா கெடாவெட்டு பிடாரி
வாகாக குந்தும் அய்யனார் – நீலியோடு
சூலி மாரியாயி சப்ஜாடா எல்லாரும்
காலி வெண்பாம் கேட்டு
– http://twitter.com/donion/status/2248368879

அதிவெட்டியான இன்னொரு ஒரு சனிக்கிழமை இரவில், பொன்னான கவியரங்கை உலகம் மறந்துவிடப்போகிறதே என்ற கவலையில் ட்விட்டரிலிருந்து இறக்கி வைத்தது.